இருதயமே ஆவிக்குரிய பெட்டகம்...* *Heart..A spiritual ARK*





 *இருதயமே ஆவிக்குரிய பெட்டகம்...* 

 *Heart..A spiritual ARK* 

===========================


இந்த பாடலை கேளுங்கள்..

https://youtu.be/-iMAbJbWCrA?si=V4fIHupjELXTP6pY




1. *இருதயத்தில் தேவனுடைய பிரமாணம்..* . 

 *God's law in heart..* 

 அந்த நாட்களுக்குப்பின் நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய *இருதயங்களில் அவைகளை எழுதுவேன்* . நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஐனமாயிருப்பார்கள்
எபிரேயர் 8:10

For this is the covenant that I will make with the house of Israel after those days, saith the Lord; I will put *my laws into their mind, and write them in their hearts:* and I will be to them a God, and they shall be to me a people: 
Hebrews 8:10

 *கீழ்ப்படிவோம்* .. 

===========================

2. *இருதயத்தில் விருத்தசேதனம்..* 

 *Circumcision in heart..* 

 உள்ளத்திலே யூதனானவனே யூதன், எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி *இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே* விருத்தசேதனம், இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது. 
ரோமர் 2:29

But He is a Jew, which is one inwardly; and *circumcision is that of the heart* , in the spirit, and not in the letter; whose praise is not of men, but of God. 
Romans 2:29

 *சுத்திகரிக்கப்படுவோம்* .. 

===========================

3. *இருதயத்தில் பரிசுத்தம்..* 

 *Sanctification in heart..* 

கர்த்தராகிய தேவனை உங்கள் *இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்.* உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். 
1 பேதுரு 3:15

But *sanctify the Lord God in your hearts:* and be ready always to give an answer to every man that asketh you a reason of the hope that is in you with meekness and fear: 
1 Peter 3:15

 *ஆயத்தமாயிருப்போம்* .. 

===========================

4. *இருதயத்தில் தீர்மானம்..* 

 *Decision in heart..* 

 தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் *இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு* , தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். 
தானியேல் 1:8

But Daniel *purposed in his heart* that He would not defile himself with the portion of the king's meat, nor with the wine which He drank: therefore He requested of the prince of the eunuchs that He might not defile himself. 
Daniel 1:8

 *நிலைத்திருப்போம்* .. 

===========================

5. *இருதயத்தில் குணம்..* 

 *Attribute in heart..* 

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய *இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே* உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
1 பேதுரு 3.4

But let it be the *hidden man of the heart,* in that which is not corruptible, even the ornament of a meek and quiet spirit, which is in the sight of God of great price. 
1 Peter 3:4

 *வெளிப்படுத்துவோம்* .

===========================

6. *இருதயத்தில் ஜாக்கிரதை..* 

 *Earnest care in heart..* 

அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட *ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின* தேவனுக்கு ஸ்தோத்திரம்.
2 கொரிந்தியர் 8.17

But thanks be to God, which put the same *earnest care into the heart of Titus for you* . 
2 Corinthians 8:16

 *வேறொருவருடைய காரியத்தில் உண்மையாயிருப்போம்* .. 

===========================

7. *இருதயத்தில் சகோதரர்கள்..* 

 *Brethren in heart..* 

என் கட்டுகளிலும், நான் சவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், *உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே* , உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது
பிலிப்பியர் 1.7

Even as it is meet for me to think this of you all, because *I have you in my heart;* inasmuch as both in my bonds, and in the defence and confirmation of the gospel, ye all are partakers of my grace. 
Philippians 1:7

 *சகோதர ஸ்நேகத்தில் நிலைத்திருப்போம்* . 

===========================

 *8. இருதயத்தில் ஆராதனை..* 

 *Worship in heart..* 

 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, *உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி* 
எபேசியர் 5.19

Speaking to yourselves in psalms and hymns and spiritual songs, singing and *making melody in your heart* to the Lord; 
Ephesians 5:19

 *ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம்* .. 

===========================

9. *இருதயத்தில் ஞானம்..* 

 *இருதயத்தில் ஞானமுள்ளவன்* விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும். 
நீதிமொழிகள் 16.21

*இருதயத்தில் ஞானமுள்ளவன்* கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறான்: அலப்புகிற மூடன் விழுவான்.
நீதிமொழிகள் 10.8

 *கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்* ..

===========================

10. *இருதயத்தில் சுத்தம்..* 

 *இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்* பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
மத்தேயு 5.8

 *தேவனைத் தரிசிப்பார்கள்.* 

 ==========================

11. *இருதயத்தில் தரித்துக்கொண்டிருத்தல்* .. 

 என் கட்டுகளிலும், நான் சவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் *இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே* , உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.
பிலிப்பியர் 1.7

 *ஜெபத்தில் நினைவு கூறுவோம்..* 

===========================

 *Closing message..* 

 *Finally brethren..* 

 *கடைசியாக சகோதரரே* .. 

 *_Bitterness in heart_ ..* 

 *_இருதயத்தில் கசப்பு._ .* 

உங்கள் *இருதயத்திலே கசப்பான* வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள். சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
யாக்கோபு 3.14

 But if ye have *bitter* envying and strife in *your hearts,* glory not, and lie not against the truth. 
James 3:14




courtesy
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA