BRETHREN LET US JOIN TO BLESS... போற்றுவோம் நம் கர்த்தரை... கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் எண் 62...
BRETHREN LET US JOIN TO BLESS...
போற்றுவோம் நம் கர்த்தரை...
கீதங்களும் கீர்த்தனைகளும் ..
பாடல் எண் 62...
https://youtu.be/g0EUMcZrgJM?si=ydUI3ZJEFn1un_GK
62. போற்றுவோம் நம் கர்த்தரை! சமாதானம், இன்பமும்
1. போற்றுவோம் நம் கர்த்தரை!
சமாதானம், இன்பமும்
எல்லாம் அவர் நமக்கே
ஈந்தாரே சிலுவையில்.
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
பிலிப்பியர் 2.8
2. சாபம், காயம், கசப்பும்,
வடுக்களும் சுமந்தார்,
வேதனையால் துடித்தார்.
நமக்காக அல்லவோ?
கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 5.2
3. ஒப்பற்ற பலியாகி
பாதாளத்தை ஜெயித்தார்;
நம்மை விடுவிக்கவே
வெற்றி வேந்தராயினார்.
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 1.18
4. மீட்கப்பட்டோம் முற்றுமாய்
நியாயத் தீர்ப்பில் தப்பினோம்;
உம்மில் களி கூறுவோம்.
உந்தன் நாமம் போற்றுவோம்.
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
கலாத்தியர் 3.13
5. நமக்காக உன்னத
கிரியை செய்த பிதாவை,
போற்றி வாழ்த்தி துதிப்போம்
அன்பின் மீட்பர் நாமத்தில்
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
யோவான் 4:23
BRETHREN
LET US JOIN TO BLESS..
என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள், நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
சங்கீதம் 34.3
whatsapp 91 9965050301
Comments
Post a Comment