கிறிஸ்துவின் சாயலே இரட்சிப்பின் பூரணம்..ஆராதனை தியானமும் சபைக்கு செய்தியும்
கிறிஸ்துவின் சாயலே இரட்சிப்பின் பூரணம்..
ஷாலோம் ஸ்டூவர்ட் சிந்தைகள் நிதானங்கள்
கரு வசனம்..
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.
ரோமர் 8.29
பாடல்..253. கீ கீ
தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன்-நானும்
சரணங்கள்
1. அந்த நாளும் நெருங்கிடுதே
அதிவிரைவில் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான்
களைந்தே-தம்
விண்ணவர் சாயல் அடைவேன்.
- தேவ
2. பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலையல்லாத பொன்வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன்.
- தேவ
3. சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார்.
- தேவ
4. ஆவியாம் அச்சாரமீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே.
- தேவ
5. காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவ யாத்திரை ஓடி முடித்து
ஜீவக் கிரீடம் பெற்றிடுவேன்
- தேவ
6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்ப வரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும்
எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே.
- தேவ
கூடுதல் வசனம்..
மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.
1 கொரிந்தியர் 15.49
ஆராதனை செய்தி..
பாவம் பிரவேசியாத யுகங்களில்... ஆதாம்.. ஏவாள்..
தேவனுடைய சாயல்..
தேவனுடைய ரூபம்..
God’s image..
God’s likeness..
சாயல் என்பது வெளித்தோற்றம்... Outward face or image..
ரூபம் என்பது தேவனுடைய குணாதிசயம்.. Inward attributes or characters..
தேவனுடைய குணாதிசயங்கள் இரண்டு நிலைகளில் சிந்திக்கலாம்..
1. தேவன் தன்னகத்தே கொண்டிருக்கும் குணாதிசயங்கள்.. சர்வ ஞானி, சர்வ வல்லமை, சர்வ வியாபி, சர்வ நீதி, சர்வ பாவ மன்னிப்பு, தம்மில் தாமே ஜீவன்.. இன்னும் பல
2. தேவன் தன் பிள்ளைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் குணாதிசயங்கள்..அன்பு, பரிசுத்தம், நீதி இன்னும் பல..
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
ஆதியாகமம் 1:26
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:27
பாவம் பிரவேசிக்கும் சமயத்தில் தேவ சாயல் மாற்றப்படுகிறது..
கண்கள் திறக்கப்படுகிறது.. தங்களுடைய சாயல்.. நிர்வாணம்.. என்று காணப்படுகிறது.
அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.
ஆதியாகமம் 3:6
அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
ஆதியாகமம் 3:7
தொடர்ந்து பிறக்கும் வம்சம் மனுஷ சாயலில் மனுஷ ரூபத்தில் பிறக்கிறது..
ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.
ஆதியாகமம் 5:1
அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.
ஆதியாகமம் 5:2
ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் ( மனுஷ ) சாயலாகத் ( மனுஷ ) தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.
ஆதியாகமம் 5:3
தேவன் பாவ மனுக்குலத்தின் சாயலை ரூபத்தை மீண்டும் தேவ சாயலாக தேவ ரூபமாகப மாற்ற இரட்சிப்பின் திட்டத்தை பூவுலகில் இவ்வாறு நிறைவேற்றினார்..
தேவனுடைய ரூபம் எப்படி மாறுகிறது? கவனியுங்கள்..
அடிமையின் ரூபம்...
மனுஷர் சாயல்...
பாவ மாம்சத்தின் சாயல்..
வசன ஆதாரம்..
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
பிலிப்பியர் 2:6
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
பிலிப்பியர் 2:7
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
ரோமர் 8:3
சிலுவை மரணத்தில் அவருடைய சாயல் பற்றிய ஏசாயா தீர்க்கதரிசனம்..
மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.
ஏசாயா 52:14
இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார், அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை, அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
ஏசாயா 53:2
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார், அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம், அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார், அவரை எண்ணாமற்போனோம்.
ஏசாயா 53:3
=========================================
சபைக்கு செய்தி..
கரு வசனம்..
மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே. வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.
1 கொரிந்தியர் 15:48
மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.
1 கொரிந்தியர் 15:49
தேவ சாயலை ஒரே நாளில் பெற்றுக்கொள்ள முடியுமா?
தேவ சாயல் ஆக மாறி என்கிற பாடலை தொடர்ந்து கேட்டு தியானியுங்கள்..
தேவ சாயலாக மாற அனுதினம் செய்ய வேண்டிய பயிற்சிகள்..
1. தேவ சாயலில் சிருஸ்டிக்கப்பட்ட நாம் மீண்டும் தேவ சாயலாக மாறுவோம் என்கிற சிந்தை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 3:2
அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்
1 யோவான் 3:3
=========================================
2. அநேக அனுதின அடிமைத்தனம் என்கிற பழக்க வழக்கங்கள் ஒழிக்க வேண்டும்..அநேக பாவங்களில் இருந்து விடுதலை வேண்டும்..
மேலும் ஓழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடுபோட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.
2 கொரிந்தியர் 3:13
அவர்களுடைய மனது கடினப்பட்டது. இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில் அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது. அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.
2 கொரிந்தியர் 3:14
மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
2 கொரிந்தியர் 3:15
அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம்.
2 கொரிந்தியர் 3:16
கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
2 கொரிந்தியர் 3:17
=========================================
3. விசுவாசிகள் பாடுகள் எதிர் கொள்ளும் சந்தர்ப்பங்களில் நாம் தேவ சாயலாக மாறும் நிலை வழியாக கடந்து போகிறோம் என்கிற நம்பிக்கை வேண்டும்..
நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.
ரோமர் 8:17
ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
ரோமர் 8:18
=========================================
4. நம்மை நாமே அனுதினம் ஆராய்ந்து பார்த்து நம்மை அவருடைய சாயலாக மாற்ற பயிற்சிக்க வேண்டும்..
சுய பரிசோதனை செய்வது மிக மிக அவசியம்..
என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்.
யாக்கோபு 1:23
அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.
யாக்கோபு 1:24
சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.
யாக்கோபு 1:25
தன்னை தான் சோதித்தல் அவசியம்..
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
1 கொரிந்தியர் 11.28
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
1 கொரிந்தியர் 11.3
=========================================
5. புதிய மனுஷனை அனுதினம் தரித்து கொள்ள வேண்டும்..
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
எபேசியர் 4.24
=========================================
வானவரின் சாயல் என்றால் என்ன?
IMAGE OF HEAVENLY
And as we have borne the image of the earthy, we shall also bear the image of the heavenly.
(1 Corinthians 15.49)
The two Adams and their bodies.
And so it is written, “The first man Adam became a living being.”
The last Adam became a life-giving spirit.
However, the spiritual is not first, but the natural, and afterward the spiritual.
The first man was of the earth, made of dust; the second Man is the Lord from heaven. As was the man of dust, so also are those who are made of dust; and as is the heavenly Man, so also are those who are heavenly.
And as we have borne the image of the man of dust, we shall also bear the image of the heavenly Man.
a. The first perfect man, Adam, gave us one kind of body.
b. The second perfect man, Jesus the last Adam, can give us another kind of body. He is a life-giving spirit.
c. We have all borne the image of the first Adam, and those who put their trust in the last Adam will also bear His resurrection image.
d. From the first Adam, we all are made of dust, but from the last Adam we can be made heavenly. For believers, the promise is sure: we shall also bear the image of the heavenly Man.
i. Philippians 3:21 repeats Paul’s theme: Who will transform our lowly body that it may be conformed to His glorious body, according to the working by which He is able even to subdue all things to Himself.
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
பிலிப்பியர் 3:21
e. Since we will bear the image of the heavenly Man, the best example we have of what a resurrection body will be like is to see what Jesus’ resurrection body was like.
வானவரின் சாயல் ரூபம் உள்ள சரீரம் எப்படி இருக்கும்?
நாம் இப்பொழுது இருக்கிற சரீரம் இயற்கை விதிகளுக்கு உட்பட்ட சரீரம்..
இனி பெறப்போகிற சரீரம் இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட சரீரம்..
ஆனால் சாப்பிடலாம்.. உணரலாம்..
The resurrection body of Jesus was material and could eat (Luke 24:39-43), yet it was not bound by the laws of nature (Luke 24:31, 24:36-37).
லூக்கா 24.31 -43 வாசித்து தியானியுங்கள்..
கிறிஸ்துவின் சாயலாக மாறும் நிகழ்வு..
மத்திய ஆகாயத்தில்..
வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு. வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே.
1 கொரிந்தியர் 15:40
சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே. மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
1 கொரிந்தியர் 15:41
மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.
1 கொரிந்தியர் 15:49
கடைசியாக சகோதரரே..
நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
2 கொரிந்தியர் 3:18
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
1 கொரிந்தியர் 13:10
நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன். நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
1 கொரிந்தியர் 13:11
இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.
1 கொரிந்தியர் 13:12
இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது. இவைகளில் அன்பே பெரியது.
1 கொரிந்தியர் 13:13
GOD BLESS THE ASSEMBLY FAMILIES..
shalomjjj@gmail.com
Whatsapp 91 9965050301
Comments
Post a Comment