தம்முடைய பிள்ளையாகிய இயேசு.....மேஜை நினைவு கூறுதல் தியானம்
Table remembrance thought..
தம்முடைய பிள்ளையாகிய இயேசு...
தியான வசனம்..
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
அப்போஸ்தலர் 3:13
ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
எபிரேயர் 2:14
மத்தேயு இயேசு கிறிஸ்துவை ராஜாவாக சித்தரிக்கிறார்.. ராஜ வம்ச வரலாறு எழுதுகிறார்..
மாற்கு இயேசு கிறிஸ்துவை அடிமையாக சித்தரிக்கிறார்.. அடிமைக்கு வம்ச வரலாறு தேவை இல்லை என்பதால் எழுதவில்லை..
யோவான் இயேசு கிறிஸ்துவை தேவனாகவே சித்தரிக்கிறார்.. தேவனுக்கு வம்ச வரலாறு தேவை இல்லை என்பதால் எழுதவில்லை..
பிள்ளை குறித்து லூக்கா எழுதுகிறார்..
லூக்கா இயேசு கிறிஸ்துவை மனிதனாக சித்தரிக்கிறார்.. மனிதனுக்கு வம்ச வரலாறு தேவை என்பதால் ஆதாம் என்கிற ஆதி மனிதனின் வம்ச வரலாறு எழுதுகிறார்..
கவனியுங்கள்..
அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்,
லூக்கா 3:23
ஏனோஸ் சேத்தின குமாரன், சேத் ஆதாமின் குமாரன், ஆதாம் தேவனால் உண்டானவன்.
லூக்கா 3:38
பிள்ளையாகிய இயேசு... லூக்கா எழுதின சுவிசேசத்தில்..
1. பிள்ளையை துணிகளில் சுற்றி..
லூக்கா 2.12
பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள், இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
லூக்கா 2:12
முன்னணையில் கிடத்தி..
லூக்கா 2.16
தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
லூக்கா 2:16
'brephos'
G1025
பிறக்காத கரு... பயன்படுத்தும் வார்த்தை
unborn foetus..
2. பிள்ளைக்கு விருத்தசேதனம்..
8 நாள் ஆன பிள்ளை
லூக்கா 2.21
பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.
லூக்கா 2:21
'autos'
G846
8 நாள் ஆன பிள்ளை
3. பிள்ளைக்காக பலி..
40 நாட்கள் ஆன பிள்ளை
லூக்கா 2.27
சிமியோன் கையில் இருக்கும் போது பிள்ளைக்கு 40 நாட்கள்..
அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
லூக்கா 2:27
'paidion'
G3813
40 நாட்கள் ஆன பிள்ளை
அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடார வாசலில் ஆசாரியனிடத்திறகுக் கொண்டுவரக்கடவள்.
லேவியராகமம் 12:6
ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள், அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்,; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.
லேவியராகமம் 12:8
4. பிள்ளையாகிய இயேசு
12 வருடங்கள் நிரம்பிய பிள்ளை..
அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய்,
லூக்கா 2:42
பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார், இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
லூக்கா 2:43
'pais'
G3816
12 வருடங்கள் ஆன பிள்ளை
5. மகனே..
தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
லூக்கா 2:48
'teknon'
G5043
one whom Mary borne
'bairn'
மேரி தான் பெற்றெடுத்த மகன்
6. 21 வருடங்களுக்கு பிறகு அதாவது இயேசு கிறிஸ்துவின் 33 வது வயதில் லூக்கா எழுதுகிறார்..
லூக்கா 23.41
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம், நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம், இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
லூக்கா 23:41
இவரோ என்கிற வார்த்தை This Man
23:41 And we indeed justly; for we receive the due reward of our deeds: but this man hath done nothing amiss.kjv
This Man.. என்பது அர்த்தம் மாம்சத்தில் இருப்பவர்..
'houtos'
G3778
மாம்சத்தில் இருப்பவர்..
யோவான் நற்செய்தியில் யோவான் எழுதுகிறார்..
இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.
யோவான் 19:5
Behold this man
'anthropos'
G444
a perfect man
இவர்... பூரணமான மனிதன்..
ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
எபிரேயர் 2:14
'paidia'
G3813
மாம்சத்தில் பிள்ளைகள்..
மனுஷனாகிய கிறிஸ்து இயேசு ..
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு 2:5
எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே. இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
1 தீமோத்தேயு 2:6
anthrōpos
G444
ஆராதனை தியானம்..
இயேசு கிறிஸ்து தாயின் வயிற்றில் உருவான தீர்க்கதரிசனம்..
நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர், என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.
சங்கீதம் 22:9
கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன், நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.
சங்கீதம் 22:10
Limitations of Humanity clearly revealed in Jesus' sufferings..
இயேசு கிறிஸ்துவின் பாடுகளில் அவருடைய மனுஷீகத்தின் எல்லை தெளிவாக வெளிப்படுகிறது..
சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பல வந்தம்பண்ணினார்கள்.
மாற்கு 15:21, மத் 27.32, லூக்கா 23.26
இவர் தேவன் என்பதால் யோவான் இந்த சம்பவத்தை தவிர்க்கிறார்..
லூக்கா தான் தொடர்ந்து இந்த பிள்ளையை பற்றி அப்போஸ்தலர் நடபடிகளில் எழுதுகிறார்..
மகிமைப்படுத்தபட்ட பிள்ளை..
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
அப்போஸ்தலர் 3:13
எழுப்பப்பட்ட பிள்ளை..
அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
அப்போஸ்தலர் 3:26
அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசு
ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.
அப்போஸ்தலர் 4:28
உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசு...
....நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.
அப்போஸ்தலர் 4:30
நிறைவு செய்வோம்..
இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபை..
ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
ரோமர் 5:15
shalomjjj@gmail.com
whatsapp 91 9965050301
Comments
Post a Comment