ஆவி ஆத்துமா சரீரத்தில் பரிசுத்தம் காக்க பிரமாணங்கள். கோடேஷ் ..KODESH
ஆவி ஆத்துமா சரீரத்தில் பரிசுத்தம் காக்க பிரமாணங்கள்.
கோடேஷ் ..KODESH
லேவியராகமம் புத்தகத்தில் மொத்தம் 27 அதிகாரங்கள் உள்ளன.
ஒன்று முதல் 16 அதிகாரங்களும் கடைசி அதிகாரமான 27ஆவது அதிகாரமும் நாம் பரிசுத்த வாழ்வை எப்படி பெற்றுக்கொள்வது என்று கூறப்பட்டுள்ளது.
லேவியர் ஆகம புத்தகத்தின் இரண்டாவது பகுதியாக 17 முதல் 26 அதிகாரங்கள் அதாவது 10 அதிகாரங்கள் நாம் பரிசுத்த வாழ்வில் எப்படி நிலைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராக இருங்கள் என்பது லேவியராகமம் புத்தகத்தின் மிக முக்கியமான கருப்பொருள் ஆகும். லேவியராகமம் புத்தகம் ஒரு வஸ்திரமாக எடுத்துக் கொள்வீர்கள் ஆனால் அதிலே முக்கியமான இழைகள் தேவனுடைய பரிசுத்தம் , மனிதர்களுடைய பரிசுத்தம் என்று இழைகள் ஓடுகிறது.
காரணம் பரிசுத்தம் இல்லாமல் ஒருவரும் தேவனை தரிசிப்பதில்லை.
தேவன் பரிசுத்தர் தேவனாகிய கர்த்தரிடத்தில் நெருங்கி சேருகின்றவர்களும் பரிசுத்தர்களாக இருக்க வேண்டும்.
பிதா பூரண சற்குணர் பிதாவின் பிள்ளைகள் பூரண சற்குணராக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.
இந்த பத்து அதிகாரங்களில் பரிசுத்தமான மனிதன் பரிசுத்தமான குடும்பம் பரிசுத்தமான சபை என்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
ஆதியாகம புத்தகம் மனிதன் பரிசுத்தத்தை எப்படி இழந்தான் என்று காட்டுகிறது. யாத்திராம புத்தகம் அடிமையாகி போன மனிதனுக்கு கர்த்தர் அளித்த விடுதலையை காட்டுகிறது
லேவியராகமம் புத்தகம் கர்த்தர் அருளிய விடுதலையை எப்படி காத்துக் கொள்வது என்று காட்டுகிறது.
பரிசுத்தராகிய தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தம் என்ற வார்த்தை மூன்று முக்கிய எபிரேய சொற்கள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் வார்த்தை கோடேஷ்.
கோடேஷ் என்பது ஒரு எபிரேய சொல்லாகும் ..
The Hebrew word "kodesh" (קדש) means "holy" or "sacred." It is often used in reference to things that are set apart for a special purpose or dedicated to a higher power. In Jewish tradition, it can refer to the holy space of the Temple in Jerusalem, as well as to the Sabbath and other sacred times and objects.
பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
சங்கீதம் 29:1
கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள், பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
சங்கீதம் 29:2
யாத்திராகமம் 15 11 இல் வரும் ஸ்தோத்திரப் பாட்டினில் கோடேஷ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
கர்த்தாவே தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவம் உள்ளவரும் துதிகளில் பயப்படத்தக்கவரும் அற்புதங்களை செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார் என்று இந்த வசனம் கூறுகிறது.
கோடேஷ் என்ற சொல் பரிசுத்தராகிய தேவன் ஒருவருக்கே பொருந்தும் சொல்லாக நிற்கின்றது.
கோடேஷ் என்ற எபிரேய சொல் மகிமையான புனிதத்துவம் கொண்டவர் என்று பொருள் கொண்டு பரிசுத்தம் என்பதை ஆணித்தரமாக குறிக்கின்றது.
பரிசுத்த வேதாகமத்தில் 830 முறை இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதல் ஐந்து ஆகமங்களில் மட்டும் 350 தடவை இந்த சொல் காணப்படுகிறது.
கோடேஷ் என்ற இந்த மகத்துவம் நிறைந்த சொல்லின் பொருள் கர்த்தருக்கு என்று பிரித்தெடுக்கப்படுதல் ஆகும்.
லேவியராகமம் புத்தகம் கர்த்தருக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட. மனிதனின் நிலையை காண்பிக்கிறது.
கர்த்தருக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் பிற எதுவும் அவை நெருங்க முடியாது.
கோணலும் மாறுபாடும் நிறைந்த ஒரு உலகில் வாழ்ந்தாலும் சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த ஓர் உலகில் வாழ்ந்தாலும் கர்த்தருக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் நீதியும் நேர்மையும் சற்றும் விட்டுக் கொடுப்பதில்லை.
சங்கீதம் 35 .10
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும் சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே என்று என் எலும்புகள் எல்லாம் சொல்லும்.
சங்கீதம் 71 19
தேவனே உம்முடைய நீதி உன்னதமானது பெரிதானவைகளை நீர் செய்தீர் தேவனே உமக்கு ஒப்பானவர் யார் என்று கூறுகிறது.
நாளை பரிசுத்தத்திற்கு என்று பயன்படுத்தப்பட்ட இரண்டாவது சொல்லை பார்க்கலாம்.
whatsapp 91 9965050301
Comments
Post a Comment