ஆவி ஆத்துமா சரீரத்தில் பரிசுத்தம் காக்க பிரமாணங்கள். SERUM செரம் HAKKIAS ஹாக்கியஸ்
ஆவி ஆத்துமா சரீரத்தில் பரிசுத்தம் காக்க பிரமாணங்கள்.
SERUM செரம்
HAKKIAS ஹாக்கியஸ்
SERUM செரம் ..
விசுவாசிகள் அறியாமல் செய்கிற பாவம். கர்த்தருக்கு என்று பிரித்து எடுக்கப்பட்ட வாழ்க்கையினை பத்திரமாக பாதுகாப்பது பரிசுத்தம் என்பது ஆகும்.
கர்த்தருக்கு என்று பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையை காத்துக் கொள்ள பயன்படுத்தும் இன்னொரு எபிரேயர் சொல் செரம் என்பதாகும்.
செரம் என்று வரும் அந்த எபிரேய சொல்லின் பொருள் என்னவென்றால் ஈவு இரக்கம் எதுவும் இன்றி பாவத்தை அழித்து விடுதல் என்பது ஆகும்.
ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
கொலோசெயர் 3:5
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
ரோமர் 8.13
கர்த்தருக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையை கெர்ச்சிக்கிற சிங்கம் போல வந்து விழுங்கி விட, பிடுங்கி எடுத்து விட முற்படும் எதையும் ஈவு இரக்கம் இல்லாமல் சற்றும் காலதாமதம் இல்லாமல் எவ்வித இரண்டாவது சிந்தைகளும் ( no second thought 🤔) இல்லாமல் உடனடியாக ஒளித்து கட்டுவதே செரம் என்ற எபிரேய சொல்லின் பொருள் ஆகும்.
உலகம் மாம்சம் பிசாசு ஆகிய மூன்று தீய சக்திகளும் கர்த்தருக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட வாழ்வுகளை திசை திருப்ப முற்படும்போது அவ்விதமான உள் உணர்வுகளை ( inner thoughts 💭) உடனடியாக அழித்து விடுதல் என்பது ஆகும்.
பாவ அழைப்புகளை ( temptation or call of sin) நிராகரிக்கும் தைரியம் காணப்பட வேண்டும்.
பாவத்திற்கு விரோதமாய் போராடுகிறோமா?
பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.
எபிரேயர் 12:4
பாவத்தை ஆய்வு செய்யாமல் அந்த இடத்தை விட்டு விலக வேண்டும்..
French 🍟 leave!!!!
வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும். வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
1 கொரிந்தியர் 6.18
போத்திபாரின் மனைவி அவளது வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட யோசேப்பு என்ற இளைஞனை பாவ செய்கைக்கு அழைத்தாள்.
யோசேப்பு என்ற அந்த வாலிபன் கர்த்தருக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை நடத்தி வந்தான்.
பாவ அழைப்பு வரும்போது பரிசுத்தமான ஒரு ஜீவியத்தை விட்டுக் கொடுக்கவே மாட்டேன் என்றான்.
எவ்வித தயக்கமும் இல்லாமல் சோதனை அவனால் விரட்டப்பட்டது , அழிக்கப்பட்டது. எரிகோ பட்டணம் ஒரு நாள் பிடிக்கப்பட்ட பொழுது சாபத்தீடான அனைத்தும் முற்றிலுமாக அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் செரம் என்று சொல்லப்படும் எபிரேய சொல்லை பிரதிபலித்து காட்டுகிறது.
எவரும் பார்க்கவில்லை என்றாலும் என் ஆண்டவர் என்னை பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்ற நிச்சயம் பாவத்தை உடனுக்குடன் அழிக்க செய்து விடுகிறது.
பரிசுத்தம் எது என்றும் அசுத்தம் எது என்றும் அறிந்து கொள்வதற்கு ஒரு முயற்சி தேவையில்லை. வேத வசனம் மட்டுமே அளவுகோல்..
பரிசுத்தம் என்பது பளிச்சிட்டு தெரியும் ஒன்று ஆகும்.
கலங்கரை விளக்குகளுக்கு விளம்பரம் தேவையில்லை , காரணம் அவைகள் பளிச்சிட்டு தெரிகின்றன.
லேவியராகம புத்தகம் 17 முதல் 26 அதிகாரங்கள் சகல விதத்திலும் ஜனங்கள் கர்த்தருக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
பழைய ஏற்பாடு புத்தகம் மட்டுமல்லாமல் புதிய ஏற்பாடு புத்தகம் பரிசுத்தம் என்பதற்கு சம மதிப்பு கொடுக்கிறது.
பழைய ஏற்பாடு புத்தகம் எபிரேய மொழியில் எழுதப்பட்டது.
எபிரேய மொழியில் கோடேஷ் என்னும் சொல் கர்த்தருக்கென்று பிரிக்கப்படுதல் என்பதை கூறுகிறது.
ஹாக்கியஸ்
புதிய ஏற்பாட்டு நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.
கிரேக்க மொழியில் கர்த்தருக்கென்று
என்பதை குறிக்கும் வார்த்தை ஹாக்கியஸ் என்பதாகும்.
புதிய ஏற்பாட்டு தொகுப்பில் மொத்தம் 27 புத்தகங்கள் உண்டு.
அந்த 27 புத்தகங்களிலும் கர்த்தருக்கென்று பிரித்து எடுக்கப்படுவதை குறிக்கும் கிரேக்க வார்த்தையான ஹாக்கியஸ் என்ற வார்த்தை 230 முறை பயன்படுத்தப்படுகிறது.
லேவியர் ஆகமம் நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராக இருங்கள் என்று கூறுகிறது.
அதே அழைப்பை புதிய ஏற்பாடும் தொடர்ந்து கூறுகிறது.
1 பேதுரு 1. 15 16.
பரிசுத்தர் நம் வழிகாட்டி..
உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
1 பேதுரு 1:15
நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
1 பேதுரு 1:16
கர்த்தராகிய தேவன் அனைத்திலும் இருந்தும் பிரித்தெடுக்கப்பட்டவர்.
மகா பரிசுத்தர் அதுபோன்று அவருடைய பிள்ளைகளாகிய நீங்களும் அனைத்திலும் இருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்களாக இருங்கள்.
தீட்டானது ஒன்றும் பிரவேசிக்க இடம் கொடாதிருங்கள்.
புளித்த மா ஒன்றும் உங்கள் வீட்டில் இருக்கக் கூடாது.
நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல. கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
1 கொரிந்தியர் 5:6
இஸ்ரவேலின் பரிசுத்தரே என்று ஏசாயா கர்த்தரை அழைக்கிறார்.
தீமையை பார்க்க மாட்டாத சுத்த கண்ணனே என்று ஆபகூக் கர்த்தரை அழைக்கிறார்.
1 தெச 4 3 முதல் 7.
நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
1 தெசலோனிக்கேயர் 4:3
தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
1 தெசலோனிக்கேயர் 4:4
உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
1 தெசலோனிக்கேயர் 4:5
இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும். முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் ( பரிசுத்தர்) நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
1 தெசலோனிக்கேயர் 4:6
தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
1 தெசலோனிக்கேயர் 4:7
courtesy..
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301
Comments
Post a Comment