உங்கள் எதிராளி பற்றி அறிந்து கொள்ளுங்கள்..Know your Adversary or Accuser



உங்கள் எதிராளி பற்றி அறிந்து கொள்ளுங்கள்..
Know your Adversary or Accuser


*யார் எனக்கு எதிராளி?* 
 *Who is my accuser?* *adversary?* 

நீதிமானாக்குகிறவர்...vs எதிராளி
 என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார், என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, *யார் எனக்கு எதிராளி?* அவன் எ,ன்னிடத்தில் வரட்டும்.
ஏசாயா 50.8

சர்வவல்லவர்...vs எதிராளி
 ஆ என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும். இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் *எதிராளி* தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.யோபு 31.35

 அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள், உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது, தன் *எதிராளிகளெல்லார்மேலும்* சீறுகிறான்.
சங்கீதம் 10.5

 நான் சீக்கிரத்தில் அவர்கள் *எதிராளியை* தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
சங்கீதம் 81.14


*யார் எனக்கு எதிராளி?


1. அவன் எதிராளி..

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 
1 பேதுரு 5:8

2. அவன் பொய்யன்..

நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள், உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள், அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான், சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை, அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். 
யோவான் 8:44

3. அவன் திருடன்..

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். 
யோவான் 10:1

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். 
யோவான் 10:10

4. அவன் கொலை பாதகன்..

நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள், உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள், அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான், சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை, அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். 
யோவான் 8:44

5. அவன் குற்றம் சுமத்துபவன்..

 அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது, இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான். 
வெளிப்படுத்தின விசேஷம் 12:10

6. அவன் சோதனைக்கரன்..

அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். 
மத்தேயு 4:3

ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன். 
1 தெசலோனிக்கேயர் 3:5


7. அவன் ஒளியின் தூதன்..

அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. 
2 கொரிந்தியர் 11:14

8. அவன் உலகத்தின் அதிபதி..

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். 
2 கொரிந்தியர் 4:4

9. அவன் பெரிய வலு சர்ப்பம்..

உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது, அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். 
வெளிப்படுத்தின விசேஷம் 12:9

10. அவன் அழிந்து போகிறவன்..

 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். 
வெளிப்படுத்தின விசேஷம் 20:10

11. அவன் கேட்டின் மகன்..

 நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன், நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டுவந்தேன், வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. 
யோவான் 17:12


12. அவன் தந்திரக்காரன்..

சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு, அப்படிச் செய்தேன். அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே. 
2 கொரிந்தியர் 2:11

13. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு..

உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது, அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். 
வெளிப்படுத்தினத விசேஷம் 12:9


கடைசியாக சகோதரரே..

கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் *எதிராளிகளினிமித்தம்* செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.
சங்கீதம் 27.11

courtesy:
 கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
 50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA