இரட்சிப்பின் நிச்சயம்.. SECURITY OF SALVATION


இரட்சிப்பின் நிச்சயம்.. 
SECURITY OF SALVATION – 

1. இரட்சிப்பு கிருபையை அடிப்படையாக கொண்டது
எபே 2:5-10

நிச்சயம் : தகுதி இல்லாதவர்களுக்கு கிடைக்கும் கிருபை தகுதியை சார்ந்து இழக்கப்படாது..

2. இரட்சிப்பு புத்திர சுவிகாரத்துடன் தொடர்புடையது..
யோவான் 3.5, யோவான் 1.13, 
 1 யோவான் 5.1-2

நிச்சயம்: பிள்ளைகள் தண்டிக்கப்படலாம். கொலை செய்யப்படமாட்டார்கள்.

3. இரட்சிப்பு முழுமையான ஒரே பலியினால் ஏற்படுத்தப்பட்டது.
எபி 10.14

நிச்சயம்: தேவனுடைய முழுமையான பலியினால் மீட்கப்பட்டவர்கள் எப்படி நிராகரிக்கப்பட முடியும்.

4. இரட்சிப்பு நீதிகரிப்புடன்
 ( சட்டபூர்வமானது ) தொடர்புடையது.
ரோமர் 3.24, 4.1-8, 5.1, 8.30-34

நிச்சயம்: பரலோக நீதிமன்றம் ஒரு முறை நிரபராதி என தீர்க்கப்பட்டபின் மீண்டும் நரக தண்டனை வழங்க முடியாது.
( இது பாவ மன்னிப்பை விட மேலானது )

5. இரட்சிப்பு மீட்புடன் தொடர்புடையது.
எபி 9.11-12, 1 பேது 1.18-19, 1 கொரி 1.30,
 எபே 1.7

நிச்சயம்: கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் விலைக்கு வாங்கப்பட்டவர்களை எந்த விலையாலும் திரும்ப பெற முடியாது.


      

6. இரட்சிப்பும் ஆவியின் முத்திரையும்.
எபே 4.30

நிச்சயம் : பரிசுத்த ஆவியானவர் முத்திரையிட்ட எந்த பொருளை யார் கைப்பற்ற முடியும்..
Ex : போஸ்ட் ஆபீஸ் ஒரு லெட்டர் ஐ முத்திரை போட்ட பின் நாமே திரும்ப கேட்டாலும் கிடைக்காது.. அந்த அட்ரஸ் ல் உரியவரிடம் மட்டுமே கொடுக்கப்படும்..

7. இரட்சிப்பும் அச்சாரமும். 
எபே 1.13-14, 2 கொரி 1.22

நிச்சயம் : ஆவியானவர் அச்சாரமாக்கப்பட்டு மீட்புறுதி வழங்கப்பட்ட பொருளை எவராலும் பறிக்க இயலாது.. 

8. இரட்சிப்பும் ஆசாரியத்துவமும். 
எபி 7.25, 4.14, 10.25

நிச்சயம் : கிறிஸ்து நம்முடைய இரட்சிப்பு நிறைவேற பிதாவிடம் பரிந்து பேசுகிறார். 

9. இரட்சிப்பும் கிறிஸ்துவின் மத்தியஸ்தமும். 
ரோம 8.34, 1 யோவான் 2.1-2, லூக் 22.32

நிச்சயம் : கிறிஸ்து நமக்காக மத்தியஸ்தரும் வழக்கறிஞர் ருமாக இருக்கிறார்.. 

10. இரட்சிப்பும் ஜெநிப்பித்தலும்.. 
யாக் 1.18, 1 பேது 1.23-24, யோவான் 6.63

நிச்சயம் : அழியாத வித்தினாலே ஜெநிப்பிக்கப்பட்டவர்கள் எப்படி அழிவை காணமுடியும்? 


     

11. சபை ( மணவாட்டி..மணவாட்டிகள் அல்ல ) கர்த்தருடைய வருகையில் எடுத்துக்கொள் ளப்படும்.
1 கொரி 15.51-52, 4.15, 1.12, 3.1-14, 5.1, 6.1-8

நிச்சயம் : குறைபாடுகளுடன் விளங்கிய கொரிந்து சபை விசுவாசிகளை குறிப்பிட்டு “ நாம் எல்லாரும் “ என்கிறார் பவுல்.

12. இரட்சிப்பும் பிரிக்க முடியாத தேவ அன்பும்..
ரோம 8.35-38

நிச்சயம் : நம்மைத் தவிர வேறே எதுவும் கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிக்க முடியாது.

13. இரட்சிப்பும் தேவ வல்லமையும். 
1 பேது 1.4, எபே 1.19

நிச்சயம் : கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் நடப்பித்த தேவனுடைய வல்லமை விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்தில் காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் அறிந்து கொள்ள நாம் மட்டுமே தவறுகிறோம்? 

14. விசுவாசிகளின் குடியிருப்பு பரலோகம்.. 
எபே 2.7, கொலோ 3.3-4, 5

நிச்சயம் : உன்னதங்கள், தேவனுடைய வலது பாரிசம், மேலானவைகள், நம்முடைய ஜீவன் கிறிஸ்து இவைகள் கிறிஸ்துவுடன் கூட எழுந்தவர்களுக்கு என்பதை நாம் நம் அவயவங்களை அழித்து போடாமல் உணர்வது கடினம்? 

15. கிறிஸ்துவின் சரீரத்தோடு இணைந்திருப்பதே இரட்சிப்பு.. 
கொலோ 3.3, எபே 4.10, யோவான் 3.13, ஏசா 26.4, 1 கொரி 12.12, 13, 21, கொலோ 2.19, 
 ரோம 12.5

நிச்சயம் : சரீரத்திலிருந்து ஒரு அவயவம் தறித்து போடப்பட 
முடியாது? 



16. இரட்சிப்பும் கிறிஸ்துவின் ஜீவனும்..
கொலோ 3.4, யோவான் 11.25, 14.6, 6.47, 6.54, 10.10, 17.3

நிச்சயம் : விசுவாசிப்பவர்களுக்கு இரண்டாம் மரணம் இல்லை.

17. இரட்சிப்பு தேவனுடைய தெரிந்து கொள்ளுதலில் ஆரம்பமாகிறது.. 
1 பேதுரு 1.2 யாக் 2.5, 2தீமோ 2.10, 1 தெச 1.3, கொலோ 3.12

நிச்சயம் : தேவன் தெரிந்து கொண்டவர்கள் மேல் குற்றம் சாட்டுகிறவன் யார்? தேவனே மரித்தார். தேவனே பரிந்தும் பேசுகிறார்.ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறவன் யார்? 

18. இரட்சிப்பு கர்த்தருடையது.. 
சங் 3.8, ஆதி 49.18, 37.39, 62.1, 62.6, 69.29, 85.9

நிச்சயம் : நாம் பெற்ற இரட்சிப்பு கர்த்தருடைய இரட்சிப்பு என்பதை விட மேலான பாதுகாப்பு எதுவாக இருக்க முடியும்? 

19. இரட்சிப்பும் பரலோக சுதந்திரமும்.. 
1 பேது 1.5

நிச்சயம் : நாம் தேவனுக்கு சுதந்திரரும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரரும் என்பதை மாற்ற முடியுமா? 

20. இரட்சிப்பும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையும்.. 
2 தெச 2.14

நிச்சயம் : கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நாமும் பங்காளிகளாவோம் என்பது தேவனுடைய தீர்மானம். 1.பேது 4.13

... தொடரும் 
shalomjjj@gmail.com
Whatsapp:+91 9965050301
 

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA