கிறிஸ்துவின் பாடு மரணமும் ஏசாயா தீர்க்கதரிசனம் நிறைவேறுதலும்_ .. மேஜை நினைவு கூறுதல் தியானம்



@ worship is not in words it's in works
ஆராதனை வார்த்தையில் அல்ல கிரியையில்..
@ worship is not explaining it's experiencing
ஆராதனை விளக்குவதில் அல்ல அனுபவிப்பதில்..
@ worship is not in learning it's in knowing
ஆராதனை படிப்பதில் அல்ல அறிந்து கொள்வதில்..

நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள்: நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்: ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது..
யோவான் 4.22


மேஜை நினைவு கூறுதல் தியானம்..
          *TABLE REMEMBRANCE THOUGHT* 


 _கிறிஸ்துவின் பாடு மரணமும் ஏசாயா தீர்க்கதரிசனம் நிறைவேறுதலும்_ .. 


சிந்திக்க வேத பாடம்..

அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.
அப்போஸ்தலர் 13.29

எழுதினவைகள் மட்டுமே நிறைவேற முடியும்..

So it was written; it shall be done..

சிந்திப்போம்.. நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் எழுதினவைகள் மட்டுமே நடைபெறுகிறது..


 *இதோ, என் தாசன்..* 

 _தீர்க்கதரிசனம்_ .. 

 *இதோ, என் தாசன்* ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.
ஏசாயா 52.13

 _நிறைவேறுதல்_ .. 

இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன், என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.
மத்தேயு 12.18

===========================

 _இயேசு கிறிஸ்து தம்முடைய மரணத்தை மறைமுகமாக தெரிவிக்கிறார்_ .. 

1. *உயர்த்தப்பட வேண்டும்* .. கல்லெரிதல் மரணம் அல்ல..
யோவான் 3.14, 8.28, 12.32, 33

2. *நான் போகிற இடம்..* பாவத்தின் பயங்கரம்..
யோவான் 13.33, 36

3. *மனுஷ குமாரன் மகிமைப்படும் வேளை* .. ஒரே கிருபாதார பலி 
யோவான் 12.23

4. *பிதா எனக்கு கொடுத்த பாத்திரம்* .. 
யோவான் 18.11..வேறே எவரும் பருக முடியாதது 

5. *நான் பெறும் ஸ்நானம்* .. 
மத் 20.22..நம்மால் கூடாதது 

===========================

1. *உயர்த்தப்பட்டார்* .. 

 _தீர்க்கதரிசனம்_ .. 

இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார். 
ஏசாயா 52:13

 _நிறைவேறுதல்_ .. 

ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், 
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். 
பிலிப்பியர் 2:9-11

2. *முக ரூபம் மாறியது* .. 

_தீர்க்கதரிசனம்_

 மனுஷனைப்பார்க்கிலும் அவருடையn முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். 
ஏசாயா 52:14
 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார், அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை, அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 
ஏசாயா 53:2

 _நிறைவேறுதல்_ .. 

 சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி: 
மாற்கு 15:17

அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். 
மாற்கு 15:19

3. *_இரத்தம் சிந்துதல்* .._ 

_தீர்க்கதரிசனம்_

 அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார், அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள், ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள், கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள். 
ஏசாயா 52:15

_நிறைவேறுதல்_ .. 

பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. 
1 பேதுரு 1:2

4. *அசட்டை பண்ணப்பட்டார்* .. 

_தீர்க்கதரிசனம்_

எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 
ஏசாயா 53:1

அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார், அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம், அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார், அவரை எண்ணாமற்போனோம். 
ஏசாயா 53:3

_நிறைவேறுதல்_

 அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும்,அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை
யோவான் 12:37

ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்: 
யோவான் 12:39

5. *பாடுகளைஏற்றுக்கொண்டார்* .. 

_தீர்க்கதரிசனம்_

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். 
ஏசாயா 53:4

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 
ஏசாயா 53:5

_நிறைவேறுதல்_

 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். 
ரோமர் 4:25

 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 
1 பேதுரு 2:24

சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள். இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள். 
1 பேதுரு 2:25

6. *பதிலானார்* ..

_தீர்க்கதரிசனம்_

நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்
ஏசாயா 53:6

இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார், அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும், ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார், என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். 
ஏசாயா 53:8

_நிறைவேறுதல்_

 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்
2 கொரிந்தியர் 5:21

7. *அவமானம்.. உமிழ்நீர்* .. 

_தீர்க்கதரிசனம்_

அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன், அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 
ஏசாயா 50:6

_நிறைவேறுதல்_

அவர்கள் அவரைப் பரியாசம் பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர் மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள், ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
மாற்கு 10.34

8. *_முகத்தைக்_* *கற்பாறையைப்போலாக்கினேன்* ...

_தீர்க்கதரிசனம்_

கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார், ஆகையால் நான் வெட்கப்படேன், நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன், ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்
ஏசாயா 50:7

_நிறைவேறுதல்_

அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்: வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.
மாற்கு 14.65

9. *ஐசுவரியவனோடு அடக்கம்* .. 

_தீர்க்கதரிசனம்_

துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள், ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார், அவர் கொடுமை செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. 
ஏசாயா 53:9

_நிறைவேறுதல்_

 இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான், பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான். 
யோவான் 19:38

ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். 
யோவான் 19:39

அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். 
யோவான் 19:40

10. *உயிர்த்தெழுதல்* ..

 _தீர்க்கதரிசனம்_ .. 

கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார், அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். 
ஏசாயா 53:10

 _நிறைவேறுதல்_ .. 

அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.
மத்தேயு 28.6

நிறைவேறப்பொகும் ஒரே எழுத்து..

பாவமில்லாமல் தரிசனமாவர்..

கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். 
எபிரேயர் 9:28


courtesy..
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp :+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA