பரிசுத்தம் என்ற பெரும்பாதையில் பதாகைகள்..SIGN 🛑 BOARDS IN THE HIGHWAY 🛣️ OF HOLINESS..*


*பரிசுத்தம் என்ற பெரும்பாதையில் பதாகைகள்..

SIGN 🛑 BOARDS IN THE HIGHWAY 🛣️ OF HOLINESS..* 

A highway shall be there, and a road, And it shall be called the Highway of Holiness. The unclean shall not pass over it, But it shall be for others. Whoever walks the road, although a fool, Shall not go astray. Isaiah 35.8

அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும், அது பரிசுத்த வழி என்னப்படும், தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை, அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. 
ஏசாயா 35:8

 *தூய்மையான வாழ்விற்கு தேவனுடைய கற்பனைகள்...* 

 *நான் கர்த்தர்...* 
 *நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்..* 


1. பெற்றோருக்கு பயந்திரு. 
லேவி 19.3..எபே 6.1,-3
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். 
எபேசியர் 6:1
உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் 
எபேசியர் 6:2
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது. 
எபேசியர் 6:3

2. ஓய்வு நாளை ஆசரி
லேவி 19.3..
வாரத்தின் முதல் நாள் ஆசரித்தல்.. அப் 20.7
வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான். 
அப்போஸ்தலர் 20:7

3. அந்நிய தெய்வங்களை உனக்காக உருவாக்காதே
லேவி 19.4..2 கொரி 6.14
 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? 
2 கொரிந்தியர் 6:14

 4. நான் உன் தேவனாகிய கர்த்தர் 
லேவி 19.3..லூக்கா 4.8
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். 
லூக்கா 4:8

5 . பலிகளை உற்சாகத்துடன் செலுத்து ..லேவி 19.5-8..
எபி 13. 15,16
 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். 
எபிரேயர் 13:15
அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள். இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். 
எபிரேயர் 13:16

6. ஏழைக்கு இரங்கு..
லேவி 19.9-10..யாக் 2.2-3
ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, 
யாக்கோபு 2:2
மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும், தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், 
யாக்கோபு 2:3

 7. களவு செய்யாதே ..
லேவி 19.11-12..ரோம 2.21-23
இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? 
ரோமர் 2:21
விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? 
ரோமர் 2:22
நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக்கனவீனம்பண்ணலாமா? 
ரோமர் 2:23

8. பொய் சொல்லாதே..
லேவி 19.11-12..அப் 5.3-4
பேதுரு அவனை நோக்கி; அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? 
அப்போஸ்தலர் 5:3
அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பு அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். 
அப்போஸ்தலர் 5:4

 9 பிறனை ஒடுக்காதே ..
லேவி 19.13..
9️⃣.புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக, புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக, தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. 
ரோமர் 14:3
இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. 
ரோமர் 14:10
இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 
ரோமர் 14:13

10. ஊனமுற்றோருக்கு இடுக்கண் செய்யாதே ..
லேவி 19.14
1️⃣0️⃣.அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். 
ரோமர் 15:1
நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். 
ரோமர் 15:2


11 .. நீதியை காத்துக் கொள்.. முகதட்சணையம் செய்யாதே.. லேவி 19.15
1️⃣1️⃣.மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். 
எபேசியர் 6:6

 12. கோள் சொல்லாதே..
லேவி 19.16
1️⃣2️⃣.
மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது. 
1 தீமோத்தேயு 5:19
அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். 
எபேசியர் 4:25

 13. கள்ளமில்லாதவர்களை கொலை செய்யாதே..
லேவி 19.16
1️⃣3️⃣.
 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான். 
மத்தேயு 5:22

 14. உன் சகோதரனை பகைக்காதே .. 
லேவி 19.17
1️⃣4️⃣.
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். 
மத்தேயு 5:44

15 . பழிக்கு பழி வாங்காதே..
லேவி 19.18
1️⃣5️⃣.
பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். 
ரோமர் 12:19
பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். 
எபிரேயர் 10:30

 16. பொறாமை கொள்ளாதே.. லேவி 19.18
1️⃣6️⃣.
சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். 
பிலிப்பியர் 1:15

ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். 
பிலிப்பியர் 2:3

 17. உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறனிடம் அன்பு செலுத்து .. 
லேவி 19.18
1️⃣7️⃣.
எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப்பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. 
ரோமர் 13:9

18. எதிலும் கலப்படம் செய்யாதே .. 
லேவி 19.19
1️⃣8️⃣.
9 உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள். 
ரோமர் 12:9

19. வரம்பு மீறியவனுக்கும் மன்னிப்பு .. 
லேவி 19.20-22
1️⃣9️⃣.
அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார். 
லூக்கா 17:4

20. முதிர்ச்சி அடையாத மரத்தின் கனிகளை அனுபவிக்காதே, 
லேவி 19.23-25
2️⃣0️⃣.
அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. 
1 தீமோத்தேயு 3:6


 21. ரத்தம் புசிக்காதே..
லேவி 19.26a
2️⃣1️⃣.
விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைகொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். 
அப்போஸ்தலர் 21:25


 22. குறி கேட்காதே..
லேவி 19.26b
2️⃣2️⃣.
அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான், வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான், அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன். 
ரோமர் 14:5
நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான், நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான், புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான். 
ரோமர் 14:6

23. மரித்தவர்களுக்காக உடம்பை வருத்தாதே.. 
லேவி 19.27-28
2️⃣3️⃣.
அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. 
1 தெசலோனிக்கேயர் 4:13
இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே. அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். 
1 தெசலோனிக்கேயர் 4:14

24. பிள்ளைகளை வேசித்தனம் பண்ண விடாதே .. 
லேவி 19.29
2️⃣4️⃣.
 பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென். 
1 யோவான் 5:21

25. அஞ்சனம் பார்க்காதே ..
லேவி 19.30-31
2️⃣5️⃣.
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. 
2 தீமோத்தேயு 4:2

26. முதியவரை கனம் பண்ணு .. 
லேவி 19.32
2️⃣6️⃣.
சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள், கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். 
ரோமர் 12:10

27. அந்நியருக்கு ஆறுதல் கொடு .. 
லேவி 19.33-34
2️⃣7️⃣.
பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள், அந்நியரை உபசரிக்க நாடுங்கள். 
ரோமர் 12:13
அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. 
எபிரேயர் 13:2

28 . அளவுகளில் உண்மையோடு இரு. 
லேவி 35-36
2️⃣8️⃣.
ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம். தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல. 
2 கொரிந்தியர் 10:12
நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மை பாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம். 
2 கொரிந்தியர் 10:13
உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை. நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம் வரைக்கும் வந்தோமே. 
2 கொரிந்தியர் 10:14
எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம். 
2 கொரிந்தியர் 10:15


 *கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 50A டூவிபுரம் 3 தூத்துக்குடி*
shalomjjj@gmail.com
WhatsApp: +91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA