ஆட்டுக்குட்டியானவரும் ஆராதனையும்... மேஜை நினைவு கூறுதல் தியானம்


மேஜை நினைவு கூறுதல் தியானம் 

ஆட்டுக்குட்டியானவரும் ஆராதனையும்... 


ஆராதனை நித்தியத்திற்குறியது..
இங்கே நாம் செய்கிற ஆராதனை நிழல்..
நிஜம் கர்த்தர்..



1. அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி..
LAMB 🐑 THAT WAS SLAINED..

அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன், அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது, அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். 
வெளிப்படுத்தினத விசேஷம் 5:6


2. தம்மில் தாமே அதிகாரம் உள்ள ஆட்டுக்குட்டியானவர்..
LAMB HAVING POWER IN HIMSELF 

அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். 
வெளிப்படுத்தினத விசேஷம் 5:7

3. 

அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து: 
வெளிப்படுத்தினத விசேஷம் 5:8

4. கனத்திற்கு பாத்திரரர் ஆட்டுக்குட்டியானவர்..
LAMB 🐑 WORTHY FOR HONOUR..

அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். 
வெளிப்படுத்தினத விசேஷம் 5:12


5. நித்திய ஆட்டுக்குட்டியானவர்..
ETERNAL LAMB 🐑

அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள்யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். 
வெளிப்படுத்தினத விசேஷம் 5:13

6. 

1 ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். 
வெளிப்படுத்தினத விசேஷம் 6:1

16 பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள், 
வெளிப்படுத்தினத விசேஷம் 6:16

29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. 
யோவான் 1:29

36 இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். 
யோவான் 1:36

8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள்யாவரும் அதை வணங்குவார்கள்.

வெளிப்படுத்தினத விசேஷம் 13

19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. 
1 பேதுரு 1:19

20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார். 
1 பேதுரு 1:20



186. ஆட்டுக் குட்டியின் திரு இரத்தத்தினால்


1. ஆட்டுக் குட்டியின் திரு
     இரத்தத்தினால்
  மீட்டுக் கொள்ளப்பட்டவர்
     யாவருமே,
  பாட்டுடன் சேர்ந்து, தேவ
     சந்நிதியில்,
  அல்லேலூயா ஸ்தோத்ரம்!
                      - நாம் பாடிடுவோம்

2. இரத்தத்தினால் தைரியமாய்
     நமக்கு
  பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க
  இரட்சகர் வழியைத்
     திறந்ததினால்
  அல்லேலூயா ஸ்தோத்ரம்!
                      - நாம் பாடிடுவோம்.

3. சாத்தான் மேல் ஜெயமும் திரு
     இரத்தத்தால்
  பாவத்திலிருந்து விடுதலையும்,
  சுத்தாங்கமும் நமக்கு
     உள்ளதினால்
  அல்லேலூயா ஸ்தோத்ரம்;!
                      - நாம் பாடிடுவோம்.

4. கேருபின், சேராபீன்கள்
     போற்றுவோரை
  பரிசுத்தரை நாமும்
     போற்றிடுவோம்,
  சர்வ சிருஷ்டி கர்த்தாவாம்
     திரியேகர்க்கு
  அல்லேலூயா ஸ்தோத்ரம்!
                      - நாம் பாடிடுவோம்.

5. ஆவியின் பிதாவுக்கு மகத்துவம்,
  ஆட்டுக் குட்டியானவர்க்கு 
     மகத்துவம்
  ஆட்கொண்ட தேவாவிக்கு
     மகத்துவம்,
  அல்லேலூயா ஸ்தோத்ரம்!
                      - நாம் பாடிடுவோம்.



shalomjjj@gmail.com
whatsapp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA