ஒருமனம்* *தவறான* *ஒருமனம்* night watch ⌚ message @ சாத்தான் பிரிந்திருக்க மாட்டான்
*Oneness* ..
*Wrong* " *oneness"..*
*ஒருமனம்* ..
*தவறான* " *ஒருமனம்* ..
ஆவியானவர் தன் செயலுக்காக
ஒரு மனம் அருளுகிறார்..
சாத்தான் தன் செயலுக்காக *ஒரு மனதை* பயன்படுத்துகிறான்.
சாத்தான் பிரிந்திருக்க மாட்டான்..
இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம், தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. மத்தேயு 12.26
ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால்,அற்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே. மாற்கு 3.24
ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே.
மாற்கு 3.25
சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால்,அவன் நிலைநிற்கமாட்டாமல்,அழிந்துபோவானே. மாற்கு 3.26
அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம், தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோம். லூக்கா 11.17
சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே. லூக்கா 11.18
*ஒரு மனம் அவசியம்*
1. *Oneness* in church building..
ஆலயம் கட்டுவதில் *ஒருமனம்* ..
அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்தும்படி யெசுவாவும் அவன் குமாரரும் சகோதரரும், கத்மியேலின் அவன் குமாரரும், யூதாவின் குமாரரும், எனாதாத்தின் குமாரரும், அவர்கள் சகோதராகிய லேவியரும் *ஒருமனப்பட்டு* நின்றார்கள்.
எஸ்றா 3:9
2. *Oneness* in receiving Holy Spirit..
ஆவியானவர் பெற்றுக்கொள்வதில் *ஒருமனம்* ..
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
அப்போஸ்தலர் 2:1
3. *Oneness* in praying..
ஜெபிப்பதில் *ஒருமனம்* ..
அவர்கள் அதைக்கேட்டு, ஓருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு; கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.
அப்போஸ்தலர் 4:24
4. *Oneness* in fellowship..
ஐக்கியத்தில் *ஒருமனம்* ..
விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
அப்போஸ்தலர் 4:32
5. *Oneness* in suffering..
படுபடுவதில் *ஒருமனம்* ..
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட,
அப்போஸ்தலர் 15:25
எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது.
அப்போஸ்தலர் 15:26
6. *Oneness* in praising..
மகிமைப்படுத்துவதில் *ஒருமனம்* ..
நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு,
பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.
ரோமர் 15:5-6
7. *Oneness* in spiritual life..
ஆவிக்குரிய ஜீவியத்தில் *ஒருமனம்* ..
மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும் இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
1 பேதுரு 3:8-9
Wrong *oneness* in Acts of the apostles..
அப்போஸ்தல நடபடிகைகளில் தவறான *ஒருமனம்* ..
1. *Oneness* in lying..
_பொய் சொல்வதில்_ *ஒருமனம்* ..
பேதுரு அவளை நோக்கி; கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் *ஒருமனப்பட்டதென்ன* ? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்களும் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டு போவார்கள் என்றான்.
அப்போஸ்தலர் 5:9
2. *Oneness* in stoning stephen..
_ஸ்தேவானை கல்லெறிவதில்_ *ஒருமனம்* ..
அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, *ஒருமனப்பட்டு* அவன்மேல் பாய்ந்து,
அப்போஸ்தலர் 7:57
3. *Oneness* in praising Herod..
*ஏரோதை* _புகழ்ந்து பேசுவதில் ஒருமனம்.._
அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவும் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் *ஒருமனப்பட்டு* , அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர் 12:20
4. *Oneness* in rising against Paul..
_பவுலுக்கு எதிராக எழும்புவதில்_ *ஒருமனம்* ..
கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் *ஒருமனப்பட்டு* , பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்;
அப்போஸ்தலர் 18:12
5. *Oneness* in plotting against Paul...
_பவுலுக்கு எதிராக சதி செய்வதில்_ *ஒருமனம்* ..
பட்டணம் முழுவதும் கலகதத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய்வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, *ஒருமனப்பட்டு* அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள்.
அப்போஸ்தலர் 19:29
கர்த்தர்
அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார். அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.
யோபு 23.13
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment