ஆராதனை செய்கிறவர்கள்..* கவனிக்க வேண்டியவை..
*ஆராதனை செய்கிறவர்கள்..* கவனிக்க வேண்டியவை..
1. *சரியான நேரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் அமருதல் அவசியம்..*
*வேளைவந்தபோது* , அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.
லூக்கா 22.14
2. *ஆயத்தத்துடன் ஆராதனை அனுசரிக்க வேண்டும்..*
கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
லூக்கா 23:55-56
3. *ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சி..*
அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது. அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் *ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப்* பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.
எபிரேயர் 9.9
பூரணப்படுத்துமானால், *ஆராதனை செய்கிறவர்கள்* ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?
எபிரேயர் 10.2
4. *நாடோறும் ஆராதனை செய்கிற ஜீவியம்..*
அன்றியும், எந்த ஆசாரியனும் *நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும்,* பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.
எபிரேயர் 10.11
5. *ஆராதனை செய்கிறவர்களுக்கு ஒழுங்குகள் இருக்கும்..*
நமக்கு ஒரு பலீபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் *ஆராதனை செய்கிறவர்களுக்கு* அதிகாரமில்லை.
எபிரேயர் 13.10
6. *ஆராதனை செய்கிறவர்கள் கிருபை..*
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் *ஆராதனை செய்யும்படி* கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
எபிரேயர் 12.28
7. *ஆராதனை செய்கிறவர்களுடைய ஸ்தலம..*
தேசத்தில் பரிசுத்த பங்காகிய இது கர்த்தருக்கு ஆராதனைசெய்யச் சேருகிறவர்களும், பரிசுத்த ஸ்தலத்தில் *ஆராதனை செய்கிறவர்களுமான* ஆசாரியருடையது, இது அவர்களுக்கு வீடுகளுக்கான இடமும், பரிசுத்த ஸ்தலத்துக்கு அடுத்த இடமுமாயிருக்கவேண்டும்.
எசேக்கியேல் 45
*கடைசியாக சகோதரரே..*
*ஆராதனை செய்கிறவர்கள்* மனுஷருடைய கற்பனைகளை போதிக்க வேண்டாம்..
மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
மாற்கு 7.7
ஆராதனைக்குரியவரே... பாடல்
https://youtu.be/5p0czYta8DQ?si=E-k9edOKZsNlwLoU
whatsapp 91 9965050301
Comments
Post a Comment