இரட்டை நிலை தேவன் வெறுக்கிறார்... தெய்வீக நிலை தேவன் தருகிறார் .. ஐ டி ஐ கேம்ப் செய்தி




மாற்கு 5.1-20  + லூக்கா 8.26-39
வாசியுங்கள்.. தியானியுங்கள்

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


பிசாசு பிடித்திருக்கும் மனிதர்களின் இரட்டை நிலை..
Devil 👿 Possessed men's twin standard..

@ அசுத்த ஆவி அநேக விசுவாசிகளில் காணப்படுகிறது..
@ தாங்கள் செய்கிறது இன்னதென்று அவர்கள் அறிய முடியாது
@ ஏனென்றால் செய்கிறது அவர்கள் அல்ல..
@ அவர்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவரை அவர்கள் மௌனமாக்கும் போது mute 🔕  அசுத்த ஆவி செயல்பட ஆரம்பிக்கிறது..
@ அநேகர் தேவன் தன்னை விட்டு விலகினதை அறிகிறதில்லை..

@ இரட்டை பண்புகள்
twin characters 
@ இரட்டை குடியிருப்பு
twin citizenship 
@ இரட்டை அடிமைத்தனம்
twin bondage
@ இரட்டை நிர்வாணம்
twin nakedness
@ இரட்டை ஆள் தத்துவம் 
twin personality 
@ இரட்டை பெயர்கள் 
twin name

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Delivering Power of JESUS CHRIST..
இயேசு கிறிஸ்துவின் விடுதலை செய்யும் தெய்வீக வல்லமை..

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


பிசாசு விலகின மனிதர்களின் தெய்வீக நிலை.. சுபாவம் 
Devil abstained men's divine Nature..

@ தெய்வீக விடுதலை
divine deliverance
@ தெய்வீக மாற்றம்
divine transformation 
@ தெய்வீக உடுத்துவித்தல்
divine clothing 
@ தெய்வீக இளைப்பாறுதல்
divine rest 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

நீங்களே குறிப்பு எடுக்கலாம்..
தியானிக்கலாம்..


 பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள். 
மாற்கு 5:1

அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஓரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். 
மாற்கு 5:2

அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது, அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. 
மாற்கு 5:3

 அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும்,சங்கிலிகளை முறித்து,விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்,அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. 
மாற்கு 5:4

 அவன் எப்பொழுதும் இரவும் பகலும்,மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு,கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான். 
மாற்கு 5:5

 அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு. 
மாற்கு 5:6

 இயேசுவே,உன்னதமான தேவனுடைய குமாரனே,எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாத படிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். 
மாற்கு 5:7

 ஏனெனில் அவர் அவனை நோக்கி, அசுத்த ஆவியே,இந்த மனுஷனை விட்டுப் ;புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார். 
மாற்கு 5:8

அப்பொழுது அவர் அவனை நோக்கி, உன் பேர் என்னவென்று கேட்டார், அதற்கு அவன், நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியன் என்று சொல்லி, 
மாற்கு 5:9

 தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். 
மாற்கு 5:10

 அப்பொழுது அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. 
மாற்கு 5:11

 அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி, பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. 
மாற்கு 5:12

 இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள்புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின,உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து,கடலில் அமிழ்ந்து மாண்டது. 
மாற்கு 5:13

பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள், அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, 
மாற்கு 5:14

 இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து,உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். 
மாற்கு 5:15

பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவராமாய்ச் சொன்னார்கள். 
மாற்கு 5:16

 அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். 
மாற்கு 5:17

அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான். 
மாற்கு 5:18

இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்,நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். 
மாற்கு 5:19

அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான், எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். 
மாற்கு 5:20



 பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள். 
லூக்கா 8:26

 அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான். 
லூக்கா 8:27

அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான். 
லூக்கா 8:28

அந்த அசுத்தஆவி அவனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி வெகுகாலமாய் அவனைப்பிடித்திருந்தது, அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப் போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். 
லூக்கா 8:29

இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார், அதற்கு அவன்: லேகியோன் என்றான், அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். 
லூக்கா 8:30

தங்களைப் பாதாளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. 
லூக்கா 8:31

அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள்போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன, அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார். 
லூக்கா 8:32

அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனைவிட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன, அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது. 
லூக்கா 8:33

 அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். 
லூக்கா 8:34

அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். 
லூக்கா 8:35

 பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்
லூக்கா 8:36

அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப் போனார். 
லூக்கா 8:37

பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். 
லூக்கா 8:38

 இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான். 
லூக்கா 8:39

@iticampbrsbabu


courtesy
shalomjjj@gmail.com
whatsapp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA