வருகிறவர்..* SHALOM GOSPEL MOMENTS ஷாலோம் சுவிஷேச மணித்துளிகள்




            SHALOM GOSPEL MOMENTS
ஷாலோம் சுவிஷேச மணித்துளிகள் 

                     *வருகிறவர்..* 

என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும்* 
இந்த பாடலை கேளுங்கள்
பின் செய்தியை வாசியுங்கள்
ஆண்டவரை ஏற்றுக்கொள்ளுங்கள் 

https://drive.google.com/file/d/1uoOAcrtARHl3awRwtd8khc-JNybwl9TV/view?usp=sharing

*என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும்* 
இன்றே நன்று செய்ய வாரும்!
வெம்புண்போல் வெடித்து
நாறிக் கிடக்கும் நெஞ்சை ஆற்றவே *வாரும்* !

 *தேவனே இராஜாவே இராஜாவாகவே வாரும்* (2)
என் உள்ளம் இன்றே வாரும்!

முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாது
பாவி நானே கெட்டலைந்தேன்
காலம் சிறிதே கடமை பெரிதே
 *கருத்தூட்டும் இரட்சகனே* 


என் உடல் சக்தி கல்வி செல்வம் சுகம்
காணிக்கை ஏற்றருளும்
உள்ளம் உடைந்து பாதம் விழும்
இந்தப் பாவியைப் பொறுத்தருளும்..

                     வருகிறவர்..


 *Strong's g2064* 

 *erchomai* 

- Lexical: ἔρχομαι
- Transliteration: erchomai
- Part of Speech: Verb
- Phonetic Spelling: er'-khom-ahee
- Definition: to come, go.
- Origin: Middle voice of a primary verb (used only in the present and imperfect tenses, the others being supplied by a kindred (middle voice) eleuthomai el-yoo'-thom-ahee, or (active) eltho el'-tho, which do not otherwise occur) *to come or go* (in a great variety of applications, literally and figuratively).

================================

" *வருகிறவர்* " என்பது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமங்களில் மிக பிரதானமான நாமம் ஆகும்.. 

அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: *வருகிறவர் நீர்தானா?* அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.
லூக்கா 7.20


" *ஸ்தோத்திரிக்கப்பட்டவர்* " என்பது தேவனுடைய நாமங்களில் பிரதானமான நாமம் ஆகும். 

ஆகவே தான் இயேசு கிறிஸ்து தேவன் என்பதை ஊர்ஜிதம் செய்யும்படியாக பிரதான ஆசாரியன் இயேசுகிறிஸ்துவிடம் விசாரிப்பதை கவனியுங்கள்.. 

அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். 
அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். 
அதற்கு இயேசு: நான் அவர் தான்: மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் *வருவதையும்* நீங்கள் காண்பீர்கள் என்றார். 
மாற்கு 14:60-62

================================



*வருகிறவர்* .. 

 *இயேசு கிறிஸ்துவின் முதல் வருகை.. 
First Advent..* 

In his first advent, Christ came in the weakness of infancy to become the Suffering Servant of those who were hopelessly lost; in his second advent, he will come as the sovereign King of Kings and Lord of Lords.

1. கர்த்தருடைய நாமத்தினாலே *வருகிறவர்*.. தீர்க்கதரிசனம்.. 

 கர்த்தருடைய நாமத்தினாலே *வருகிறவர்* ஸ்தோத்திரிக்கப்பட்டவர், கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.சங் 118.26

2. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் *வருகிறார்* ..

சீயோன்குமாரத்தியே, மிகவும் களிகூரு. எருசலேம்குமாரத்தியே, கெம்பீரி. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் *வருகிறார்* . அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி *வருகிறவருமாயிருக்கிறார்*.
சகரியா 9.9

3. உன்னதத்திலிருந்து *வருகிறவர்*..

உன்னதத்திலிருந்து *வருகிறவர்* எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்:

பரலோகத்திலிருந்து *வருகிறவர்* 

 பரலோகத்திலிருந்து *வருகிறவர்* எல்லாரிலும் மேலானவர்.யோ 3.31

4. *சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவன்..* 

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய *சர்வவல்லமையுள்ள கர்த்தர்:* நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
வெளி 1.8

5. *கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர்* நிறைவேறுதல்.. 

முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! *கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர்* ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.
மாற்கு 11.9

6. : *எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர்,*

யோவான் ஸ்னானகன் சாட்சி.. 

யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: *எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர்,* ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
யோவான் 1.15

7. *வருகிறவர் நீர்தானா?*

யோவான் ஸ்னானகன் சந்தேகம்.. 

அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: *வருகிறவர் நீர்தானா?* அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.
லூக்கா 7.20

================================

 *இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை.. Second Advent..* 


1. *வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்*

அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் *வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்* என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 4.8

2. *வருகிறவர் ராஜ்யபாரம் பண்ணுகிறவர்..* 

இருக்கிறவரும் இருந்தவரும் *வருகிறவருமாகிய* சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.
வெளி 11.17

3. *வருகிறவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்* .. 

யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்குமுன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
வெளி 1.4

 *_Closing thought.._* 


 *வருகிறவர்* இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.
எபிரேயர் 10.37.. *ஷாலோம்*


courtesy 
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA