விசுவாசிகள் ( பாவத்தின் விளைவுகளை ) அறியாமல் செய்கிற பாவம்.
( பாவத்தின் விளைவுகளை ) அறியாமல் செய்கிற பாவம்.
பாவத்தின் விளைவு...
There is Simple Interest & Compund Interest..
தனி வட்டி... கூட்டு வட்டி..
For Sin the result is not simple or compound it's something
to the power of N
பாவத்திற்கு விளைவு தனி விளைவு அல்ல, கூட்டு விளைவு அல்ல..
இது விசை அளவு ( to the power of N )
பாவத்தின் மன்னிப்பு..
அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
மத்தேயு 18:21
அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18.22
This is not 7 X 70 meaning 490
This is 7 to the power of 70 is 8235430000000
( or infinite)
நம் பாவத்தை ஆய்வு செய்வோம்..
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
லேவியராகமம் 4:1
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்ல வேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:
லேவியராகமம் 4:2
இஸ்ரவேல் சபையார் அறியாமல் செய்த பாவத்தை ஆண்டவர் அறியாமல் போகவில்லை.
ஒருவன் பாவம் செய்யும் போது, சபையார் எல்லாரும் பாவம் செய்தார்கள் என்று வேதம் கூறுகிறது.
மீட்கப்பட்டவர் நடுவில் வாழ்கின்ற ஒரே ஒருவன் பாவம் செய்து விட்டாலோ அந்த பாவம் முழு சபையாரையும் பாதிக்கின்றது.
ஆகான் என்ற ஒரே மனிதன் தேவனுடைய விதிகளை மீறி விட்டதினால் அனைத்து இஸ்ரவேல் சமூகமும் தோல்வி கண்டது.
யோசுவா 7.11 இல் மீட்கப்பட்டவர்கள் மீறினார்கள்.
இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள். நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள். சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும், வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே.
யோசுவா 7.11
இஸ்ரவேல் சபையார் மீட்கப்பட்டவர்கள் என்ற நிலையில் இருந்து வெகு சீக்கிரமாக அவர்கள் விழுந்து போகிறார்கள்.
மீட்கப்பட்டவர்கள் தங்கள் மனித குணம் இழந்து மீறுதல் செய்கிறார்கள்.
ஒருவரோ அல்லது ஒரு சிலரோ செய்யும் தவறுகள் அனைவரையும் பாதிக்கின்றது.
குடும்பத் தலைவன் செய்யும் தவறுகள் அவனது தீய பழக்கங்கள் அவனையும் அவனுடைய சரீரத்தையும் மட்டுமல்லாமல் அவனது அன்பிற்குரிய மனைவி , பிள்ளைகள் , பிள்ளைகளின் வருங்காலம் அனைத்தையுமே பாதிக்கிறது.
ஆயினும் தவறிய அனைவருக்கும் கிருபை கொடுக்க தேவன் வாஞ்சிக்கிறார்.
இரக்கம் வழங்க முன் வருகிறார்.
ஓர் புதிய அத்தியாயம் அவர்களுடைய வாழ்க்கையில் துவங்கட்டும் என்று ஓர் சந்தர்ப்பத்தை கொடுக்க முன் வருகிறார்.
லேவியராகமம் 4:13 முதல் 21 வரை வாசியுங்கள்.
லேவியர் ஆகமம் 4:13-ல் சபையார் அனைவரும் செய்த பாவம் அறியாமையினால் செய்த பாவம் என்று எழுதப்பட்டுள்ளது.
இது பாவம் செய்வதினால் ஏற்படக்கூடிய விளைவுகளின் அறியாமையே அன்றி வேறில்லை.
ஏதேன் தோட்டத்தில் புசிக்கக் கூடாது என்ற கனியினை புசித்து தவறு செய்த விளைவினால் ஆதாமும் ஏவாளும் வெட்கம் பயம் துக்கம் என்பதினால் ஓட ஓட துரத்தப்பட்டார்கள்.
தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தினார் என்பதை விட அவர்களது குற்றமுள்ள மனசாட்சி பரிசுத்தம் உள்ள ஆண்டவரின் பக்கத்தில் நெருங்க முடியாதபடி அவர்களை துரத்தி விட்டது என்று கூறுவது சரியான கருத்து.
தவறு செய்யும் பொழுது ஒளிந்து ஒளிந்து வாழ்வதே மனித இயல்பு.
ஏதேன் தோட்டத்தில் பாவம் அறியாமையினால் செய்யப்பட்டது.
அதாவது பாவம் செய்த பின்னர் ஏற்படும் விளைவுகளை உணராமல் பாவம் செய்யப்பட்டது.
பாவம் செய்த பின்னர் விளைவுகள் தெரிய ஆரம்பித்தது.
எனவே பாவத்தை மறைக்க முயற்சி செய்கின்றார்கள்.
லேவியர் ஆகமம் 4:13 ல் காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாய் இருக்கிறதினால் என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றறவாளிகளானால்,
லேவியராகமம் 4:13
பாவத்தை செய்து முடிக்கும் வரை விரும்பி விரும்பி அதன் பின்னால் மனிதன் ஓடுகிறான்.
செய்து முடித்த பின்னர் விரும்பி ஓடிய பாவத்திலிருந்து தப்பி ஓட முயற்சி செய்கிறான்.
ஆயினும் பாவம் மடியில் இருந்து அத்தனை எளிதாக உதறி கொட்டப்படக் கூடிய ஒன்று அல்ல.
தேளின் விஷத்தை விட வீரியம் கொண்டு செய்தவனை துரத்தி துரத்தி கொட்டக் கூடியதாகவே பாவம் இருக்கிறது.
உன் பாவம் உன்னை தொடர்ந்து பிடிக்கும் என்று பரிசுத்த வேதம் கூறுகிறது.
ஆதியாகமம் 4 7.
செய்த பாவம் தெரிய வரும்போது என்பது செய்த பாவம் தெரிய வருகின்றது என்பதாகும் .
மனுஷரின் கண்களுக்கு அல்ல
“ நீர் என்னை காண்கிற தேவன்” என்று அழைக்கப்பட்ட தேவனுடைய கண்களுக்கு பாவம் தெரிய வருகிறது.
பாவம் செய்த மனிதன் பாவத்தை ஒப்புக்கொள்ளும் போது சபையார் யாவரும் தவறு செய்தவர்களை இனி தவறு செய்யாமல் வாழ வைக்க உதவிக்கரம் கொடுக்க முன்வர வேண்டும்.
பாவம் செய்தோர் இனிமேல் பரிசுத்தமாக வாழ சபை மக்கள் ஒன்றாக சேர்ந்து வந்து உதவி செய்ய வேண்டும்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர். ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பிமீந்திருக்கிறோம். இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள். இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று பிரார்த்தித்தேன்.
எஸ்றா 9:15
அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.
எஸ்றா 8:21
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
யாக்கோபு 5:16
@ பொறுப்புள்ள தேவ பிள்ளைகள் தலைமைத்துவத்தின் பிரதிநிதிகள் தங்கள் ஆவியில் மட்டும் அல்ல தங்கள் ஆத்துமாவையும் சரீரத்தையும் ஆரோக்கியமாக வைக்க வேண்டும்..
@ ஆத்துமா ஆரோக்கியமாக தேவை இல்லாத கவலைகள் மற்றும் இச்சைகளை தவிர்க்க வேண்டும்..
@ சரீரம் ஆரோக்கியமாக சில தவறான உணவுகளை இச்சிப்பதை தவிர்க்க வேண்டும்..
Courtesy
The Christian Believers Assembly
50A Third Street Toovipuram
Tuticorin 628 003
Shalomsteward1@gmail.com
Whatsapp: +91 9965050301
Comments
Post a Comment