இன்றைய ஆராதனை தியானம்...கிறிஸ்துவின் பாடு மரணம் 7 நிலைகளும் பயன் பெற்ற 7 வித ஜனங்களும்
இன்றைய ஆராதனை தியானம்...
கிறிஸ்துவின் பாடு மரணம் 7 நிலைகளும் பயன் பெற்ற 7 வித ஜனங்களும்..
தியான வசனம்..
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது.
( ஆராதனை தேவனிடத்தில் நாம் வைத்திருக்கிற அன்பின் வெளிப்பாடு)
ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்,
2 கொரிந்தியர் 5:14
ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
யோவான் 18:14
பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்று ( ம் ) ( பிழைத்தாரென்றும்) நிதானிக்கிறோம்.
2 கொரிந்தியர் 5:15
கிறிஸ்துவின் பாடு மரணம் ஆகிய 7 நிலைகள்
1. கிறிஸ்துவின் பிறப்பு...
2. கிறிஸ்து கைது செய்யப்படுதல்..
3. கிறிஸ்து விசாரிக்கப்படுதல்..
4. கிறிஸ்து சிலுவையில் அறையப்படுதல்
5. கிறிஸ்து சிலுவையில் மரித்தல்..
6. கிறிஸ்து அடக்கம் பண்ணப்படுதல்..
7. கிறிஸ்து உயிர்த்தல்..
கிறிஸ்துவின் பாடு மரணம் ஆகிய 7 நிலைகளில்
பயன் பெற்ற 7 வித ஜனங்கள்.
1. கிறிஸ்துவின் பிறப்பின் போது..
மேய்ப்பர்கள்.. எல்லா ஜனத்திற்கும் நற்செய்தி..
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
லூக்கா 2:10
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
லூக்கா 2:11
2. கிறிஸ்து கைது செய்யப்படும் போது ...
ஏரோதும் பிலாத்துவும் சிநேகிதரானார்கள்
முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள்.
லூக்கா 23.12
3. கிறிஸ்து விசாரிக்கப்படும் போது...
பரபாஸ் விடுவிக்கப்பட்டான்
அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
மத்தேயு 27.26
4. கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் போது...
ஒரு கள்ளன் பரதீசுக்கு மற்றப்பட்டான்
இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
லூக்கா 23:42
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 23:43
5. கிறிஸ்து சிலுவையில் மரிக்கும் போது..
மனுக்குல ஜனத்திற்கு மன்னிப்பு
அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
லூக்கா 23:34
6. கிறிஸ்து அடக்கம் பண்ணப்பட்ட போது..
யோசேப்பு தன் கல்லறையில் கிறிஸ்துவை அடக்கம்..
யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி,
மத்தேயு 27:59
தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப் போனான்.
மத்தேயு 27:60
7. கிறிஸ்து உயிர்த்து பரம் ஏறும்போது...
எம்மாவு சீஷர்கள் கிறிஸ்து அப்பம் பிட்கையில் அவரை அறிந்து கொண்டார்கள்
அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
லூக்கா 24:30
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
லூக்கா 24:31
அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
லூக்கா 24:51
அவர்கள் அவரைப் பணிந்து கொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து,
லூக்கா 24:52
நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
லூக்கா 24:53
ஆராதனை செய்தி..
நிதானித்து பங்கு பெறுவோம்..
அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்று (ம் ) ( பிழைத்தாரென்றும்) நிதானிக்கிறோம்.
2 கொரிந்தியர் 5:15..
என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஐனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஐனபானம்பண்ணுகிறான்.
1 கொரிந்தியர் 11:29
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
1 கொரிந்தியர் 11:31
62. போற்றுவோம் நம் கர்த்தரை! சமாதானம், இன்பமும்
1. போற்றுவோம் நம் கர்த்தரை!
சமாதானம், இன்பமும்
எல்லாம் அவர் நமக்கே
ஈந்தாரே சிலுவையில்.
2. சாபம், காயம், கசப்பும்,
வடுக்களும் சுமந்தார்,
வேதனையால் துடித்தார்.
நமக்காக அல்லவோ?
3. ஒப்பற்ற பலியாகி
பாதாளத்தை ஜெயித்தார்;
நம்மை விடுவிக்கவே
வெற்றி வேந்தராயினார்.
4. மீட்கப்பட்டோம் முற்றுமாய்
நியாயத் தீர்ப்பில் தப்பினோம்;ளூ
உம்மில் களி கூறுவோம்.
உந்தன் நாமம் போற்றுவோம்.
5. நமக்காக உன்னத
கிரியை செய்த பிதாவை,
போற்றி வாழ்த்தி துதிப்போம்
அன்பின் மீட்பர் நாமத்தில்
shalomjjj@gmail.com
whatsapp 91 9865050301
Comments
Post a Comment