விசுவாசிகளின் பிரிக்க முடியாதவைகள்.. விசுவாசிகளும் சிலுவையும்..Inseperables of believers..The Cross



 *விசுவாசிகளின் பிரிக்க முடியாதவைகள்..* 

 *Believer's Inseparable ..* 


1. _விசுவாசிகளும் கர்த்தருடைய வார்த்தையும்_ .. 

2. _விசுவாசிகளும் தேவனுடைய ஆவியானவரும்_ .. 

3. _விசுவாசிகளும் ஆராதனையும்_ .. 

4. _விசுவாசிகளும் நித்தியமும்_ .. 

5. _விசுவாசிகளும் பாடுகளும்.._ 

6. _விசுவாசிகளும் கிருபையும்.._ 

7. _விசுவாசிகளும் சிலுவையும்.._ 

 


_விசுவாசிகளும் சிலுவையும்.._

1. _பிரிக்க முடியாது.._ 

 நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு *மரித்ததுண்டானால்* , இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, 
கொலோசெயர் 2:20

 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட *எழுந்ததுண்டானால்* , கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். 
கொலோசெயர் 3:1

2. _சுயம் சிலுவையில்.._ 

கிறிஸ்துவுடனேகூடச் *சிலுவையிலறையப்பட்டேன்* ; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். 
கலாத்தியர் 2:20

3. _பாவத்துக்கு ஊழியஞ் செய்ய முடியாது_ .. 

நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் *சிலுவையில்* அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். 
ரோமர் 6:6

4. _மாம்சம் இச்சை சிலுவையில்_ .. 

 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் *சிலுவையில்* அறைந்திருக்கிறார்கள். 
கலாத்தியர் 5:24

5. _உலகம் சிலுவையில்.._ 

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்குச் *சிலுவையிலறையுண்டிருக்கிறது* , நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்
கலாத்தியர் 6:14

 *சிந்திக்க* :
 சாத்தான் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட விரும்பவில்லை. அதே போல நாமும் *சிலுவையில்* அறையப்பட்ட விரும்புவதில்லை. 
மாற் 15.32, மத் 27.40

6. _சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவை மறப்பது_ .. 

 புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து *சிலுவையிலறையப்பட்டவராக* உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. 
கலாத்தியர் 3:1

7. _உண்மையான சுவிசேஷம் சிலுவையை பற்றி இடறல்_ 

 சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் *சிலுவையைப்பற்றி* வரும் இடறல் ஒழிந்திருக்குமே. 
கலாத்தியர் 5:11

8. _சகோதரருக்குள் சமாதானம்.. பகை ஒழியும்_ 

 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, 
பகையைச் *சிலுவையினால்* கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார். 
எபேசியர் 2:16

9. _சகோதரருக்குள் தாழ்மை கொண்டு வரும்._ . 

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது *சிலுவையின்* மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். 
பிலிப்பியர் 2:8

10. _உண்மையான விசுவாசிகளுக்கு சிலுவை நிமித்தம் பகைஞர் உண்டு_ .. 

ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் *சிலுவைக்குப்* பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுதும் கண்ணீரோடும் சொல்லுகிறேன். 
பிலிப்பியர் 3:18

11. _விசுவாசிகளுக்கு தேவ பெலன்.._ 

 *சிலுவையைப்* பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 
1 கொரிந்தியர் 1:18

12. _விசுவாசிகள் பிரசங்கத்தின் ஆதாரம் சிலுவை._ . 

 நாங்களோ *சிலுவையில்* அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம். அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமயும் இருக்கிறார். 
1 கொரிந்தியர் 1:23

13. _சிலுவை பாத்திரவனாக்குகிறது_ 

தன் *சிலுவையை* எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
மத்தேயு 10.38


          *Closing thought..* 

 _சிலுவையினிமித்தம் துன்பப்படாமல் வேஷம் நிறைந்த வாழ்க்கை விசுவாசிக்கு வேண்டாம்_ .. 

 மாம்சத்தின்படி நல்வேஷமாய்க்காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய *சிலுவையினிமித்தம்* துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்.
கலாத்தியர் 6.12

courtesy 
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA