அழிவில்லாத வித்து* INCORRUPTIBLE SEED
*அழிவில்லாத வித்து*
எகிப்து தேசத்தில் கெய்ரோ நகரில் கிசோ பிளாட்டோ பகுதியில் உள்ள ஒரு பிரமிட் பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஆகும்..
அதை ஒரு சில காரணங்களால் உடைத்து அழிக்க அரசு முடிவு செய்தது.. அதை உடைக்க ஆரம்பித்து முழுவதும் அகற்றி கொண்டிருந்தார்கள்..
இறுதியில் பிரமிட் உள்ளே மம்மி என்று அழைக்கப்படும் மன்னர்கள் உடல் வைக்கப்பட்ட அந்த சிறிய அறை சோதனை செய்தார்கள்..
அங்கே மம்மி தலை மாட்டில் ஒரு பித்தளை செம்பு இருந்தது.. அதற்குள் சில *விதைகள்* ( *வித்து* ) வைக்கப்பட்டிருந்தது..
ஆராய்ச்சியாளர்கள் அழைக்கப்பட்டு இது எந்த வகை செடியின் விதைகள், எதற்காக இங்கே பாதுகாக்கப்பட்டது , இதன் விசேஷம் என ஆராய்ந்து பார்த்தார்கள்.. கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது..
இறுதியில் ஒருவர் ஆலோசனை படி அந்த *வித்து* தரையில் விதைக்கப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது..
ஆச்சரியம் ஒரு சில நாட்கள் கழித்து அழகான மூலிகை செடி முளைத்து வளர்ந்து எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியது..
எத்தனை நூற்றாண்டுகள் கழித்து இந்த வித்து உயிர் பெறுகிறது..
*வேதத்தின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு வித்து..*
Many gardeners cite the seeds found in ancient Egyptian pyramids as evidence. According to the popular story, these seeds, after lying dormant for thousands of years, sprouted when planted. Most scientists would agree on the perfect conditions for storing seeds.
அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய *அழிவில்லாத வித்தினாலே* மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
1 பேதுரு 1:23
மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது. புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
1 பேதுரு 1:24
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.
1 பேதுரு 1:25
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் *அவருடைய வித்து* அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
1 யோவான் 3:9
*வேதத்தின் ஒரு உறுப்பு..*
வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 5.18
வேதத்தின் 6 விதமான தன்மைகளும் அதன் செயல்பாடுகளும் சங்கீதம் 19 ல் தாவீது எழுதுகிறார்..
*6 FOLD DIMENSIONS & OPERATIONS OF THE WORD OF GOD IN PSALMS 19*
DIMENSIONS.. தன்மைகள்
1....
*கர்த்தருடைய வேதம்*
*LAW OF THE LORD*
குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது,
2...
*கர்த்தருடைய சாட்சி*
*SATUTES OF THE LORD*
சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
சங்கீதம் 19:7
3....
*கர்த்தருடைய நியாயங்கள்*
*PRECEPTS OF THE LORD*
செம்மையும் இருதயத்தை சந்தோசஷிப்பிகிறதுமாருக்கிறது..
4...
*கர்த்தருடைய கற்பனை*
*COMMANDS OF THE LORD*
தூய்மையும் கண்களை தெளிவிக்கிறதுமாயிருக்கிறது..
5....
*கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்*
*FEAR OF THE LORD*
சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது,
6....
*கர்த்தருடைய நியாயங்கள்*
*ORDINANCES OF THE LORD*
உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.
சங்கீதம் 19:9
அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.
சங்கீதம் 19:10
OPERATIONS..செயல்பாடுகள்..
1...
அன்றியும் அவைகளால் உமது அடியேன் *எச்சரிக்கப்படுகிறேன்* ,
2....
அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் *மிகுந்த பலன் உண்டு.*
சங்கீதம் 19:11
3....
தன் *பிழைகளை உணருகிறவன்* யார்?
4....
*மறைவான குற்றங்களுக்கு* என்னை நீங்கலாக்கும்.
சங்கீதம் 19:12
5...
*துணிகரமான பாவங்களுக்கு* உமது அடியேனை விலக்கிக்காரும்,
6...
அவைகள் என்னை *ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்,*
END RESULT..
*அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.*
சங்கீதம் 19:13
கர்த்தருடைய வசனம் வெறுமையாய் திரும்பாது..
மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,
ஏசாயா 55:10
*அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்,* அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
ஏசாயா 55:11
கர்த்தருடைய வசனம் கட்டப்பட்டிருக்கவில்லை.
இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன். தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை
2 தீமோத்தேயு 2.9
courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301
Comments
Post a Comment