ஜெபத்தின் எடை..The weight of the Prayer அருளுரை துளிகள் EXODUS TV
ஜெபத்தின் எடை..
The weight of the Prayer
இரண்டாம் உலகப் போர் முடிந்து சில நாட்களே ஆகி இருந்தன.. ஆங்காங்கே சில நிசப்தமான நிலைகள் ஆரம்பமாகி இருந்தன. ஒரு இளம் தாய் தன்னுடைய இரண்டு கைக்குழந்தைகளுடன் அது கிறிஸ்மஸ் நாளுக்கு முந்தின நாளாக இருந்த படியால் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பரிசு பொருட்கள், dresses, இனிப்புகள், பால் பவுடர்
cakes வாங்க கடைக்கு சென்றார்கள்..
கடைக்கரானை அணுகி தன்னுடைய தேவைகளை சொன்னார்கள்..
கடைக்காரர் பணம் கொடுத்து வாங்க கூறினார்.. பணம் பார்க்கவே அபூர்வம்.. அந்நாட்களில் பணம் யார் கையிலும் இல்லை.. தாய் இவ்வாறு சொன்னாள் " என்னுடைய கையில் ஒரு paper இருக்கின்றது.. இதை வைத்துக்கொண்டு எனக்கு பொருள் தாருங்கள்"
கடைக்காரர் அலட்சியமாக கிண்டலாக உன் paper 📜 ஐ இந்த தராசில் படிகள் இருக்கும் இடத்தில் வைத்து விட்டு தராசின் மறு பக்கம் உனக்கு தேவையான பொருட்களை வைத்து எடுத்துக்கொள் என்றார்..
தாய் நம்பிக்கையோடு அந்த paper 📜 ஐ தராசின் ஒரு பக்கம் வைத்து விட்டு தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் தேவையான பொருட்களை தராசின் மறு பக்கம் வைத்தாள்.. ஆனாலும் அந்த தராசு எந்த பக்கமும் அசையாமல் இருந்தது..
தாய் தனக்கு தேவையான பொருட்களை தன்னுடைய பையில் வைத்து திரும்பி விட்டாள்..
கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார்..
அந்த paper 📜 என்ன தான் எடை? என குழம்பினார்..
அந்த paper 📜 எடுத்து வாசித்தார் .
அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது..
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.மத்தேயு 6.11
இந்த தாய் எவ்வளவு கண்ணீரோடு இராமுழுதும் இந்த வார்த்தையை எழுதினார்கள்.. தெரியாது.. ஒரு வேளை அந்த தாய் கண்ணீர் அந்த paper 📜 ல் கூட விழுந்திருக்கும்.. அந்த paper 📜 ன் எடை என்ன?
EXODUS TV அருளுரை துளிகள்
https://youtu.be/_XXuKfeytfs?si=NB3-qBT4Y-fbIMaY
Shalomjjj@gmail.com
whatsapp 91 9965050301
Comments
Post a Comment