பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் பலி செலுத்தலாமா?


பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் பலி செலுத்தலாமா?

தியான பகுதி லேவியராகமம் 17:1-5

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 
லேவியராகமம் 17:1

2 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது, கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்: 
லேவியராகமம் 17:2

3 இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக்கூடார வாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல், 
லேவியராகமம் 17:3

4 பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான். 
லேவியராகமம் 17:4

5 ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள். 
லேவியராகமம் 17:5

The right way to bring sacrifice – to the tabernacle, through the priest.
To the end that the children of Israel may bring their sacrifices which they offer in the open field, that they may bring them to the LORD at the door of the tabernacle of meeting, to the priest, and offer them as peace offerings to the LORD. 
And the priest shall sprinkle the blood on the altar of the LORD at the door of the tabernacle of meeting, and burn the fat for a sweet aroma to the LORD.
 They shall no more offer their sacrifices to demons, after whom they have played the harlot. This shall be a statute forever for them throughout their generations.”’

a. That they may bring them to the LORD at the door of the tabernacle of meeting: God established a place for Israel to bring their sacrifices – the tabernacle of meeting. To honor God, an Israelite could not simply follow their heart, their feelings, or their opinions. They had to come the way God made for them.

i. There were times when, under the leadership of His appointed priests, God authorized sacrifices at places other than the tabernacle (as in 1 Samuel 7:9 and 11:15, 2 Samuel 24:18, 1 Kings 18:20-23). “But though men were tied to this law, God was free to dispense with his own law, which he did sometimes to the prophets, as 1 Samuel 7:9, 11:15; etc.” (Poole)


லேவியர் ஆகமம் 17 ஆம் அதிகாரம் ஒன்றும் இரண்டும் வசனங்கள்..

 பின்னும் கர்த்தர் மோசே நோக்கி நீ ஆரோனோடும் அவன் குமாரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்ல வேண்டியதாவது கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால் என்று ஆரம்பமாகிறது. 
கர்த்தர் மோசேயிடம் சொல்லும் அனைத்து வார்த்தைகளும் வசனங்களும் மோசே  தனக்குள் அடக்கி வைத்துக் கொள்வதற்கு அல்ல. 
அனைவருக்கும் அறிவிப்பதற்காகவே ஆகும்.
 மோசே அதை எவ்வளவு உண்மையாக செய்தாரோ அவ்வளவு அதிகமாக கர்த்தர் மோசையிடம் கூறிக் கொண்டே இருந்தார்.
 கர்த்தருடைய வசனத்தை தேவையுள்ள மக்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கின்றவர்களுக்கு கர்த்தர் வசனங்களை கொடுத்துக் கொண்டே இருப்பார். 

பிரித்து எடுக்கப்பட்ட ஜனங்களின் ஆராதனை மற்ற அனைத்தையும் விட முற்றிலும் வேறுபட்டது. 
ஆராதனை நடத்தும் இடம் நடத்தும் முறை நடத்தும் நபர் அதில் கலந்து கொள்ள வரும் பரிசுத்தவான்கள் குறித்து லேவியராகமம் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. 
ஆனாலும் பிசாசானவன் அவர்களை திசை திருப்புகிறான். சுத்தரின் விருப்பத்தின்படி அல்ல தங்கள் இஷ்டப்படி பலி செலுத்தலாம் ஆராதனை நடத்தலாம் என்று தூண்டி விடுகிறான். 
மாய்மாலமான தாழ்மை பொய்யான அன்பு அனைத்தையும் கொண்டு ஏதேனில் ஏவாளை வஞ்சித்தது போல தேவ ஜனங்களை வஞ்சிக்கிறான். 
தேவ சித்த ஆராதனைகள் அகலவும் மனித இஷ்ட ஆராதனைகள் புகுத்தப்படவும் செய்கிறான். கொலோசியர் 2.23.

 இப்படிப்பட்ட போதனைகள் சுயஇஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது. 
கொலோசெயர் 2:23

மறைவான பாவங்கள் ரகசிய பாவங்கள் செய்கிறவர்கள் தேவ தீர்ப்பு பெறுகிறார்கள். அந்தத் தீர்ப்பு அறுப்புண்டு போவதே ஆகும். 
லேவி 17 ஆம் அதிகாரத்தில் 4, 9, 
 14 வசனங்களில் அறுப்ப்புண்டு போவார்கள் என்று தேவ நியாய தீர்ப்பு கூறப்படுகின்ற அந்த மூன்று இடங்களிலும் ரகசிய பாவங்கள் இடம்பெற்றுள்ளது. 

 பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு  இரத்தப்பழியாக எண்ணப்படும். 
அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான். 
லேவியராகமம் 17:4

அதை ஆசரிப்புக் கூடார வாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல். 
லேவியராகமம் 17:9

 சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது, இரத்தம் ஜீவனுக்குச் சமானம், ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம், சகல மாம்சத்ததின் உயிரும் அதின் இரத்தந்தானே, அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன். 
லேவியராகமம் 17:14

நாலாவது வசனத்தில் ஆசரிப்பு கூடாரத்திற்குள் வந்து பலி செலுத்த வேண்டியவன் பாளையத்திற்கு வெளியே புறம்பே சென்று செலுத்துகிறான். தேவனுக்கு முன்பாகவும் ஆசாரியனுக்கு முன்பாகவும் வர வேண்டியவன் தானாகவே சென்று தானாகவே பலி செலுத்திக் கொள்கிறான்.
 பலி செலுத்த வேண்டியவன் வெளியே புறம்பே யாருமே இல்லாத ஒரு இடத்தை தேடிக் கொண்டிருக்கிறான். 
அதற்கு காரணம் அவன் இருதயத்தில் சமாதானம் இல்லை.
 ஏதோ ஒரு குற்ற உணர்வு அவனை குத்துகிறது வருத்துகின்றது.
 குற்ற உணர்விலிருந்து வெளிவருவதற்கு குறுக்கு வழிகளை தேடிக் கொண்டிருக்கிறான்.

 ஆசரிப்பு கூடாரத்திற்கு புறம்பே ஆலயத்திற்கு வெளியே சென்று அவன் இஷ்டமானவைகளுக்கு அவன் இஷ்டமான முறையில் பலி செலுத்த முற்படுகிறான். அவன் செய்த குற்றத்திற்கு அவனையே அவன் ஆறுதல் படுத்திக் கொள்ள ஓர் முடிவு எடுக்கிறான். 
தேவ சமூகத்திற்கு வருவதற்கு ஏதோ ஒன்று அவனை தடை செய்கின்றது..


காரணம் அவனுடைய ரகசிய பாவமாகும்.

@  பலி என்பது இஷ்டப்பட்டவைகளுக்கு செலுத்த முடியாத ஒன்றாகும். 

@ பலி என்பது பரிசுத்தராகிய தேவனுக்கு மட்டுமே செலுத்தக்கூடியது. 

@ பலி என்பது இஷ்டமான இடங்களில் செலுத்தப்பட முடியாத ஒன்றாகும். 

@ பலி என்பது தேவனுடைய பிரசன்னத்தில் செலுத்தப்படக்கூடிய ஒன்றாகும்.

நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம் .

courtesy..
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA