தேவனுடைய வீடு..பரிசுத்தவான்கள் வீடு..BETH..EL
தேவனுடைய வீடு...பரிசுத்தவான்கள் வீடு.. ஒரு ஒப்பீடு..
இந்த லிங்க் touch பண்ணி song கேளுங்க ..
பின் செய்தியை வாசிக்கவும்..
https://youtu.be/xA8b8Iog-rw?si=aCqzda4wIGbduSx0
1. எமைப் படைத்தவரே
பாதுகாப்பவரே
பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்
உம்தன் சமூகமதில்
இந்த நேரமதில்
கூடினோம் ஸ்தோத்திரம்,
ஸ்தோத்திரம்!! (2)
பல்லவி
எங்கள் இதயங்களில்
உம்தன் வசனம் தரும்
பாதைக்கு வெளிச்சம் வசனம் – 2
2. சென்ற காலம் எல்லாம்
கர்த்தரின் நன்மைகள்
எத்தனை அதிகம்! அதிகம்!!
வரும் நாட்களிலும்
வழி நடத்திடுவீர்
இயேசுவே ஸ்தோத்திரம்,
ஸ்தோத்திரம்!! (2)
- எங்கள்
3. தூய பாதையினில்
நாங்கள் நடந்து செல்ல
ஆவியின் கிருபை தந்திடும்
உண்மை அன்பு கொண்டு
நாங்கள் வாழ இன்று
நிரப்பும், ஸ்தோத்திரம்,
ஸ்தோத்திரம்!! (2)
- எங்கள்
ஒரு விசுவாசியின் அனுதின ஆவிக்குரிய ஜீவியத்தின் பூரணமாகுதலுக்கு அதாவது தூய பாதைக்கு தேவையான
1. வெளிச்சம்
2. வசனம்
3. ஆவியானவர்
4. கிருபை
5. உண்மை
6. அன்பு
இவை அனைத்தும் நம்மை படைத்தவர் அருளுகிறார்..
Way of the Lord and Word of God..
கர்த்தரின் வழிகள் கர்த்தர் வார்த்தைகள்..
ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.
உபாகமம் 1.31
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 55.8
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புக்கள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
ரோமர் 11.33
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள், பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
வெளிப்படுத்தின விசேஷம் 15.3
இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள், பாதகரோவென்றால் அவைகளில் இடறி விழுவார்கள்.
ஓசியா 14.9
காலம் சென்ற சகோ பக்த்சிங் தேவன் தங்கும் வாசஸ்தலம் என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார்..
அதில் அவர் வீட்டின் முன் veranda வில் அமர்ந்து paper படித்து கொண்டிருக்கிறார்.. ஒரு சிட்டுக்குருவி வீட்டுக்குள் வருவதும் போவதுமாக இருந்தது .. இதை கவனித்த சகோதரர் ஒரு சிறிய பெட்டி எடுத்து ஒரு சிறிய துவாரம் இட்டு கொஞ்சம் பழைய துணி மற்றும் வைக்கோல் வைத்து veranda நிலையின் மேல் வைத்து விட்டு ,அமர்ந்து paper படிக்க ஆரம்பித்தார்.. குருவி வந்தது.. அமர்ந்தது.. இளைப்பாறியது.. பின் நாட்கள் சென்றது.. முட்டை இட்டது.. குஞ்சி பொரித்தது. பின் தன் குஞ்சுகளுடன் பறந்து சென்றது..
சகோதரன் தன்னுடைய அனுதின வாழ்க்கையில் ஒரு சத்தியத்தை கற்றுக்கொண்டார்..
நோவா பேழை சம்பவம்..
ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.
ஆதியாகமம் 8:4
பத்தாம்மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டேவந்தது. பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
ஆதியாகமம் 8:5
நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
ஆதியாகமம் 8:6
ஒரு காகத்தை வெளியே விட்டான். அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.
ஆதியாகமம் 8:7
பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.
ஆதியாகமம் 8:8 பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து, இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது. அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
ஆதியாகமம் 8:9
பின்னும் ஏழுநாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.
ஆதியாகமம் 8:10
அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது. இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது. அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்துகொண்டான்.
ஆதியாகமம் 8:11
பின்னும் ஏழுநாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான். அது அவனிடத்திற்கு திரும்பி வரவில்லை.
ஆதியாகமம் 8:12
தேவனுடைய வீடு..
பரிசுத்தவான் வீடு ...
Beth: House.. வீடு
-------------------------
Beth..el..
பெத்.. தேல்
தேவனுடைய வீடு..
house of God
Beth..lehem
பெத்.. லேஹெம்
அப்பத்தின் வீடு..
house of bread
Beth..thany
பெத்.. தானி
பேரீச்சம் பழங்க ளின் வீடு..
house of dates..
Beth..bege
பெத்.. பெகே..
அத்திப் பழ வீடு..
house of figs..
Beth..esda..
பெத்.. தஸ்தா..
கிருபையின் வீடு..
House of grace..
Beth..saidaa
பெத்.. ஸயிதா
மீன்கள் வீடு
House of fish..
Beth..shimesh
பெத்.. சிமெஸ்
சூரியன் வீடு
House of sun..
Beth..hakkeren
பெத்.. ஹக்கெரேன்
திராட்சை தோட்டம் வீடு
House of vineyard..
தேவனுடைய வீடு.... ஆகவே உங்களுடைய வீடும்...
1. வானத்தின் வாசல்..
Door of salvation..
இரட்சிப்பின் வாசல்..
அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர். நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
ஆதியாகமம் 28:13
உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும். நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய். உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
ஆதியாகமம் 28:14
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
ஆதியாகமம் 28:15
யாக்கோபு நித்திரை தெளிந்து வழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார். இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.
ஆதியாகமம் 28:16
அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.
ஆதியாகமம் 28:17 அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,
ஆதியாகமம் 28:18
அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான். அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.
ஆதியாகமம் 28:19
2. கர்த்தருடைய சந்நிதி..
Way of sanctification..
பரிசுத்தமாகுதலின் பாதை..
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு,
நியாயாதிபதிகள் 20:26
கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள். தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி அந்நாட்களில் அங்கே இருந்தது.
நியாயாதிபதிகள் 20:27
3. Place of protection..
பாதுகாப்பின் அடைக்கல பட்டணம்..
மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன். அப்பொழுது அவன்: நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும். உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.
நெகேமியா 6:10
4. A Place of nanna..
தேவ சமூகத்து அப்பங்கள் நிறைந்த இல்லம்..
அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார், அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.
மத்தேயு 12:1
பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.
மத்தேயு 12:2
அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
மத்தேயு 12:3
அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.
மத்தேயு 12:4
5. ஒரே நகரத்தார் வாசம் பண்ணும் இடம்..
A place of fellow citizens..
ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,
எபேசியர் 2:19
அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்.
எபேசியர் 2:20
அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது.
எபேசியர் 2:21
அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.
எபேசியர் 2:22
6. A place of pillar and ground of truth..
சத்தியத்திற்கு தூண் ஆதாரம்..
தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன். அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.
1 தீமோத்தேயு 3:15
7. A place of faithfulness..
உண்மையின் உறைவிடம்..
இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;
எபிரேயர் 3:1
மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.
எபிரேயர் 3:2
வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான். அதுபோல மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார்.
எபிரேயர் 3:3
ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும். எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.
எபிரேயர் 3:4 சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.
எபிரேயர் 3:5
கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார். நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம்
எபிரேயர் 3:6
8. A place where Christ is High Priest..
மகா பிரதான ஆசாரியர் அதிகாரி..
தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,
எபிரேயர் 10:21
துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்
எபிரேயர் 10:22
9. A place judgement begins..
நியாயத்தீர்ப்பு துவங்கும் இடம்
நீயாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்குங்காலமாயிருக்கிறது. முந்தி நம்மிடத்திலே அது துவங்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
1 பேதுரு 4:17
நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
1 பேதுரு 4:18
ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.
1 பேதுரு 4:19
10. சபை கூடி வரும் வீடு..
Place where church assembles..
உங்கள் வீட்டில் சபை கூடும் அனுபவம் இருக்கிறதா?
லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும் நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
கொலோசெயர் 4:15
பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது:
பிலேமோன் 1:2
அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.
ரோமர் 16:5
என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
ரோமர் 16:23
தேவனின் ஆலயமே..
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே
இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்
தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோமே
நாம் தேவ பிள்ளைகளானோம்
அவர் சொந்த ஜனமானோம்
நாம் இனி நம்முடையவர்களல்ல
அவரே நம் சரீரத்தின் சொந்தமானவர்
வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்
பரிசுத்தம் காத்து கொள்வோம்
பரிசுத்த ஜாதியாக
கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
ஆவியினாலும் சரீரத்தினாலும்
மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்
இயேசுவின் வருகை நெருங்கிடுதே
அவரின் பிரசன்னம் விரைந்திடுதே
மகிமை மேல் மகிமை அடைந்திடுவோமே
நாம் மறுரூபமாகிடுவோம்
மகிமையில் சேர்ந்திடுவோம்..
courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment