எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? அருளுரை துளிகள் ...மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?
*EXODUS TV*
*அருளுரை துளிகள்*
மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?
*மனிதன் ஒரு போதும் நீதிமானாக முடியாது..*
ஒரு விளம்பரம் பார்த்தேன்..
ஒரு vacuum cleaner அதாவது வுறிஞ்சி சுத்தப்படுத்தும் கருவி ஒரு சிவிங்கி மேல் உள்ள புள்ளிகளை இழுத்து வுரிஞ்சி விடுகிறது..Leopard 🐆
சிவிங்கி புள்ளிகள் இல்லாமல் plain ஆக காட்சி தருகிறது..
இதை பார்க்கும் பார்வையாளர்கள் இதை எப்படி எடுத்து கொள்வார்கள் என்று கூட சிந்திக்காமல் இந்த விளம்பரம் வெளியாகிறது..
நமக்கு அது விஷயம் அல்ல..
சிவிங்கி புள்ளிகள் இறைவனால் வழங்கப்பட்ட இயற்கை அழகு..
அதை மனிதனால் எப்படி அழிக்க முடியும்?
வேதம் கூறுகிறதை கவனியுங்கள்..
எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப் பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.
எரேமியா 13.23
இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
யோபு 25.4
ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
யோபு 14.1
பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
யோவான் 3.12
மனிதன் தன்னால் நீதிமனாக முடியாது..
தேவன் பாவியை நீதிமனக மாற்றுகிறார்..
வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
ரோமர் 4:3
கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.
ரோமர் 4:4
ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
ரோமர் 4:5
அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு:
ரோமர் 4:6
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
ரோமர் 4:7
எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
ரோமர் 4:8
shalomjjj@gmail.com
whatsapp 91 9965050301
Comments
Post a Comment