ஆவியில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? In Spirit what's your status?
ஆவியில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?
@ ஆவியில் இரட்சிக்கப்பட்டோம்..
ஒரு நாள் நீதிமான்களானோம்..
பாவத்தின் தண்டனை இல்லை..
@ ஆத்துமாவில் இரட்சிக்கப்படுகிறோம்..
அனுதினம் பரிசுத்தமாகிறோம் ..
பாவத்தின் வல்லமையை ஜெயிக்கிறோம்..
@ சரீரத்தில் இரட்சிக்கப்படுவோம்..
இனி மீட்கப்படுவோம்..மகிமைப்படுவோம்..
பாவத்தின் பிரசன்னத்தில் இருந்து விலகுவோம்..
இந்த சிந்தைகளினாலே அனேக சத்தியங்களை ஆராய்ந்து பார்க்காமல் தேவன் வெளிப்பாடுகளை இழந்து விடுகிறோம்..
ஆவி, ஆத்துமா, சரீரம் பிரிக்க முடியாது..
தேவன் மனிதர்களிடம் வாசம் பண்ண தெரிந்து கொண்ட அமைப்பு தான்
ஆவி ஆத்துமா சரீரம்.. Spirit Soul Body..
1. நோவாவுடன் தங்கியிருக்க பேழை ..
மூன்று தட்டுகள் ( ஆவி ஆத்துமா சரீரம்.)
2. மோசே.. இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் தங்க ஆசரிப்புக் கூடாரம்..
பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்..( ஆவி ஆத்துமா சரீரம்.)
3. சாலொமோன் கட்டின தேவாலயம்..
பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்..( ஆவி ஆத்துமா சரீரம்.)
4. அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியதினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே ( ஆவி ஆத்துமா சரீரம்.) வாசம் பண்ணினார்..
பாவம் எப்படி ஆவியில் கர்ப்பம் தரித்து ஆத்துமாவில் கரு வளர்ந்து சரீரத்தில் பிறக்கிறதோ.. அதே போல்
அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும் ( சரீரம் ), பார்வைக்கு இன்பமும் ( ஆத்துமா ) புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க ( ஆவி ) விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.
ஆதியாகமம் 3:6
ஆவியில் ஆரம்பிக்கிற பாவம் ஆத்துமாவையும் சரீரம் முழுவதையும் பாதிக்கிறதே!
சரீரத்தில் செய்கிற பாவம் ஆத்துமாவையோ ஆவியையோ பாதிக்காது என்பது தான் நிக்கோலாய் மதம்..
அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு, அதை நான் வெறுக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:15
நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:16
அதே போலவே ஆவியில் பரிசுத்தம் ஆத்துமாவையும் சரீரத்தையும் பரிசுத்தமாக்குகிறது..
நீங்கள் இந்த சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,
உபாகமம் 32:50
உன் சகோதரனாகிய ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரித்து, தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரித்து, உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்.
உபாகமம் 32:51
இன்றைக்கு நீங்கள் ஆவியில் எப்படிப்பட்டவர்கள் என்று சிந்திப்போம்..
In Spirit your status?
ஆவியில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?
1. In Spirit are you born again?
ஆவியில் மறுபடியும் பிறந்தீர்களா?
காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது: ஆவியினாலும் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
யோவான் 3:8, கலா 4.29
2. In Spirit your life started?
ஆவியில் உங்கள் ஜீவியம் ஆரம்பமானதா?
ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?
கலாத்தியர் 3:3
3. In Spirit are you cleansed?
ஆவியில் நீங்கள் கழுவப்பட்டீர்களா?
உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
1 கொரிந்தியர் 6:11
4. In Spirit are you delivered?
ஆவியினால் விடுதலை அடைந்ததுண்டா?
கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
ரோமர் 8:2
5. Are you received first fruits of Spirit?
ஆவியின் முதற் பலன்கள் பெற்றிருக்கிறோமா?
அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
ரோமர் 8:23
6. In Spirit are you leadeth?
ஆவியினால் நடத்தப்படுகிறீர்களா?
மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
ரோமர் 8:14, 8.4
7. By Spirit are you put to death your body?
ஆவியினால் சரீரத்தின் செய்கை அழிக்கிறீர்களா?
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
ரோமர் 8:13
8. Are your mind governed by Spirit?
ஆவியின் சிந்தை உங்கள் ஜீவியத்தை கண்காணிக்கிறதா?
அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள், ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
ரோமர் 8:5
மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
ரோமர் 8:6
9. Are you purposed in Spirit?
உங்கள் அனுதின நடக்கைகளை ஆவியில் நிருணயம் பண்ணுகிறீர்களா?
இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றிநடந்து, எருசலேமுக்குப்போகும்படி ஆவியில் நிருணயம்பண்ணிக்கொண்டு; நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி,
அப்போஸ்தலர் 19:21
10. Are you pressed in Spirit?
நீங்கள் ஆவியில் வைராக்கியம் உள்ளவர்களா?
மக்கெதோனியாவிலிருந்து சீலாவும், தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.
அப்போஸ்தலர் 18:5. 17.16
11. Are you forbidden by Spirit in your day to day decisions?
உங்கள் அனுதின தீர்மானங்களில் ஆவியினால் தடை செய்யப்படும் அனுபவம் உண்டா?
அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
அப்போஸ்தலர் 16:6
12. Are you fervent in Spirit?
ஆவியில் அனல் உள்ள ஜீவியம் வாழ்கிறீர்களா?
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
ரோமர் 12:11, அப் 18.25
13. Are you experienced Fullness of Spirit everyday?
ஆவியின் நிறைவு அனுதினம் அனுபவிக்கிறீர்களா?
அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்தஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து;
அப்போஸ்தலர் 13:9, எபேசியர் 5.18-19
14. Is our Gospel strengthened in Spirit?
நம் சுவிஷேச வார்த்தையில் ஆவியின் பெலன் உள்ளதா?
என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்பட்டதாயிருந்தது.
1 கொரிந்தியர் 2:5
15. Is the Spirit reveals you the biblical understanding?
ஆவியானவர் வேத புரிதலை உங்களுக்கு அருளுகிறாரா?
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
1 கொரிந்தியர் 2:10
16. Are you glorifying the Lord in Spirit?
நீங்கள் ஆவியினால் தேவனை மகிமைப்படுத்துகிறீர்களா?
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
1 கொரிந்தியர் 6:20
17. Are you declare Jesus as Lord in Spirit?
நீங்கள் இயேசுவை கர்த்தர் என்று ஆவியில் அறிக்கை செய்கிறீர்களா?
ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
1 கொரிந்தியர் 12:3
18. Are you being cleansed from every defilement in Spirit..
உங்கள் ஆவியில் அசுசி நீங்க சுத்திகரிப்பு செய்கிறீர்களா?
இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
2 கொரிந்தியர் 7:1
19. Are you strengthened in inner man by Spirit?
நீங்கள் அவருடைய ஆவியினால் உள்ளான மனிதனில் பெலப்படுகிறீர்களா?
நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,
எபேசியர் 3:16
20. Are you keep yourself united in the Spirit?
ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள் கிறீர்களா?
சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
எபேசியர் 4:3
21. How is your Spiritual fruit manifeted?
உங்கள் ஆவியின் கனி இவ்வாறு வெளிப்படுகிறதா?
ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.
எபேசியர் 5:9
22. Are you obeying truth in Spirit?
ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படி கிறீர்களா?
ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்.
1 பேதுரு 1.22
23. Does your preaching carried along by Spirit?
உங்கள் போதகம் ஆவியால் ஏவப்பட்டு போதிக்கப்படுகிறதா?
தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
2 பேதுரு 1:21
கடைசியாக சகோதரரே..
பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டுத் தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
வெளிப்படுத்தினத விசேஷம் 21:10
courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301
Comments
Post a Comment