கண்ணீர் 😹....TEAR 😹



 *கண்ணீர்* .. 

====================

உங்கள் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போது கண்ணீர் வடித்தால் அவர்கள் வாலிப வயது வரும் போது கண்ணீர் வடிக்க அவசியமில்லை... யாரோ?

 *Tears* ...

 _விசுவாசத்துடன் கண்ணீர்.._ 
When we cry, we need to cry out in faith and not despair so that our hearts can be made whole in Him. 

 _வேத வசனத்தில் கண்ணீர்_ .. 
The next time you cry. Remember the verses about tears in the Bible and be encouraged that God loves you. 

 _கண்ணீர் சந்தோசமாக மாறும்_ .. 
He cares about your tears and will wipe your tears away. 
Your tears will be turned into joy.

====================

 *இயேசு கிறிஸ்துவின் கண்ணீர்* .. 

 _ஆத்தும பாரம் நிறைந்தது_ ..  

அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது,
லூக்கா 19.41

 _தான் பூரண மனிதன் என்பதை நிரூபித்தது_ .. 

இயேசு கண்ணீர் விட்டார்.
யோவான் 11.35

 _கண்ணீர் நிறைந்த ஜெபத்திற்கு மாதிரியானது_ .. 

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
எபிரேயர் 5.7

====================

 *கண்ணீர் நம் கஷ்டத்தின் பிரதிபலிப்பு* .. 

 என் சிநேகிதர் என்னைப் பரியாசம் பண்ணுகிறார்கள். என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
யோபு 16.20

 என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன், இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
சங்கீதம் 6.6

====================

 *வேண்டுதல் என்னும் கண்ணீர்..* 

உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.
மாற்கு 9.24

====================

 *நன்றியறிதல் என்னும் கண்ணீர்* .. 

அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
லூக்கா 7.38, 44

====================

 *புத்தி சொல்லுதல் என்னும் கண்ணீர்* .. 

ஆனபடியால், நான் மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.
அப்போஸ்தலர் 20.31

அன்றியும், நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மன இடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்.
2 கொரிந்தியர் 2.4

ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுதும் கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
பிலிப்பியர் 3.18

====================

 *ஆத்துமாக்கள் மேல் பாரம் என்னும் கண்ணீர்..* 

என் கண்களிலிருந்து இரவும் பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும், என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
எரேமியா 14.17

 கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
சங்கீதம் 126.5

====================

 *மனஸ்தாபம் என்னும் கண்ணீர்..* 

ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவிரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள். அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.
எபிரேயர் 12.17

====================

 *மாய்மாலம் என்னும் கண்ணீர்..* 

நீங்கள் இரண்டாந்தரமும் இதைச் செய்து, கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள். ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதியார். அதை உங்கள் கைகளில் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவு மாட்டார்.
மல்கியா 2.13

====================

 *நினைவு கூறுதல் என்னும் கண்ணீர்* .. 

நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து,
2 தீமோத்தேயு 1.3

====================

 *தேவனுடைய கணக்கில் இருக்கும் நம் கண்ணீர்* .. 

 என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர், என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
சங்கீதம் 56.8

====================

 *நம் கண்ணீரை துடைக்கும் தேவன்* .. 

 அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார், கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார், கர்த்தரே இதைச் சொன்னார்.
ஏசாயா 25.8

 சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார், தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர்யாவையும் துடைப்பார் என்றான்.
வெளிப்படுத்தின விசேஷம் 7.17, 21.4


courtesy..
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA