சுவிசேஷ மணித்துளிகள்_கள்ளனின் ஏழு மனம் வருந்தும் செயல்கள்.._ Thief's 7 penitent action..*
*GOSPEL MOMENTS*
*சுவிசேஷ மணித்துளிகள்*
=============================
*The penitent thief..*
*தவறுக்காக வருந்தின கள்ளன்.* .
=============================
*penitent*
sorry for having done something wrong.
தவறு செய்தமைக்காக வருந்துகிற; *தவற்றுக்கு உள்ளுறுத்தல் கொள்கிற* .
*penitent*
showing that you are sorry for something you have done because you feel it was wrong:
" *I'm sorry," she said with a penitent smile.*
It was hard to be angry with him when he looked so penitent.
=============================
ஒரு தேவனுடைய மனிதன் தன் அனுதின பரிசுத்தமாகுதல் குறித்து கூறும் போது ஆண்டவரிடம் *" I am sorry "* என்று கூறின சந்தர்ப்பத்தை நினைவு கூர்ந்ததாக குறிப்பிடுகிறார்.
*Thief's 7 penitent action..*
_கள்ளனின் ஏழு மனம் வருந்தும் செயல்கள்.._
1. *Rebuked his sinful companion..*
*குற்றவாளி நண்பனை கடிந்து கொண்டான்* ..
மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
லூக்கா 23:40
But the other answering rebuked him, saying, Dost not thou fear God, seeing thou art in the same condemnation?
Luke 23:40
2. *Confessed his own sin..*
*தன்னுடைய சுய பாவத்தை அறிக்கை செய்தான்* ..
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம், நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்,
லூக்கா 23:41a
And we indeed justly; for we receive the due reward of our deeds:
Luke 23:41a
3. *Declared Christ to be sinless..*
*கிறிஸ்துவை பாவமில்லாதவராக பிரகடனம் செய்கிறான்* ..
இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
லூக்கா 23:41b
but this man hath done nothing amiss.
Luke 23:41b
4. *Confessed Christ as Lord..*
*கிறிஸ்துவை ஆண்டவரே என்று அறிக்கை செய்கிறான்* ..
இயேசுவை நோக்கி: ஆண்டவரே,
லூக்கா 23:42a
And He said unto Jesus, Lord,
Luke 23:42a
5. *Exhibited glorious hope.* .
*மகிமையான நம்பிக்கையை தெரிவிக்கிறான்* ..
நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது..
லூக்கா 23:42b
when thou comest into thy kingdom.
Luke 23:42b
6. *Made a model prayer..*
*முன்மாதிரி ஜெபம் செய்கிறான்* ..
அடியேனை நினைத்தருளும் என்றான்.
லூக்கா 23:42c
remember me..
Luke 23:42c
7. *Received an immediate forgiveness.* .
*உடனடியான மன்னிப்பை பெறுகிறான்..*
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 23:43
And Jesus said unto him, Verily I say unto thee, Today shalt thou be with me in paradise.
Luke 23:43
இரட்சிக்கபடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது இன்று அனேகர் அறிந்து கொள்வது இல்லை..
சபையில் ஞானஸ்நானம் எடுப்பதற்கு சாட்சி சபை நடுவில் சொல்லும்போது கீழ்க்கண்ட எந்த ஒரு வசனமும் தாக்கம் அதாவது இரட்சிப்படைய காரணமாக இன்று பலருக்கு இருப்பதில்லை..
மிகவும் வேதனை தருகிறது..
அவர்களை வெளியே அழைத்து வந்து; ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.
அப்போஸ்தலர் 16.30
எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான், சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.
சங்கீதம் 33.16
நாம் இரட்சிப்படைய கிறிஸ்துவின் செயல்கள்.. தன்மைகள்..
1. இயேசு கிறிஸ்துவின் நாமம் ..
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
அப்போஸ்தலர் 4.12
2. இயேசு கிறிஸ்துவின் ஜீவன்..
நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
ரோமர் 5.10
3. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம்..
சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 1
4. இயேசு கிறிஸ்துவின் சித்தம்..
4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
1 தீமோத்தேயு 2.4
5. இயேசு கிறிஸ்துவே வாசல்..
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் 10.9
6. இயேசு கிறிஸ்துவின் கிருபை..
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.
அப்போஸ்தலர் 15.11
நாம் பெற்ற இரட்சிப்பை எவ்வாறு நாம் அறிந்து கொள்ள வேண்டும்?
எவ்வாறு சபை நடுவில் அறிக்கை செய்ய வேண்டும்?
1. தேவன் அருளிய விசுவாசத்தினால் நான் ரட்சிக்கபட்டேன் .
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு.
எபேசியர் 2.8
2. வாயின் அறிக்கையும் இருதயத்தின் விசுவாசமும் சபை நடுவில் சாட்சியில் வெளிப்பட வேண்டும்..
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ரோமர் 10.9
3. தேவ கோபக்கினைக்கு நீங்கலாக்கப் பட்டிருக்கிறேன் என்பதை கூற வேண்டும்..
இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
ரோமர் 5.9
4. பாவ மன்னிப்பு.. பாவ உணர்வு.. பாவத்தின் சம்பளம்.. பாவத்தின் வஞ்சனை.. இவைகளின் தாக்கம் சபை நடுவில் தெரிவிக்க வேண்டும்..
புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள். இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள். அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது.
1 தெசலோனிக்கேயர் 2.16
5. நம்முடைய மனந்திறும்புதல் சபை நடுவில் தெரிவிக்கப்பட வேண்டும்..
நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள், அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார், நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்,
ஏசாயா 30.15
6. இரட்சிப்பை ஞானாஸ்நானத்திற்கு கீழ்ப்படிவதினால் சபை நடுவில் தேவனோடு நான் செய்த உடன்படிக்கையை தெரிவிக்க வேண்டும்..
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
மாற்கு 16.16
இறுதியாக சகோதரரே..
நம்முடைய இரட்சிப்பு பிறர் அறிவதே!!!
தேவசித்தம்..
இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.
கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்.
இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?
உண்மையான இரட்சிப்பை பெற்றவனே!!
2 கொரிந்தியர் 2.15-16
courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment