பிதாவே இவர்களுக்கு மன்னியும்..* *பாவ நிவாரண பலி* மேஜை நினைவு கூறுதல் தியானம்
*WORSHIP THOUGHT*
*பிதாவே இவர்களுக்கு மன்னியும்..*
*பாவ நிவாரண பலி*
@ ஆராதனை என்பது உன்னதமான கனம் மேன்மை நம் செயலினாலும் உணர்வினாலும் தகுதி வாய்ந்த ஒருவருக்கு செலுத்துவதாகும்..
@ ஆராதனை கட்டளை அல்ல..
ஆராதனை நம் வாழ்க்கை முறை..
@ கர்த்தருடைய பந்தி கிறிஸ்துவின் பாடு மரணத்தை நினைவு கூறும் மணித்துளிகள்..
@ கர்த்தருடைய பந்தி நம் உரிமை அல்ல.
கர்த்தருடைய பந்தி கட்டளையாகும்.
@ சகோதர சபையில் நாம் ஆராதனை, கர்த்தருடைய பந்தி இரண்டையும் இணைத்து கர்த்தருக்கு மகிமை செலுத்துதல் ஆராதனையின் மேன்மையான பலி ஆகும்..
*தியான வசனம்..*
அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
லூக்கா 23:34
@ சிலுவையில் மொழிந்த இந்த முதல் வார்த்தைக்கு நிழலான பலி பாவ நிவாரண பலி.
@ இயேசு கிறிஸ்து பூமியில் இருந்த நாட்களில் தனக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு என்று சொல்லி மன்னித்தார்.
சிலுவையில் பிதாவை நோக்கி இவர்களை மன்னிக்க வேண்டுதல் செய்கிறார்
@ காரணம் இந்த முதல் வார்த்தை ஒரு நிழலான பலியை நிஜமாக்குகிறது.
@ பலி கிறிஸ்து. பலிபீடம் கிறிஸ்து. பலி மிருகம் கிறிஸ்து.
பலியை தானாக ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே பலியை அங்கீகரிக்கும் ஏற்றுக்கொள்ளும் பிதாவிடம் வேண்டுகிறார். தன்னை பலியாக சமர்ப்பணம் செய்கிறார்.
*பாவ நிவாரண பலியின் 4 நிபந்தனைகள்* ..
1. *ஒருவன்* ..
*தனிப்பட்ட ஆராதனை..*
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்ல வேண்டியது என்னவென்றால், *ஒருவன்* கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை *அறியாமையினால்* மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:
லேவியராகமம் 4:2
2. *சபையார்* ..
*சபையாக ஆராதனை..*
இஸ்ரவேல் *சபையார்* எல்லாரும் *அறியாமையினால்* பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றறவாளிகளானால்,
லேவியராகமம் 4:13
3. *பிரபு* ..
*சபை பொறுப்பாளர்..*
ஒரு *பிரபு* தன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, *அறியாமையினால்* செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றறவாளியானால்,
லேவியராகமம் 4:22
4. *சாதாரண ஜனங்களில் ஒருவன்..*
*முழு சபையும்..*
*சாதாரண ஜனங்களில்* ஒருவன் *அறியாமையினால்* கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததை செய்து, பாவத்துக்குட்பட்டு குற்றவாளியானால்,
லேவியராகமம் 4:27
_அறியாமை என்கிற நிபந்தனை 4 இடங்களிலும் காணப்படுகிறது_ ..
@ பூரண ஆராதனைக்கு அனைவரும் பொறுப்பாகிறார்கள்.
@ அனைவருடைய அறியாமை பாவத்திற்கும் சிலுவையில் நிறைவேற்றப்பட்ட பாவ நிவாரண பலி போதுமானதாகிறது.
*பலிகள் மேல் கைகளை வைக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை..*
*ஒருவன்* ..
அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் *தன் கையை வைத்து,* கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.
லேவியராகமம் 4:4
*சபையார்* ..
சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் *தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்* ,; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்ல வேண்டும்.
லேவியராகமம் 4:15
*மூப்பர்*
அந்தக் கடாவின் தலைமேல் *தன் கையை வைத்து,* கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்லக்கடவன், இது பாவநிவாரணபலி.
லேவியராகமம் 4:24
*சாதாரண ஜனங்களில் ஒருவன்..*
பாவநிவாரணபலியின் தலைமேல் *தன் கையை வைத்து,* சர்வாங்க தகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக் கொல்லக்கடவன்.
லேவியராகமம் 4:29
@ தேவன் தன்னோடு ஜனங்கள் நெருங்கி சேர்வதற்கு ஏற்படுத்தப்பட்ட நியமம் பலி தான்..
@ எந்த காலத்திலும் தேவன் ஜனங்களை பலியின் மூலமாகவே ஏற்றுக்கொள்ளுகிறார். அங்கீகரிக்கிறார்.
*ஆராதனை சிந்தனை :*
நம்முடைய பலி எது?
_நாம் சிலுவை பலியினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்குறோம்._
_சக சகோதரர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வதே தேவன் விரும்பும் அங்கீகரிக்கும் பலியாகும்._
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
எபேசியர் 4:32
shalomsteward1@gmail.com
Whatsapp:+91996505031
Comments
Post a Comment