மேஜை நினைவு கூறுதல் தியானம்.. கிறிஸ்து சுமந்தார்..Table Remembrance Thought this week



 *கிறிஸ்து சுமந்தார்..* 


 *ஆரோன்* (பிரதான ஆசாரியன் ) சுமக்க வேண்டியவைகள்... 

1. *தங்கள் அக்கிரமம் சுமக்க வேண்டும்* 

ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், *அக்கிரமம் சுமந்து* அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும். இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை. 
யாத்திராகமம் 28:43

2. *சபையின் அக்கிரமம் சுமக்க வேண்டும்..* 

 பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே, *சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்பதற்குக்* கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவ நிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே. 
லேவியராகமம் 10:17

3. *பரிசுத்த ஸ்தலத்தைப் பற்றிய அக்கிரமம் சுமக்க வேண்டும்..* 

பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் *பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்,* 
எண்ணாகமம் 18:1a

4. *ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும்..* 

நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் *ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும்.* 
எண்ணாகமம் 18:1

5. *பரிசுத்தமானவைகளின் தோஷத்தை சுமக்க வேண்டும்..* 

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் *பரிசுத்தமானவைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி,* அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக. கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் அங்கிகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவன் நெற்றியின்மேல் இருக்கவேண்டும். 
யாத்திராகமம் 28:38


 *கிறிஸ்து* (மகா பிரதான ஆசாரியன்) சுமந்த காரியங்கள்.. 

1. *அநேகருடைய அக்கிரமங்களை சுமந்தார்..* 

அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார், என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார், *அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.* 
ஏசாயா 53:11

2. *அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்த்தார்..* 

கிறிஸ்துவும் *அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு* ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். 
எபிரேயர் 9:28

3. *நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்...* 

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே *நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்.* அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 
1 பேதுரு 2:24

4. *உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தார்..* 

மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, *உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.* 
யோவான் 1:29

5. *நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்த்தார்..* 

அவர் *நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க* வெளிப்பட்டாரென்று அறிவீர்கள். அவரிடத்தில் பாவமில்லை. 
1 யோவான் 3:5

6. *நம்முடைய துக்கங்களை சுமந்தார்..* 

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, *நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்,* நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். 
ஏசாயா 53:4

7. *தம்முடைய சிலுவையை சுமந்தார்..* 

அவர் *தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு,* எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள். 
யோவான் 19:17

8. *கிறிஸ்து தம் சிலுவையை சுமப்பதற்கு மனுஷீக எல்லை..* 

சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், *அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பல வந்தம்பண்ணினார்கள்* . 
மாற்கு 15:21


 *Worship message..* 
ஆராதனை செய்தி.. 

கர்த்தருடைய மேஜை முன்பு ஆராய்ந்து பார்ப்போம்... 

1. Before worshipping..

 *Looking in our burden..

 *வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே* ! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 
மத்தேயு 11:28

2. During reasonable worship..

 *Looking out Jesus Christ..* 

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு (சுமந்து கொண்டு ) என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 
மத்தேயு 11:29

3. Result of reasonable worship..

 *Burden easened..* 

என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார் 
மத்தேயு 11:33

ஆராதனை வார்த்தையில் அல்ல
வாழ்க்கையில்..
ஆராதனை அலங்காரத்தில் அல்ல
அகமகிழ்வில்..

ஆகவே நடைமுறை வாழ்க்கையில் சுமக்க வேண்டிய நற்கிரியைகள்..

1. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமப்போம்..
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
கலாத்தியர் 6.2

2. கிறிஸ்துவின் நிந்தையை சுமப்போம்..
ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப்போகக்கடவோம்.
எபிரேயர் 13.13

3. இயேசுவின் மரணத்தை சுமப்போம்..
கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
2 கொரிந்தியர் 4.10

சீஷனாக வாழுவோம்..

 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
லூக்கா 14.27


கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 
meetshalomsteward@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA