குற்றம் சாட்டுதல்...சபைக்கு செய்தி


BLAMING OTHERS
குற்றம் சாட்டுதல்..

குற்றம் சாட்டுதல் இயேசு கிறிஸ்துவின் குணம் அல்ல...

குற்றம் சாட்டுதல் சாத்தானுடைய பிரதான குணம் ஆகும்..

அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது, இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான். 
வெளிப்படுத்தினத விசேஷம் 12:10

யோபு வின் மேல் சாத்தான் குற்றம் சாட்டும் சம்பவம்..

ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். 
யோபு 1:6
கர்த்தர் சாத்தானைப் பார்த்து நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்திரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். 
யோபு 1:7
கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபுவின்மேல் கவனம் வைத்தாயோ? ஊத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். 
யோபு 1:8
 அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்திரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான் ? 
யோபு 1:9
 நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர். அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. 
யோபு 1:10
ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான். 
யோபு 1:11
 கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது. அவன் மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார். அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டுப்போனான். 
யோபு 1:12


யாரையும் குற்றம் சட்டாத ஆண்டவர்..

1. விபச்சார ஸ்திரி .. யோவான் 8
அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். 
யோவான் 8:9
இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத்தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். 
யோவான் 8:10
அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். 
யோவான் 8:11

2. நிகொதேமு யோவான் 3
3. பாவியகிய ஸ்த்ரீ லூக்கா 7.36
4. சகேயு லூக்கா 19.5-7
5. மல்கூஸ் யோவான் 18.10
6. யூதாஸ் யோவ 6.67-70, 12.6, மத் 26.50
7. பேதுரு லூக்கா 22.61
8. சிலுவை சுற்றி நின்ற மனிதர்கள், அதிகாரிகள்
9. பரிசெயர்கள் லூக்கா 15.1,-2

பாடு படும்போது இயேசு கிறிஸ்துவின் செயல்கள் கவனத்திற்குரியது..

1. பிரதான ஆசாரியன் முன் வாய் திறக்கவில்லை
மத் 26.62-63
2. பிலாத்து முன்
மத் 27.11-14
3. ஏரோது முன்
லூக்கா 23.9
ஏசாயா 53.7

அவர் யாரிடமும் தன்னுடைய நேர்மை தன்மையை நிரூபிக்க முயற்சி செய்யவில்லை..

1. To explain means to lay blame upon others
2. To prove himself innocent means proving rest of the world guilty
3. He took sinners place மத் 22.12
4. He is our substitute 1 பேதுரு 3.18


நாம் சகோதரர்களை குற்றம் சுமத்தலமா?

1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். 
ரோமர் 2:1
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 
ரோமர் 2:2
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ? 
ரோமர் 2:3
அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? 
ரோமர் 2:4
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. 
ரோமர் 2:5
தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். 
ரோமர் 2:6
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 
ரோமர் 2:7

2.  சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்.

 சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். 
யாக்கோபு 4:11
நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? 
யாக்கோபு 4:12


அப் பவுல் தன்னுடைய நீதியை குறித்து என்ன சொல்லுகிறார்? கவனியுங்கள்..

 ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை. 
1 கொரிந்தியர் 4:3

என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன். ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை. என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தர். 
1 கொரிந்தியர் 4:4

காலத்துக்குமுன்னே தீர்ப்பு..
நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்..

ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும். 
1 கொரிந்தியர் 4:5

இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. 
ரோமர் 14:10
அந்தப்படி: முழுங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என்ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. 
ரோமர் 14:11
ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான். 
ரோமர் 14:12
இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 
ரோமர் 14:13

தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். 
ரோமர் 8:33
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர், அவரே எழுந்துமிருக்கிறவர், அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே
ரோமர் 8:34


Jesus came to save not to blame..
யோவான் 3.17
லூக்கா 5.32
லூக்கா 19.10
1 தீமோ 1.15
லூக்கா 2.11

Christ will come again to condemn

1. நியாயத்தீர்ப்பு கர்த்தருடையது..
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். 
யோவான் 5:22
 அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். 
யோவான் 5:27

ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனேக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், 
யூதா 1:14
 தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினவார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். 
யூதா 1:15

2. பழிவாங்குதல் கர்த்தருடையது..

பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
ரோமர் 12.19

பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.
எபிரேயர் 10.30

குற்றம் சாட்டும் ஏதுக்கள்..
1......
 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 
யோவான் 3:18

2.....
 பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள், நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்
யோவான் 5:45

3....
எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள், எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். 
ரோமர் 2:12

4.....
 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். 
யோவான் 12:48

5.....
அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். 
ரோமர் 2:15

6.....
என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும். 
ரோமர் 2:16

ஆகையால் சகோதரரே..
நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
கலாத்தியர் 5.15

நாம் கிறிஸ்துவுக்குள் யார்? என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

1. Same father ஒரே பிதா யோவான் 1.13
2. Same price ஒரே கிரயம் 1 கொ 6.20
3. Same body ஒரே சரீரம் கொலோ 1.18
4. Same spirit ஒரே ஆவி யோவான் 16.13
5. Same path ஒரே வழி 2 கொ 5.7
6. Same master ஒரே எஜமான் மத் 23.8
7. Same inheritance ஒரே சுதந்திரம் ரோமர் 8.17

நாம் என்னசெய்கின்றோம்?

ஒருவரையொருவர்..

1....
 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.
ரோமர் 16.16
சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
1 கொரிந்தியர் 16.20
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
2 கொரிந்தியர் 13.12

2....
ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
ரோமர் 15.7

3....
வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.
கலாத்தியர் 5.26

4....
ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
பிலிப்பியர் 2.3

5.....
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கொலோசெயர் 3.13

6....
மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து,
எபிரேயர் 10.24

7....
முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
1 பேதுரு 4.9

கர்த்தர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக..

shalomjjj@gmail.com
whatsapp 91 9965050301


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA