ஒரே நிகழ்வை ஆண்டவர் நம் அழைப்புக்கும் நம் பின்மாற்றத்திற்கும் பயன் படுத்துகிறார்..God using same incident for your calling and backsliding..



ஒரே நிகழ்வை ஆண்டவர் நம் அழைப்புக்கும் நம் பின்மாற்றத்திற்கும் பயன் படுத்துகிறார்..
God using same incident for your calling and backsliding..

சீமோன் பேதுருவின் ஊழிய அழைப்பு..கெனேசரேத்துக் கடல் அருகே..
முதல் நிகழ்வு..

1. தேவ வசனம் உங்களை இயேசு கிறிஸ்துவிடம் நெருக்கமாக செய்கிறதா?

 பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். 
லூக்கா 5:1

2. படவுகள் - மனிதர்கள்..
இயேசு கிறிஸ்து மனிதர்களை விரும்புகிறார் தம்முடைய ஊழியத்தை செய்ய..
மனிதர்கள் தேவனுடைய முறைமைகள்.. ஆனால் மனிதர்களை மட்டும் அவர் சார்ந்து இருப்பதும் இல்லை..

அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். 5.2

3. இயேசு கிறிஸ்துவுக்கு வேலை செய்ய எப்பொழுதும் சுறு சுறுப்பானவர்கள் தான் வேண்டும்.. இங்கே இன்னொரு பாடம் ஆயத்தம் நமக்கு அவசியம்..

 மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலைசிக்கொண்டிருந்தார்கள். 
லூக்கா 5:2

4. இரண்டு படவுகளில் ஒன்று இயேசு கிறிஸ்துவின் போதனை பீடமாக மாறுகிறது..அது உங்களுடைய தா?

 அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது,

5. படகாகிய நீங்கள் மற்றவர்களுக்கு நிருபங்களாக வாழுகிறார்களா ?

 அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். 
லூக்கா 5:3

6. பேதுரு மீன்பிடிப்பதில் திறமையானவர்.. ஆனால் இயேசு கிறிஸ்து தன்னுடைய ஞானத்தை நாம் பயன்படுத்த விரும்புகிறார்..

அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். 
லூக்கா 5:4

7. தனது திறமையினால் பயன் இல்லை என்பதை பேதுரு இயேசு கிறிஸ்துவின் முன் அறிக்கை செய்கிறான்..

அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். 
லூக்கா 5:5

8. இயேசு கிறிஸ்து "  என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது"
யோவான் 15:5 என்பதை பேதுருவுக்கு கற்று கொடுக்கிறார்..

அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். 
லூக்கா 5:6

9. ஒரு படகைத் தான் இயேசு கிறிஸ்து பயன் படுத்தினார்.. ஆனால் இரண்டு படவுகள் நிரம்புகிறது.. இது ஊழியத்தில் ஊழியர்கள் ஐக்கியத்தை காட்டுகிறது.. இரண்டு படவுகளும் நிரம்புகிறது..

அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள், அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். 
லூக்கா 5:7

10. இயேசு கிறிஸ்து நாம் பெலவீனர்கள் என்பதை தன்னிடம் அறிக்கையிட விரும்புகிறார்..

சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான். 
லூக்கா 5:8

11. ஊழியத்தில் நாம் வெளியரங்கமானவர்களாக
 (transparent living)  இருக்க வேண்டும்..

அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான். 
லூக்கா 5:9
சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள.

12. இயேசு கிறிஸ்து நம் அழைப்பை
  ( சீமோன்)  இங்கே பிரகடனம் செய்கிறார்..
மீன்கள் அல்ல.. மனிதர்களே நம் நோக்கம்.. ஆதாயம் 

 அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். 
லூக்கா 5:10

13. ஊழியம் என்பது முழுமை பெற்றது..
தனித்துவம் வாய்ந்தது..
முழு மனதும் பாரம் நிறைந்தது ..
சில குறைவுகளை முழுமையாக அகற்ற வேண்டும்..

அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 
லூக்கா 5:11

=========================================


சீமோன் பேதுருவின் பின் மாற்ற நிலையில் மறு அழைப்பு.. திபேரியாக் கடல் அருகே..
இரண்டாம் நிகழ்வு..

1. இயேசு கிறிஸ்து நம் பின்மாற்றத்தை விரும்பாமல் நம்மை தேடி மீண்டும் நம் அருகே வருகின்றார்.. தன்னை மீண்டும் வெளிப்படுத்துகிறார்..

இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார், வெளிப்படுத்தின விவரமாவது: 
யோவான் 21:1

2. பேதுருவின் ஊழிய தலைமைத்துவம் மிகவும் அருமையாக ஐக்கியத்துடன் இருப்பது நம் ஊழிய ஒத்துழைப்பு எவ்வாறு இருக்கும் என்பதை நினைவு படுத்துகிறது..

சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது, 
யோவான் 21:2

3. ஊழியத்தில் மற்றும் நம் அனுதின ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிடும்..

சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான்.

4. ஊழியத்தில் தலைமைத்துவம் ரொம்ப முக்கியம்.. நாம் தவறு செய்யும் போது நம்முடைய தவறு நம்மை சார்ந்தவர்கள் செய்கிறார்கள்.. யோசிக்காமல் செய்கிறார்கள்..

 அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள்.

5. நம்முடைய அழைப்பின் போது நாம் எதிர் கொள்ளும் அதே தோல்வி நம் பின் மாற்றத்திலும் வருகிறது தேவனுடைய யுக்தி.. ஞானம்..

 அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. 
யோவான் 21:3

6. நம் அழைப்பின் போது எப்படி கனிவோடு செயல்பட்டாரோ. .. அதே கரிசனை இயேசுகிறிஸ்துவின் அன்பு..

 விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார், 

7. நம் பின்மாற்றத்துக்கான முதல் அறிகுறி..
இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் சக்தி இழக்கிறோம் 

அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள். 
யோவான் 21:4

8. நம் பின்மாற்றத்துக்கான இரண்டாம் அறிகுறி.. நம்மில் வெறுமை..

இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள். 
யோவான் 21:5

9. ஊழிய அழைப்பில் முதல் நிகழ்வு ஆழத்தில்.. லூக்கா 5
பின்மாற்ற மீட்பின் அழைப்பில் இரண்டாம் நிகழ்வு வலது புறம்.. யோவான் 21

அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். 

10. இங்கே உடனடி கீழ்ப்படிதல் அவசியம்.. பின்மாற்றத்தில் இருக்கும் போது நாம் எந்த மறுப்பு கேள்வியும் இயேசு கிறிஸ்துவிடம் கேட்க முடியாது..

அப்படியே அவர்கள் போட்டு, 

11. இயேசு கிறிஸ்து நம் கீழ்ப்படிதல் அங்கீகரிக்கிறார்.. நம் அழைப்பின் போது என்ன கிருபையோ அதே கிருபை அருளுகிறார்..

திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள். 
யோவான் 21:6

12. நம் இரட்சிப்பிலும் பின் மாற்றத்திலும் ஒரே அறிக்கை.. அவர் கர்த்தர்..

 ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். 

13. இங்கே பேதுருவின் தலைமைத்துவம் restore மீண்டும் மீட்பு செய்யப்படுகிறது..

அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக் கொண்டு கடலிலே குதித்தான். 
யோவான் 21:7

14. இங்கே ஊழியத்தின் ஐக்கியம் restore மீண்டும் மீட்பு செய்யப்படுகிறது.

 மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழுத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்து கொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள். 
யோவான் 21:8

=========================================


பேதுருவின் முழுமையான அர்ப்பணம் நமக்கும் தேவை..

இயேசு கிறிஸ்துவின் முதல் அன்பின் வெளிப்பாடு..
அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: 
யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 
யோவான் 21:15

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் அன்பின் வெளிப்பாடு..
இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்;:என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 
யோவான் 21:16

Jesus ' Final loving ❓
இயேசு கிறிஸ்துவின் இறுதி அன்பின் வெளிப்பாடு..

மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான்.


 இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 
யோவான் 21:17


விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். 
எபிரேயர் 10:38

 நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம். 
எபிரேயர் 10:39

courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA