லூக்கா எழுதின சுவிசேஷத்தில் ஐந்து ஐசுவரியவான்கள்*




 *லூக்கா எழுதின சுவிசேஷத்தில் ஐந்து ஐசுவரியவான்கள்* 


லூக்கா கிரேக்க மக்களுக்காகவும் அறிவாற்றல் மிக்க ஒரு சமுதாயத்துக்காகவும் தனது சுவிசேஷத்தை எழுதுகிறார். 
கிரேக்க அறிஞர்கள் எல்லாரும் பூரணமான ஒரு மனிதனை உருவாக்குவதை குறித்து சிந்தித்தார்கள் எழுதினார்கள்.
 கிரேக்கர்கள் மனிதனின் சாயலிலே கடவுளை உண்டாக்கினார்கள். 
அப்பல்லோ வீனஸ் அத்தேனா டயானா இவைகள் எல்லாமே கிரேக்க மக்களால் உருவாக்கப்பட்டவை. 
மகா அலெக்ஸாண்டர் இந்த கலாச்சாரத்தை, தான் கைப்பற்றிய தேசங்களுக்குள் எல்லாம் பரவச் செய்தான். 
கிரேக்க மொழி அந்நாட்களிலே உலகத்தின் மொழியாய் இருந்தது. 
அலெக்சாண்ட்ரியா பட்டினத்திலேயும் எகிப்திலேயும் பழைய ஏற்பாடு கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதைத்தான் செப்துவகிந்தா என்று நாம் சொல்லுகிறோம். 
அதுவே இன்றைக்கும் கிடைக்கக்கூடியதாய் இருக்கிற சிறந்த கிரேக்க பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு. 
புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டது. 
எல்லா மக்களுக்கும் நற்செய்தி எடுத்துச் செல்லப்படுவதற்காக கிரேக்க மொழி உலகம் மொழியாய் இருந்தது. 
கிரேக்க கலாச்சாரம் கிரேக்க மொழி கிரேக்க கொள்கை மிக சிறந்தவையாக இருந்தாலும் அவை மனிதனை சிறந்தவனாக மாற்ற முடியவில்லை. 
கிரேக்க மக்கள் எதிலேயும் ஒரு திருப்தியை பெறவில்லை. 
ஆவிக்குரிய காரியத்தை அவர்கள் இழந்து போனார்கள். 
இந்த உலகமே அவர்களுடைய விளையாட்டு மைதானம் ஆகவும் கல்வி கற்கும் இடமாகவும் பணி செய்யும் இடமாகவும் கல்லறை தோட்டமாகவும் மாறியது.

 இஸ்ரவேல் மக்களுடைய சமயமானது ஒரு பரிசையனைத் தான் உருவாக்க முடியும்.

 ரோம சாம்ராஜ்யத்தின் வல்லமையானது ஒரு ராயனைத் தான் உருவாக்க முடியும்.

 கிரேக்கர்களின் கொள்கையானது மகா அலெக்ஸாண்டரை போன்ற ஒரு ராட்சசனை தான் உருவாக்க முடியும். 

ஆனால் இவர்கள் அனைவரும் மனதளவிலேயே ஒரு குழந்தையாக தான் இருந்தார்கள்..

லூக்கா எழுதின சுவிசேஷத்தின் விசேஷித்த காரியங்களை ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

 1.  இது நான்கு சுவிசேஷங்களிலே ஒன்றாக இருந்தாலும் மத்தேயுவும் மாற்குவும் எழுதாமல் விட்ட அநேக காரியங்களை லூக்கா எழுதி இருக்கிறார்.

 2.  லூக்கா கிறிஸ்து பிறப்பு தொடர்பான பாடல்களை கொடுத்து இருக்கிறார். 

3. இயேசு கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பை குறித்த நீண்ட சரித்திரத்தை தெளிவாய் சொல்லி இருக்கிறார். 

4. லூக்கா 20 அற்புதங்களை சொல்லி இருக்கிறார் அதிலே ஆறு அற்புதங்கள் வேறு எந்த சுவிசேஷத்திலும் சொல்லப்படவில்லை. 23 உவமைகளை குறித்து எழுதி இருக்கிறார் அதிலே 18 உவமைகள் வேறு எங்கும் காணப்படவில்லை. 

இந்த சுவிசேஷத்தில் தானே கெட்ட குமாரன் உவமையும் நல்ல சமாரியன் உவமையும் நாம் பார்க்கிறோம். 

உயிர்த்தெழுந்த இயேசு எம்மாவுக்கு சீடர்களோடு நடந்து சென்றதை இவர் மட்டுமே குறிப்பிடுகிறார்.

 உயிர்த்தெழுதலுக்குப் பிறகும் இயேசு மனிதனாக காட்சி அளித்ததை தெளிவு படுத்துகிறார். 
அவர் ஆவி மட்டும் உயிரோடு எழும்பவில்லை. 
சரீரத்தோடு இருந்தார் என்பதையும் தெளிவு படுத்துகிறார் லூக்கா. 

லூக்கா சுவிசேஷம் முழுவதிலும் மனிதாபிமானம் தெளிவாகத் தெரிகிறது. இயேசு கிறிஸ்துவின் மனித தன்மையையும் இது தெளிவாக காட்டுகிறது. 
மனிதனுடைய பாடுகளை நன்கு அறிந்திருந்த முதல் நூற்றாண்டு வைத்தியன் ஆகிய லூக்காவின் மனதுருக்கமும் வெளிப்படுத்துகிறது. 
மருத்துவத்தின் தகப்பன் என்று அழைக்கப்படுகிற ஹிப்போகிரேடஸ் என்பவரை விட அதிகமான மருத்துவ வார்த்தைகளை லூக்கா பயன்படுத்தி இருக்கிறார்.

லூக்கா நற்செய்தியில் தான் குறிப்பிட்டுள்ள 5 ஐசுவரியமுள்ள மனிதர்கள் அதன் சத்தியங்கள்..

1. *ஐசுவரியமுள்ள ஒருவன்..* 
( பெயர் இல்லை )

அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: _ஐசுவரியமுள்ள ஒருவனுடைய_ நிலம் நன்றாய் விளைந்தது.பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது, நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். 
தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். 
லூக்கா 12:16, 19-20

 *உபதேசம்* : _தேவனிடத்தில் ஐசுவரியம்.._ 

தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். 
லூக்கா 12.21


2. *ஐசுவரியவானாகிய ஒரு மனுஷன்*
     ( பெயர் இல்லை )

பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: _ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு_ ஒரு உக்கிராணக்காரன் இருந்தான், அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள். 
லூக்கா 16:1-8

 *உபதேசம்* : _வேறொருவனுடைய காரியத்தில் உண்மை.._ 

வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? 
லூக்கா 16:12


3. *ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன்..* 
         ( பெயர் இல்லை )

 _ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன்_ இருந்தான், அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.
லாசரு என்னும் பேர்கொண்ட ஒருதரித்திரனும் இருந்தான், அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, 
லூக்கா 16:19-20

 *உபதேசம்* : _உயிரோடிருக்கும் போது நித்தியதை குறித்த ஞானம் வேண்டும்.._ 

அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள், இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். 
லூக்கா 16:25


4. *ஐசுவரியமுள்ள தலைவன் ஒருவன்.* .
      ( பெயர் இல்லை )

அப்பொழுது _தலைவன் ஒருவன்_ அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 
இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு, உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். லூக்கா 18: 18-25

 *உபதேசம்* : _இரட்சிப்பு தேவனுடையது.._ 

அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார். 
லூக்கா 18:26-29

5. *ஐசுவரியவானுமாயிருந்த சகேயு..*
       ( பெயர் உண்டு )

ஆயக்காரருக்குத் தலைவனும் _ஐசுவரியவானுமாயிருந்த சகேயு_ என்னப்பட்ட ஒரு மனுஷன்,
இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், 
அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். லூக்கா 19.1-7

 *உபதேசம்* : _இரட்சிப்பின் கிரியைகள் வேண்டும்.._ 

சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். 
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது, இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே. 
லூக்கா 19:8-9


 *சிந்திக்க* :

*ஐசுவரியவானாகவேண்டுமென்று* பிரசாயப்படாதே, சுயபுத்தியைச் சாராதே.நீதி 23.4

தன் *ஐசுவரியத்தை* நம்புகிறவன் விழுவான்: நீதிமான்களோ துளிரைப் போலே தழைப்பார்கள்.நீதி 11.28

 மேலும் *ஐசுவரியவான்* தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.மத் 19.24

 *தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல்* , தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.
லூக்கா 12.21.. 

 என் தேவன் *தம்முடைய ஐசுவரியத்தின்படி* உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.பிலி4.19

 அவருடைய *கிருபையின் ஐசுவரியத்தின்படியே* இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.எபே 1.7

ஆ! *தேவனுடைய ஐசுவரியம்,* ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புக்கள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!ரோ11.33

courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
meetshalomsteward@gmail.com
Whatsapp:+91 9965050301

https://chat.whatsapp.com/ISfghi0WK2V7Vh4f1N7yl8


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA