பவுலாகிய நான்..* அதிகாரமும் பொறுப்பும் *I PAUL MYSELF..* Authority & Responsibility
*பவுலாகிய நான்..*
*I PAUL MYSELF..*
========================
@ *பவுலாகிய நான்* என்ற வார்த்தை மிகவும் கவனிக்கக்கூடிய வார்த்தை.
@ *நானல்ல* கர்த்தரே சொல்லுகிறதாவது என்பது பவுலுக்கே உரிய பொறுப்புள்ள வார்த்தை ஆகும்.
@ பவுல் தேவனுடைய சுவிசேஷம் என்று ஆரம்பித்து ரோமர் 2 ல் *என் சுவிசேஷம்* என்று கூறுகிறார்.
@ பவுல் ஒரு இடத்தில் *என்னை* *பின்பற்றுங்கள்* என்றும் கூறுகிறதை கவனியுங்கள்.
@ *பவுலாகிய நான்* என்பது தேவனுடைய பொறுப்பை பூமியிலே வெளிப்படுத்த தேவனிடமிருந்து வெளிப்பாடு பெற்று இந்த வார்த்தையை உபயோகிக்கிறார்.
=============================
Paul the Apostle
Saul becomes Paul
change
When Saul reached Damascus, he was taken to Ananias, one of Jesus's disciples, where he got his sight back and was baptized as a Christian.
He spent the next three years studying the Jewish scriptures again to find explanations for the Christian teachings.
His experiences changed his view on Christianity completely.
In Acts 13:9, he begins to be called Paul.
This was the Hellenized version of the name Saul. He used his earlier education to explain his new faith to other people and to discuss things with people who had other beliefs.
He travelled around the Roman Empire, teaching others about Christianity, and wrote letters back and forth with the churches he helped to begin.
The letters contain many important parts of Christian teaching and have since been part of the New Testament of the Bible, coming between the Acts of the Apostles and the General Epistles.
It is not known whether Paul actually wrote all of these letters, or whether other people could have written the letters for him.
Parts of these letters are read at Mass as the second of two readings that come before the Gospel.
Although the Bible does not say how Paul died, various writers said Paul was put to death by orders of the emperor Nero in Rome, in 64/65 AD. He had the rights of Roman citizenship, which meant that he could be put to death by decapitation with a sword, rather than by crucifixion.
Some stories say he was decapitated.
பவுலாகிய நான்* The Authority & Responsibility...
*பவுலாகிய நான்* _என்கிற பொறுப்புள்ள வார்த்தை பவுல் எங்கெல்லாம் வெளிப்படுத்துகிறார்?_
1. *தன் கையெழுத்தில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது* ..
*பவுலாகிய நான்* என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.
1 கொரிந்தியர் 16.21
2. *தன் சுய ஆவிக்குரிய குணத்தில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது* ..
உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயுமிருக்கிற *பவுலாகிய நான்* கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
2 கொரிந்தியர் 10.1
3. *தன் ஐக்கியத்தில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது* ..
மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற *பவுலாகிய நானும்,*
கலாத்தியர் 1.1
4. *ஆரோக்கியமான உபதேசத்தில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது* ..
இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால், கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஐனமுமிராது என்று *பவுலாகிய நான்* உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கலாத்தியர் 5.2
5. *பாடுபடுவதில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது..*
இதினிமித்தம், *பவுலாகிய நான்* புறஜாதியாராயிருக்கிற உங்கள்பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.
எபேசியர் 3.1
6. *சுவிசேஷம் அறிவிப்பதில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது* ..
அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது. அதற்கென்றே *பவுலாகிய நான்* ஊழியக்காரனானேன்.
கொலோசெயர் 1.23
7. *சகோதரர் ஐக்கியத்தில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது* ..
*பவுலாகிய நான்* என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக ஆமென்.
கொலோசெயர் 4.18
8. *சபைகளை சந்திப்பதில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது* ..
ஆகையால், நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், *பவுலாகிய நானே* வர மனதாயிருந்தேன். சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.
1 தெசலோனிக்கேயர் 2.18
9. *சக சகோதரர்களை வாழ்த்துவதில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது* ..
*பவுலாகிய நான்* என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம். இப்படியே எழுதுகிறேன்.
2 தெசலோனிக்கேயர் 3.17
10. *இளம் வயது தலைமைத்துவத்தை அங்கீகரிப்பதில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது* ..
ஆகையால், *பவுலாகிய நான்* முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,
நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச்செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.
பிலேமோன் 1:8-9
11. *அன்பின் கடனை நிறைவேற்றுவதில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது* ..
*பவுலாகிய நான்* இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்த வேண்டுமென்று நான் உமக்குச் சொல்ல வேண்டியதில்லையே.
பிலேமோன் 1.19
பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுவதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு,
அப்போஸ்தலர் 28:30
மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ் யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக் கொண்டிருந்தான்.
அப்போஸ்தலர் 28:31
courtesy..
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment