சபைக்கு செய்தி... உங்கள் சந்தோசம் நிறைவாக இவைகளை எழுதுகிறேன்..எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல...



இந்த audio செய்தி கேளுங்கள் 

https://www.youtube.com/live/QHESGCvaJ2s?si=gSiQdk0kha5haLvI




சபைக்கு இந்த வார செய்தி...

உங்களுக்கு எழுதுகிறோம்...

எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல...

விசுவாசிகளின் சந்தோசம் நிறைவானது..

தியான வசனம்..

உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம். 
1 யோவான் 1:4

மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும். 
பிலிப்பியர் 3:1

1. உங்கள் நாமங்கள் ..எழுதப்பட்ட சந்தோசம்..

 ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். 
லூக்கா 10:20

2. நீங்கள் கிறிஸ்துவை கண்டும், அறிந்தும்..சகோதரர்களை கண்டும் இருப்பதில் சந்தோசம்..

அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள். 
யோவான் 20:20

அவ்விடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபுரம்வரைக்கும், சிலர் மூன்று சத்திரம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள். அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தான். 
அப்போஸ்தலர் 28:15

3. சுவிசேஷம் அறிவிப்பதில் சந்தோஷம்..

சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். 
பிலிப்பியர் 1:17

 இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையிலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன். 
பிலிப்பியர் 1:18

4. பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கிறார்கள் என்கிற சந்தோஷம்..

பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன்
2 யோவான் 1:4

என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. 
3 யோவான் 1:4

 உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. 
சங்கீதம் 119:136

5. கிறிஸ்துவின் நிமித்தம் அவமானத்தை சகிக்கும் போது சந்தோஷம்..

 அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், 
அப்போஸ்தலர் 5:41

கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்
1 பேதுரு 4:13

ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்
1 பேதுரு 4:16

மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்
லூக்கா 6:22

அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள். 
லூக்கா 6:23

6. எப்பொழுதும் சந்தோஷம்..

 எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்
1 தெசலோனிக்கேயர் 5:16

 உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். 
யாக்கோபு 1:3

7. கிறிஸ்து நம்மை அவரிடத்தில் சேர்க்க மீண்டும வெளிப்பட போகிறார் என்கிற சந்தோஷம்..

அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று; 
அப்போஸ்தலர் 1:10

கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீ;ர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். 
அப்போஸ்தலர் 1:11

 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். 
யோவான் 14:1

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன், ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். 
யோவான் 14:2

நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். 
யோவான் 14:3

 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். 
வெளிப்படுத்தினத விசேஷம் 19:7

8. குறைவுகளில் சந்தோஷம்..

துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஜசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும், சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம். 
2 கொரிந்தியர் 6:10

9. பெலவீங்களை குறித்து சந்தோஷம்..

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாரட்டுவேன்
2 கொரிந்தியர் 12:9

கடைசியாக சகோதரரே..

துன்பப்படவேண்டியது அவசியம்..

 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள். என்றாலும் துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சகாலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். 
1 பேதுரு 1:


உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே

அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக. 
நீதிமொழிகள் 24:17

சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள், 

அழுகிறவர்களுடனே அழுங்கள். 
ரோமர் 12:15

gramasamy@thechristianbeleversassembly

shalomjjj@gmail.com
whatsapp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA