தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்... யாரெல்லாம்? நான் கர்த்தர்
தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் ... நான் கர்த்தர்
அறுப்புண்டு போவான் என்கிற ஓர் தீர்ப்பு வேத புத்தகத்தில் பழைய ஏற்பாடு பக்கங்களில் பல இடங்களில் வருகிறது.
வேதத்தில் முதலில் காணப்படும் பகுதி..
First 🥇 appearance in the Bible..
நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
ஆதியாகமம் 17.14
நம் அவயவங்களில் அதாவது நாவு, இருதயம் ஆவிக்குரிய விருத்த சேதனம் பண்ணப்பட வேண்டும்.
அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத்தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து,
ஏசாயா 6:6
அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான்.
ஏசாயா 6:7
ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
ரோமர் 2:28
உள்ளத்திலே யூதனானவனே யூதன், எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம், இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.
ரோமர் 2:29
Second 🥇 appearance in the Bible..
புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள். முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும். முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான்.
யாத்திராகமம் 12.15
நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல. கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
1 கொரிந்தியர் 5:6
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.
1 கொரிந்தியர் 5:7
ஆகையால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
1 கொரிந்தியர் 5:8
யாத்திரை ஆகமம் 17 ம் அதிகாரத்தில் 4 முறை காணப்படுகிறது..
1......
பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான்.
லேவியராகமம் 17.4
2.....
அதை ஆசரிப்புக் கூடார வாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல்.
லேவியராகமம் 17.9
3......
இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
லேவியராகமம் 17.10
4......
சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது, இரத்தம் ஜீவனுக்குச் சமானம், ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம், சகல மாம்சத்ததின் உயிரும் அதின் இரத்தந்தானே, அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
லேவியராகமம் 17.14
1. இரகசிய பாவங்கள்..
இது மனித தீர்ப்பு அல்ல தேவ தீர்ப்பு ஆகும். மனிதரின் கவனத்திற்குள் வந்த தவறுகளுக்கு தப்பிதங்களுக்கு மனித தீர்ப்பு கொடுக்கப்படுகின்றது.
ஆனால் எந்த மனிதரின் பார்வையிலும் படாமல் மனிதரின் கவனத்திற்கு உட்படாமல் எத்தனையோ தவறுகளும் தீமைகளும் தப்பிதங்களும் அமைதலாக அந்தரங்கமாக இடம்பெற்று வருகின்றன.
அவைகளை மனித கண்கள் காண முடியவில்லை.
ஆனால் கர்த்தரின் கண்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.
மறைவான பாவங்கள் ரகசிய பாவங்கள் செய்கிறவர்கள் தேவ தீர்ப்பு பெறுகிறார்கள் அந்த தீர்ப்பு அறுப்புண்டு போவதே ஆகும்.
அது மாத்திரம் அல்ல ஒரு பலியை கர்த்தரின் சமூகத்தில் ஆசாரியரின் பார்வையில் குடும்பம் அனைத்தையும் கலந்து கொண்டு செய்யாமல் தன் இச்சையாக தன் இஷ்டப்படி பாளையத்திற்கு புறம்பாக தேவ சமூகத்திற்கு விலகி சென்று ஒருவன் செலுத்துகின்றான். அது ரகசிய பாவம்.
ரகசிய பாவங்கள் இடம்பெறும் போது அறுப்புண்டு போவான் என்ற தீர்ப்பும் தொடர்ந்து வருகிறது.
2. பரிசுத்த தூப வர்க்கம் தவறாக தயாரித்து தவறாக பயன்படுத்தல்..
அடுத்து..அறுப்புண்டு போவான் என்கிற பகுதி பரிசுத்த தூப வர்க்கம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
பரிசுத்த தூபவர்க்கம் மிகவும் வாசனை நிறைந்தது
மனிதர் பொதுவாக அந்த வாசனையை விரும்புவார்கள்.
எனவே அதனை ஒரு வியாபார பொருளாக மாற்ற வியாபார நோக்கத்திற்காக ஒருவன் தயாரிக்க ஆரம்பிக்கின்றான்.
யாருக்குமே தெரியாமல் ஆசரிப்பு கூடாரத்திற்கே உரித்தான தூப வர்க்கத்தை வர்த்தகத்தில் பயன்படுத்தி வருமானம் தேட ஆரம்பிக்கின்றான்.
அவன் எவருக்கும் தெரியாமல் அமைதலாக அந்தரங்கமாக தூபவர்க்கத்தை தயாரிக்கின்றான்.
அப்படி செய்கின்ற ஒருவனை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
ஆனால் பரிசுத்தராகிய தேவனின் கண்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றன அவன் அறுப்புண்டு போவான் என்று யாத்திராகமம் 30 37-38 ல் என்ன கூறுகிறார் என்பதை கவனியுங்கள்....
இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது.
இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.
யாத்திராகமம் 30:37
இதற்கு ஒப்பானதை முகருகுவதற்காக செய்கிறவன் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டு போகக்கடவன் என்று கர்த்தர் கூறுகிறார்.
ஆகவே அறுப்புண்டு போவான் என்கிறதான இந்த தேவனுடைய நிபந்தனை பாவம் துணிகரமாக செய்யும் போது. குறிப்பிடப்படுகிறது .
அவன் செய்யும் பாவம் அதாவது கர்த்தரை நிந்திக்கும் பாவம்.
ரகசியமான பாவங்கள் ஒருவன் செய்யும்போது ஒரு விசுவாசி செய்யும் போது கர்த்தர் நிந்திக்கப்படுகிறார்.
தொடர்ந்து அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டை பண்ணுகிறான் .
கர்த்தர் அவனுடன் பேசும் பொழுது தன் மனதை கல்லாக்குகிறான்.
மாத்திரம் அல்ல கர்த்தரின் 10 கற்பனைகளை மீறும் போது ஒரு கற்பனைகளை மீறினாலும் 10 கற்பனைகளும் மீறப்பட்டதற்கு சமமாகும்.
அறுப்புண்டு போவான் என்பதன் பொருள் மனதிற்கு கஷ்டமான பொருள் .
ஆனாலும் ரகசிய பாவங்களில் ஈடுபடுகிறவன் அதில் நீடித்துக் கொண்டே இருக்கிறவன் அவனுடைய தலையின் மீது தேவனுடைய கை அவனை அடிப்பதற்காக நீட்டப்பட்டு கொண்டு தொடர்ந்து செல்கிறது.
எந்த நேரமும் எந்த இடத்திலும் அவன் அடிக்கப்பட போகிறான்.
அந்த அடி மரண அடியாக இருக்கும் என்பதே ஆகும்.
நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ நீ நன்மை செய்யாது இருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும் என்று கர்த்தர் காயினை பார்த்து ஆதியாகமம் 4.7 கூறுகிறார்.
கர்த்தருக்கு என்று பிரித்தெடுக்கப்பட்ட வாழ்வை காத்து நடக்கின்றவர்கள் இடம் கொள்ளாமல் போகும் மட்டும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் .
முழு இருதயத்தோடும் முழு சிந்தையொடும் முழு பலனோடும் முழு ஆத்துமாவோடும் கர்த்தாதி கர்த்தருக்கு தங்கள் வாழ்நாட்களை அர்ப்பணித்து வாழ்கின்றவர்களுக்கு நிகழ்காலம் ஆசீர்வாதம் ஆனதாகவும் வருங்காலம் நம்பிக்கைக்கு உரியதாகவும் அமைகிறது.
முப்பதும் அறுபதும் நூறுமாக அவர்கள் கைகளின் பிரயாசத்தில் அறுவடைகளை அவர்கள் காண்கிறார்கள்.
நன்மையும் கிருபையும் அவர்களை தொடர்ந்து கொண்டு செல்கிறது.
சிந்திப்போம்..
நம்முடைய நித்திய சுதந்திரம்..
கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை, அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள், துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.
சங்கீதம் 37.28
பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
சங்கீதம் 37.9
நினைவு கூறுவோம்...
ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோன தேவ குமாரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து..
இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார், அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும், ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார், என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.
ஏசாயா 53.8
courtesy..
WhatsApp: +91 9965050301
Comments
Post a Comment