THE UNIQUE BURIAL OF JESUS CHRIST*. *இயேசு கிறிஸ்துவின் தனித்துவ அடக்கம்*




 *THE UNIQUE BURIAL OF JESUS CHRIST* 

 *இயேசு கிறிஸ்துவின் தனித்துவ அடக்கம்* 

===========================

நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, 
அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளிலே உயிர்த்தெழுந்து, 
1 கொரிந்தியர் 15:3-4

         *தீர்க்கதரிசனம்* .. 

 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள், ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார், அவர் கொடுமை செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. 
ஏசாயா 53:9

        *நிறைவேறுதல்* .. 

 அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள். 
அப்போஸ்தலர் 13:29

               *சரித்திரம்* .. 

 இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான், பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான் ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும்,அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள். 
யோவான் 19:38-42

===========================

 *இயேசு கிறிஸ்துவின் அடக்கத்தில் யோசேப்பின் பங்கு.* . 

1. _யோசேப்பு ஒரு சீஷன்.._ 

2. _யோசேப்பு ஒரு ஐசுரியவான்.._ 

3. _யோசேப்பு அரிமத்திய ஊரான்.._ 

 சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து, 
மத்தேயு 27:57

4. _யோசேப்பு ஒரு கனம்பொருந்திய ஆலோசனைக்காரன்_ .. 

5. _யோசேப்பு தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவன்_ .. 

கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். 
மாற்கு 15:43

6. _யோசேப்பு ஒரு உத்தமனும் நீதிமானுமாயிருந்தவன்_ .. 

 யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான். அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான். 
லூக்கா 23:50

7. _யோசேப்பு யூதருக்குப் பயந்ததவன்.._ 

இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான், பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்
யோவான் 19:38

===========================

 *இயேசு கிறிஸ்துவின் அடக்கத்தில் நிக்கோதேமு பங்கு.* . 

1. _நிக்கோதேமு யூதருக்குள்ளே அதிகாரி_ ..

 யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். 
யோவான் 3:1

2. _நிக்கொதேமு பரிசேயன்_ ..

இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி: 
யோவான் 7:50

3. _நிக்கொதேமு போதகன்.._ 

இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? 
யோவான் 3:10

===========================

 *இயேசு கிறிஸ்துவின் அடக்கத்தில் ஸ்திரீயின் பங்கு.* . 

இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்: நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.
மாற்கு 14.8

===========================

 *இயேசு கிறிஸ்துவின் அடக்கத்தின் தனித்துவம்* .. 

1. _புதிய கல்லறை.._ 

தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப் போனான். 
மத்தேயு 27:60

2. _ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறை.._ 

அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். 
லூக்கா 23:53

3. _இயேசு கிறிஸ்து தாமே உயிர்த்தெழுந்தார்.. என்பதை நிரூபிக்க_ _ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறை.. __அவருக்கு ஆயத்தமானது..

 எலிசா மரணமடைந்தான், அவனை அடக்கம்பண்ணினார்கள், மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது. 
அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள், அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான். 
2 இராஜாக்கள் 13:20-21

===========================

 *இயேசு கிறிஸ்துவின் அடக்கம் விசுவாசிகளின் ஞானஸ்னானத்திற்கு ஒப்புமை..* 

1. _கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்_ ..

 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே _கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்_ .
ரோமர் 6.4

 ஞானஸ்நானத்தில் _அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும்_ , அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
கொலோசெயர் 2.12

கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? 
ரோமர் 6:3

shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA