EXODUS TV* *அருளுரை துளிகள்* *இவர் யாரோ?*
கேளுங்கள்
https://youtu.be/6o86qnFFJms?si=0soWcULPktbVpbdD
*EXODUS TV*
*அருளுரை துளிகள்*
*இவர் யாரோ?*
அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
லூக்கா 8:25
**Destination is sure..**
அன்று சாயங்காலத்தில் அவர் அவர்களை நோக்கி, *அக்கரைக்குப் போவோம் வாருங்கள்* என்றார்.
மாற்கு 4:35
அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள், வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.
மாற்கு 4:36
அப்பொழுது *பலத்த* *சுழல்காற்று* உண்டாகி,படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.
மாற்கு 4:37
கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார், அவர்கள் அவரை எழுப்பி,போதகரே, நாங்கள்மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.
மாற்கு 4:38
அவர் எழுந்து, காற்றை அதட்டி,கடலைப்பார்த்து, இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
மாற்கு 4:39
அவர் அவர்களை நோக்கி, ஏன் இப்படிப் பயப்பிட்டீர்கள்?ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
மாற்கு 4:40
அவர்கள் மிகவும் பயந்து, *இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே* என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
மாற்கு 4:41
*விசுவாசத்தின் பரீட்சை..
சுழல் காற்று..*
*Test of faith is storm..*
அவர் எழுந்து, காற்றை அதட்டி,கடலைப்பார்த்து, இரையாதே, அமைதலாயிரு..
*தான் சிருஷ்டித்த சிருஸ்டிப்பிடம் பேசுகிறார்..*
ஒரு முறை ஒரு சகோதரன் வீட்டுக்கு போன போது அவர் வளர்க்கிற ஒரு நாய்.. நாய் என்று சொல்வதை விட ஒரு வன விலங்கு போல இருந்த அந்த நாயை கண்டு பயந்தேன்.. அப்பொழுது அவர் ஒரு பார்வை பார்த்தார்.. ஏதோ சைகை காட்டினார்.. அந்த நாய் கீழ்ப்படிந்தது எனக்கு ஆச்ச்யமாக இருந்தது..
அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, *அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,*
சங்கீதம் 148:8
ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், *அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது,* அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
சங்கீதம் 19:4
அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழுப்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, *காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து* புறப்படப்பண்ணுகிறார்.
சங்கீதம் 135:7
அப்பொழுது *கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று* சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.
எண்ணாகமம் 11:31
வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? *காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்?* தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?
நீதிமொழிகள் 30:4
*தென்றல்.. கடுங்காற்று..*
*தென்றல்* மெதுவாயடித்தபடியால், தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் பெயர்ந்து கிரேத்தாதீவுக்கு அருகாக ஓடினார்கள்.
அப்போஸ்தலர் 27:13
கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங் *கடுங்காற்று* அதில்மோதிற்று.
அப்போஸ்தலர் 27:14
கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப் போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டு போகப்பட்டோம்.
அப்போஸ்தலர் 27:15
**தான் ஆயத்தம் பண்ணின இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்.*
*
வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.
யாத்திராகமம் 23:20
அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு. அவரைக் கோபப்படுத்தாதே. உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை. என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.
யாத்திராகமம் 23:21
நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.
யாத்திராகமம் 23:22
என் தூதனானவர் உனக்கு முன்சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார். அவர்களை நான் அதம்பண்ணுவேன்.
யாத்திராகமம் 23:23
shalomjjj@gmail.com
whatsapp 91 9965050301
Comments
Post a Comment