_தாவீதும் மேவிபோசேத்தும்.._ ஆராதனை தியானம்* WORSHIP THOUGHT


 *WORSHIP THOUGHT* 

 *ஆராதனை தியானம்* 

 _தாவீதும் மேவிபோசேத்தும்.._ 

 _DAVID & MEPHIBOSETH_ 


           *மேவிபோசேத்* .. 

_மேவிபோசேத் முதல் ஆதாமுக்கு ஒப்பிடலாம்_ .. 


1. *Fallen* ..

 _கீழ விழுந்தவன்.._ 

 சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான். சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிற போது, அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான். அப்பொழுது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள். அவள் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவனானான். அவனுக்கு மேலிபோசேத் என்று பேர். 
2 சாமுவேல் 4:4

2. *Fatherless* ..

 _தகப்பனை இழந்தவன்.._ 

பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப் போட்டார்கள். 
1 சாமுவேல் 31:2

3. *Friendless* ..

 _சிநேகிதர்கள் இல்லாதவன்.._ 

 யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான். 
2 சாமுவேல் 9:1

4. *Famished* ..

 _அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறுபவன்.._ 

அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான். 
2 சாமுவேல் 9:4

5. *Dead dog..* 

 _செத்த நாயானவன்.._ 

 அப்பொழுது அவன் அவனை வணங்கி: செத்த நாயைப்போல இருக்கிற என்னை நீர் நோக்கிப்பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம் என்றான். 
2 சாமுவேல் 9:8



               *தாவீது* .. 

_தாவீது கடைசி ஆதாமுக்கு ஒப்பிடலாம்_


1. *தயவு பாராட்டும் தாவீது..* 

 யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான். 
2 சாமுவேல் 9:1

2. *தன் அருகில் அழைக்கும் தாவீது* ..

அப்பொழுது தாவீதுராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான். 
2 சாமுவேல் 9:5

3. *இழந்ததை திரும்ப அளிக்கும் தாவீது* ..

தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே. உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயை செய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான். 
2 சாமுவேல் 9:7

4. *தன்னுடன் பந்தியிருக்க செய்யும் தாவீது..* 

 மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்த படியினால், எருசலேமிலே குடியிருந்தான். அவனுக்கு இரண்டுகாலும் முடமாயிருந்தது. 
2 சாமுவேல் 9:13

5. *எருசலேம் தேவனுடைய வீட்டில் குடியிருக்க செய்த தாவீது..* 

மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம் பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது. 
2 சாமுவேல் 9:13




 *தாவீதின் குமாரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து..* 


1. *இரக்கத்தை காண்பித்தார்..* 

தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, 
எபேசியர் 2:4

2. *நம்மை அழைப்பினால் பரிசுத்தப் படுத்துகிறார்* ..

அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.
ரோமர் 9.24

3 . *தேவனோடு சமீபமாக்கினார்..* 

முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். 
எபேசியர் 2:13

4. *அவரோடு பந்தியிருக்க செய்கிறார்* ..

நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கிமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம். 
1 கொரிந்தியர் 10:16-17

5. *நித்திய அராதனைக்கு ஆயத்தப்படுத்துகிறரர்* ..

ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். 
எபிரேயர் 12:28

courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA