இரட்டிப்பான நன்மைகள்





387. இரட்டிப்பான நன்மைகள் தந்திட தேவன் வாக்களித்தாரே.


 பல்லவி

  இரட்டிப்பான நன்மைகள் தந்திட 
  தேவன் வாக்களித்தாரே.

 அனுபல்லவி

  முன் மாரி போல் 
     பின் மாரி மழையே
  உன்னதத்தினின்று 
     வந்திறங்குதே - இரட்
 சரணங்கள்

STRENGTH UPON STRENGTH 

1. பெலத்தின் மேலே மா பெலனே 
     புது பெலன் நாம் பெற்றிட
  சால்வை தனை எலிசா 
     அடைந்தார் போல் 
  சோர்வின்றி பெலன் என்றும்
     நாடுவோம் - இரட்

அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். 
சங்கீதம் 84:7

GRACE UPON GRACE

2. கிருபையின் மேல் மா கிருபை 
     கர்த்தரிடம் நாம் பெற்றிட
  ஸ்திரீகளுக்குள் மரியாள் 
     பெற்ற பாக்யம்
  ஸ்தோத்திரம் பாடி என்றும் 
     தேடுவோம் - இரட்

அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம். 
யோவான் 1:16


MORE THAN CONQUERS

3. ஜெயத்தின் மேலே மா ஜெயமே 
     ஜெய தொனியாய்ப் பெற்றிட
  போர் முனையில் சிறு 
     தாவீது போல 
  போர் வீரராக என்றும்
    ஜெயிப்போம் - இரட்

 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
ரோமர் 8.37


4. நம்பிக்கையின் மேல் நம்பிக்கை 
     நல் விசுவாசம் பெற்றிட
  ஆதி அப்போஸ்தலர் 
     காலத்தில் போல
  ஒருமையில் என்றும் 
     நிலைத்திருப்போம் - இரட்

5. மகிமையின் மேல் மா மகிமை 
    மறுரூபம் நாம் பெற்றிட
  கண்ணிமை நேரத்திலே பறந்தேகி 
  கர்த்தருடன் நாம்
    என்றும் வாழுவோம் - இரட்

6. பரிசுத்தம் மேல் பரிசுத்தம் 
     பங்கம் இல்லாமல் பெற்றிட
  நீதியின் சூரியன் இயேசுவுடனே 
  நீதி அணிந்து என்றும்
     ஆளுவோம் - இரட்

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA