சந்திரன்.. சபைக்கு ஒப்புமை
*சந்திரன்.. சபை*
===========================
@ சந்திரன் விசுவாசிகளுக்கு ( சபைக்கு ) ஒப்பனையாயிருக்கிறது.
@ சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியை பெற்றுக்கொண்டு பிரகாசிக்கிறது போல விசுவாசியும் ( சபை ) நீதியின் சூரியனாகிய கிறிஸ்துவிலிருந்து ஜீவ ஒளியை பெற்றுக்கொண்டு பிரகாசிக்க வேண்டும்..
===========================
@ The Moon is Earth's only natural satellite.
@ At about one-quarter the diameter of Earth (comparable to the width of Australia),[15] it is the largest natural satellite in the Solar System relative to the size of its planet,[f] the fifth largest satellite in the Solar System overall, and is larger than any known dwarf planet.
@ Orbiting Earth at an average distance of 384,400 km (238,900 mi),[16] or about 30 times Earth's diameter, its gravitational influence slightly lengthens Earth's day and is the main driver of Earth's tides.
@ The Moon is classified as a planetary-mass object and a differentiated rocky body, and lacks any significant atmosphere, hydrosphere, or magnetic field.
@ Its surface gravity is about one-sixth of Earth's (0.1654 g); Jupiter's moon Io is the only satellite in the Solar System known to have a higher surface gravity and density.
===========================
1. *சந்திரன் அழகுள்ளது..*
சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிக்கிற இவள் யார்?
உன்னதப்பாட்டு 6:10
*சபை அழகுள்ளது..*
ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரணமகிமையுள்ளவள், அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.
சங்கீதம் 45:13
சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படுவாள், அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.
சங்கீதம் 45:14
எபே 5.26-33, 1 பேது 3.3-7
----------------------------------------------------
2. *சந்திரன் உறுதியுள்ளது..*
சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)
சங்கீதம் 89:37
*சபை உறுதியுள்ளது..*
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
அப்போஸ்தலர் 2:42
கொலோ 2.5, 1 பேது 5.9
----------------------------------------------------
3. *சந்திரன் மகிமையுள்ளது..*
சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும், நான் அதை நோக்கி:
யோபு 31:26
*சபை மகிமையுள்ளது..*
தீத்துவைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாயிருக்கிறானென்றும், எங்கள் சகோதரரைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளுடைய ஸ்தானபதிகளும், கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார்கனென்றும் அறியக்கடவன்.
2 கொரிந்தியர் 8:23
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
எபேசியர் 5:27
----------------------------------------------------
4. *சந்திரன் இரவில் வெளிச்சம் கொடுக்கிறது* ..
சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திரநட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
எரேமியா 31:35
*சபை உலகத்திற்கு வெளிச்சம் கொடுக்கிறது* ..
நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.
பிலிப்பியர் 2:14-16
----------------------------------------------------
5. *சந்திரன் சமாதானத்துக்கு அடையாளம்* ..
அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான், சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.
சங்கீதம் 72:7
*சபை சமாதானத்துக்கு அடையாளம்* ..
சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
மத்தேயு 5:9
அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.
அப்போஸ்தலர் 9:31
----------------------------------------------------
6. *சந்திரன் பலன்களை பக்குவப்படுத்துகிறது* ..
சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனிகளினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்,
உபாகமம் 33:14
*சபை அனைவரையும் தேறும்படி செய்கிறது* ..
எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.
கொலோசெயர் 1:28
----------------------------------------------------
7. *சந்திரன் இரவை ஆளுகிறது..*
இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136:9
*சபை ஆளுகை செய்ய நியமிக்கப்பட்டிருக்கிறது* ..
இந்த வார்த்தை உண்மையுள்ளது. என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்.
அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம். நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்.
2 தீமோத்தேயு 2:11-12
---------------------------------------------------
8. *சந்திரன் காலக்குறிப்புகளை காட்டுகிறது* ..
சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார், சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.
சங்கீதம் 104.19
*சபையும் கர்த்தருடைய வருகைக்கான காலத்தை காட்டுகிறது* ..
அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது. ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான். அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
2 தெசலோனிக்கேயர் 2:6-8
----------------------------------------------------
9. *சந்திரன் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்* ..
சூரியனும் சந்திரனுமுள்ளமட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.
சங்கீதம் 72.5
*சபை தலைமுறை தலைமுறையாக சேவிக்கும்* ..
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
சங்கீதம் 22:30
----------------------------------------------------
*Closing thought..*
*சபை நித்தியத்தில்..*
நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை, தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.
வெளிப்படுத்தின விசேஷம் 21.23
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment