*என் ஆத்தும நேசர்* *MY BELOVED FOR MY SOUL..* காலைதோறும் கிருபை
*என் ஆத்தும நேசர்*
*MY BELOVED FOR MY SOUL..*
இந்த பாடலை கேளுங்கள்...
https://youtu.be/Obkvz0WGkF0?si=RWCRA78RfggUId3Q
என் ஆத்ம நேசர் அவர்
என் உள்ளம் கவர்ந்தவரே
அவர் அன்பை எண்ணி மகிழ்ந்திடுவேன்
அவர் பரிசுத்தத்தில் என்னை இணைத்திடுவார்
அவரே என் நாயகரே – 2
1. எந்தன் இரட்சிப்பின் நாட்களிலே
என்னை துரத்திட்ட பாவத்தினின்று
என்னை மீட்டெடுத்தார் நீதிமானாக்கினார்
அவர் பாதத்தில் ஒப்படைத்தேன்.
2. எந்தன் துக்கங்கள் நடுவினிலே
என்னை தூற்றிடும் மாந்தரினுள்
என்னை அணைத்திடுவார் மன்னிப்பருளிடுவார்
அவர் மார்பினில் பதித்திடுவார்.
3.எந்தன் மீட்பரின் வருகையிலே
அவர் அன்பின் கரங்களினுள்
என்னை பொதிந்திடுவார் கண்ணீர் துடைத்திடுவார்
அவர் மகிமையில் சேர்த்திடுவார்
*MORNING GRACE*
*என் ஆத்தும நேசர்*
*MY BELOVED FOR MY SOUL..*
*Verse for meditation..*
இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், *என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்,* என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.
மத்தேயு 12.18
Behold my servant, whom I have chosen; *my beloved, in whom my soul is well pleased* : I will put my spirit upon him, and He shall shew judgment to the Gentiles.
Matthew 12:18
1. *ஆத்துமா கெம்பீரித்து மகிழும்..*
நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
சங்கீதம் 71.23
2. *என் சிருஷ்டிப்பு ஆத்துமாவுக்கு தெரியும்* ..
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன், உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.
சங்கீதம் 139:14
3. *அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்* ..
ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,
நீதிமொழிகள் 2:10
4. *கர்த்தருடைய வார்த்தை உன் ஆத்துமாவுக்கு ஜீவன்* ..
என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக: மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள். அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.
நீதிமொழிகள் 3:21-22
5. *வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது* ..
வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது: தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.
நீதிமொழிகள் 13:19
6. *ஒழுக்கமுள்ள மகன் ஆத்துமாவுக்கு ஆறுதல்* ..
உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
நீதிமொழிகள் 29:17
7. *நல்ல வழி ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல்* ..
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
எரேமியா 6:16
8. *தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்* .
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
புலம்பல் 3:25
*கடைசியாக சகோதரரே..*
பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் *ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற* மாம்சஇச்சைகளை விட்டு விலகி,
1 பேதுரு 2.11
Shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301
Comments
Post a Comment