தேவன் ஒரு மனிதனை சந்திப்பதே இரட்சிப்பு..தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார்... LORD'S VISITATION AN IMPORTANT EVENT IN SALVATION..
தேவன் ஒரு மனிதனை சந்திப்பதே இரட்சிப்பு...
தேவன் தமது ஜனங்களை சந்தித்தார்..
லூக்கா 7.11-16..
மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார், அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள், அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள், ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்டவந்து, பாடையைத் தொட்டார், அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள், அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
லூக்கா 7:11-16
*அதிகாலை* , *பொழுது விடியும் முன்னே, அதிக இருட்டோடே ..* இந்த நேரங்கள் வேதத்தில் முக்கிய நேரங்கள்..
அதிகாலை அனுபவங்கள்..
@ அதிகாலை ஆபிரகாம் தனக்கு குறிக்கப்பட்ட இடத்திற்கு போனான்
@ தேவன் சகாயம் பண்ணுவார்,
@ ஆணையிட்டார்கள்,
@ யாக்கோபு தூணை நிறுத்தினான்,
@ எழுந்து கர்த்தரை பணிந்து கொண்டு,
@ வசனத்திற்கு காத்திருக்கிறேன்,
@ உமது கிருபை விளங்க பண்ணும்,
@ உரத்த சத்தத்தின் ஆசிர்வாதம்,
@ இருட்டோடே எழுந்து ஜெபம் பண்ணினார்,
@ வாரத்தின் முதல் நாள் அதிகாலை ஸ்திரீகள் ஆயத்தம்,
@ இயேசு கிறிஸ்து தரிசனமானர்..
நான்கு சுவிசேஷத்திலும்
ஒவ்வொரு அற்புதங்கள், ஒவ்வொரு அருளுரை அல்லது பேருறை
*miracles & disclosures*
words & deeds..
*வார்த்தையிலும் செய்கையிலும்*
வழியாக இயேசு கிறிஸ்து ஏதாவதொரு சத்தியத்தை நிலை நிறுத்துவார்..
*இந்த அற்புதம் 6 முக்கிய சத்தியங்கள் அடங்கியது..*
1. *miracle without request..*
*வேண்டுதல் இல்லாத அற்புதம்..*
2. *கர்த்தர் என்கிற பதம்* லூக்கா இந்த 13 ம் வசனத்தில் பயன் படுத்தினார்..
*The LORD kyrios..*
அவருடைய இறையாண்மை..
*கர்த்தர்* அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
லூக்கா 7:13
3. *உயிரோடிருக்கும் மனிதனோடு பேசுவது போல பேசுகிறார்..*
அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், *மரித்தோரை உயிர்ப்பித்து,* *இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற* தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
ரோமர் 4:17
4. *இது உயிர்த்தெழுதலுக்கு நிழல் அல்ல..*
மீண்டும் அதே நிலைக்கு கொண்டு வரும் நிகழ்வு..
*not resurrection..உயிர்த்தெழுதல்..நிழல் அல்ல
it's resuscitation..*
resuscitated; he rose from the dead only to die again. God promises that we will be resurrected and rise from the dead never to die again.
5. *தீர்க்கதரிசிகள் விட பெரியவர் கர்த்தர்..*
6. *தேவன் தமது ஜனங்களை சந்தித்தார்..*
The Lord Visited..
பிரவேசித்தார்..
மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் *பிரவேசிக்கச்செய்தபோது* : தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள். என்றார்.
எபிரேயர் 1:6
மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார், அவருடைய சீஷர் அநேகரும் *திரளான ஜனங்களும்* அவருடனேகூடப் போனார்கள்.
லூக்கா 7:11
அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள், அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள், *ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.*
லூக்கா 7:12
கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் *மனதுருகி* : அழாதே என்று சொல்லி,
லூக்கா 7:13
கிட்டவந்து, பாடையைத் தொட்டார், அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள், அப்பொழுது அவர்: *வாலிபனே, எழுந்திரு* என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 7:14
மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் *ஒப்புவித்தார்* .
லூக்கா 7:15
எல்லாரும் பயமடைந்து: *மகாதீர்க்கதரிசியானவர்* நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், *தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார்* என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
லூக்கா 7:16
*தேவன் சந்தித்தார்..* என்பது நம்முடைய இரட்சிப்பின் திட்டத்தில் மிக முக்கியமான நிகழ்வு ஆகும்..
ஜனங்கள் விசுவாசித்தார்கள். *கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார்* என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்.
யாத்திராகமம் 4.31
அப்பொழுது அவர்கள்: *எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார்.* நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும். போகாதிருந்தால், அவர் கொள்ளைநோயும் பட்டயமும் எங்கள் மேல் வரப்பண்ணுவார் என்றார்கள்.
யாத்திராகமம் 5.3
*கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து,* அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடுகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,
ரூத் 1.6
அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான், பெத்தேலிலே *அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.*
ஓசியா 12.4
*தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு,* நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு,
லூக்கா 1.74
நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே *உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது* என்றான்.
லூக்கா 1.79
*இந்த நாளின் காலை வேளையில் நாம் இவ்வாறு கேட்போம்..*
*நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம்* என்பதை அறிந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து,
யோபு 23.3
*உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால்,* உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
லூக்கா 19.43
*கடைசியாக சகோதரரே..*
ஆகையால் இஸ்ரவேலே, இந்தப் பிரகாரமாக உனக்குச் செய்வேன். இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிற படியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
ஆமோஸ் 4.12
courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301
Comments
Post a Comment