ஒரு ஊழியனின் முழுமையான அர்ப்பணம்.. ஏசாயா தரிசனத்திலிருந்து கதிர்கள்..gleanings from Isaiah Vision




 _ஒரு ஊழியனின் முழுமையான அர்ப்பணம்_ .. 

Gleanings from.. Isaiah 6.._ 

 _ஏசாயா 6.._    கதிர்கள் .. 


 *ஏழு சிங்காசனத்தை வேதம் காட்டுகிறது* .. 

1. _உயரமும் உன்னதமுமான சிங்காசனம்_ .. 
ஏசாயா 6.1
Throne of holiness..

2. _கிருபையின் சிங்காசனம்._ . 
எபி 4.16
Throne of grace..

3. _மகிமையின் சிங்காசனம்._
மத் 25.31
Throne of glory.. 

4. _ஆராதனையின் சிங்காசனம்_ .. 
வெளி 4.10
Throne of worship.. 

5. _நியாயத்தீர்ப்பின் சிங்காசனம்.._ 
வெளி 20.11
Throne of judgement.. 

6. _ஆட்டுக்குட்டியானவரின் சிங்காசனம்.._ 
வெளி 22.3
Throne of life..

7. _பிதாவின் வலது பாரிச சிங்காசனம்_ .. 
எபி 8.1
Throne of eternal priesthood.. 


 _ஏசாயா கண்ட சிங்காசனத்தை சிந்திக்கலாம்_ .. 

 *ஏசாயா 6.1-8* 

ஏசாயா தன்னை பெருமையாக எண்ணிக்கொண்டு சுய நீதியினால் தன் ஜனங்களை இவ்வாறு கண்டிக்கிறார்..

வானங்களே, கேளுங்கள், பூமியே, செவிகொடு, கர்த்தர் பேசுகிறார், நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன், அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள். 
மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும், இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார். 
ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடுஉண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள், கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள். 
ஏசாயா 1:2-4

ஏசாயா தன் உள்ளான நிலையை தேவனுடைய சிங்காசனத்தின் முன் காணும்போது தன்னையே நொந்து தான் அசுத்த உதடுகள் உள்ள மனிதன் என்கிறார்..

அந்த சுய பரிசோதனையை நாம் சிந்திப்போம்..

1. _ஏசாயா கண்டான்.._ 
 *The vision...* 

உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன், அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. 
ஏசாயா 6:1

ஏசாயா கண்டது :
@ வீற்றிருந்தார் 
@ உயர்ந்திருந்தார் 
@ நிறைந்திருந்தார் 

தேவன் நியாத்தீர்ப்பினால் உயர்ந்திருக்கிறார். 
ஏசாயா 5.16

தாசன் உயர்த்தப்பட்டு மகா மேன்மையும் உன்னதமுமாயிருப்பர். ஏசாயா 52.13

எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவர்.
 எபே 1.21-23

யோபு தன் பாடுகளின் இறுதியில் தேவனை காண்கிறான். 

 இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. 
யோபு 42:5b

பாவக்கண்ணால் உம்தன் மாண்பை காண யார் வல்லோர்? 
தூய தூய தூயரே.. 

 *Isaiah saw...* 


2. _ஏசாயா கேட்டான்_ .. 
 *The burden..* 

சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன, அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து, 
ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. 
ஏசாயா 6:4

ஏசாயா கேட்டது சேராபீன்களின் சத்தம்.. 
" *பரிசுத்தர்* .. *பரிசுத்தர்* ... *பரிசுத்தர்* ..

Trihagion..
மூன்று முறை ஒரு வார்த்தை சொல்லப்படுகிறது.. 

அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் *பரிசுத்தர்* *பரிசுத்தர்* *பரிசுத்தர்* என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. 
வெளிப்படுத்தின விசேஷம் 4:8

 *தேசமே* ! *தேசமே* ! *தேசமே* ! கர்த்தருடைய வார்த்தையைக் கேள். 
எரேமியா 22:29

இது திரித்துவ மாண்பை காட்டுகிறது. 

பிதாவாகிய தேவன் பரிசுத்தர்.. 
குமாரனாகிய தேவன் பரிசுத்தர்.. 
ஆவியாகிய தேவன் பரிசுத்தர்.. 

ஏசாயா கேட்டான்.. 
கர்த்தருடைய வார்த்தையாகிய பரிசுத்தத்தை.. 

யோபு தன் பாடுகளின் இறுதியில் தேவனுடைய வார்த்தையை கேட்கிறான்.. 

என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன். 
யோபு 42:5a

 *Isaiah heard....* 


3. _ஏசாயா பேசினான்_ .. 
 *The obedience..* 

அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன், சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். 
ஏசாயா 6:5

ஏசாயா 1-5 அதிகாரங்களில் ஜனங்களை பார்த்து இவ்வாறு கூறுகிறார்.. 

 *ஐயோ, பாவமுள்ள ஜாதியும்,* அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடுஉண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள், கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள். 
ஏசாயா 1:4

பரிசுத்த சிங்காசனத்தை கண்ட பின்பு தன்னை பற்றி இவ்வாறு கூறுகிறான். 

 அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்..
ஏசாயா 6:5

ஒரு ஊழியனின் முழுமையான சுய பரிசோதனை இங்கே காணப்படுகிறது. 

யோபு... 
ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். 
யோபு 42:6

யோவான் அப்போஸ்தலன்.. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில்விழுந்தேன், அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன், 
வெளிப்படுத்தின விசேஷம் 1:17

 *Isaiah spoke...* 


4. _ஏசாயா தொடப்பட்டான்_ .. 
 *The preparation..* 

அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத்தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, 
அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான். 
ஏசாயா 6:7

Serap.. என்றால் to burn என்று அர்த்தம். 
சேராபீன்கள் நெருப்பு தழலால் ஏசாயா உதடுகளை தொடுகிறார்கள். 

Repentance is usually painful..

கர்த்தர் புடமிடுகிறார்.. 
புடமிட்டு ஊழியத்திற்கு ஆயத்தப்படுத்துகிறார்.. 

@ உருக்கி புடமிடுகிறார்.. 
எரேமி 9.7

 @ புடமிடுகிறவனுடைய அக்கினி.. 
மல்கி 3.2

@ அவர் உட்கார்ந்து புடமிடுகிறார்.. கிறிஸ்துவின் பொறுமை..
மல்கி 3.3

@ அக்கினிக்குட்படப்பண்ணி புடமிடுகிறார்.. 
சகரி 13.9

@ புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாக போகிறதில்லை. 
எரேமி 6.29

@ புடமிடும் ஸ்தலம்.. 
யோபு 28.1

@ மூன்று அவயவங்கள் தொடப்பட்டு சுத்தமாக்கப்படுகிறது

@ ஏசாயாவின் உதடுகள் 
ஏசாயா 6.7
@ பவுலின் கண்களில் இருந்து செதில்கள் விழுந்தது. 
அப் 9.18
@ விசுவாசிகளின்  இருதயத்தில் ஆவியின்படி விருத்தசேதனம்.. 
ரோம 2.29

நொறுங்குண்ட இருதயம்.. 

 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். 
ஏசாயா 66:2

 *Isaiah was touched..* 


5. _ஏசாயா அர்ப்பணித்தான்_ .. 
 *The submission..* 

பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் என்றேன். 
ஏசாயா 6:8

 _Now Isaiah was available_ .. 

 _இப்பொழுது ஏசாயா யூதாவுக்கு பிரசங்கிக்க ஆயத்தமாகிறான்_ . 

Lord's work is Holy.. 
Lord's workers are Holy.. 

 _சவுல் அர்ப்பணம்.._ 
அவன் நடுங்கித் திகைத்து; ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்; நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். 
அப்போஸ்தலர் 9:6

 _கிறிஸ்துவே நமக்கு அர்ப்பணத்தின் முன்னோடி.._ 

 அப்பொழுது நான். இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது, 
சங்கீதம் 40:7

அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். 
எபிரேயர் 10:7

 *Isaiah surrendered..* 


 *மீதியான துணிக்கை* .. 

ஏசாயா 66 அதிகாரங்களும் வேத புத்தகத்தின் 66 புத்தகங்களும் ஒப்புமைபடுத்தி சிந்திக்கலாம். 

அவ்வாறு சிந்தித்தால் ஏசாயா 6 ம் அதிகாரம் யோசுவா புத்தகத்திற்கு ஒத்திருக்கிறது.. 

யோசுவா புத்தகம் இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதியை கடந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் சுதந்தரிப்பதை சித்திரிக்கிறது. 

இஸ்ரவேல் ஜனங்கள் கில்காலில் இருந்து எரிகோவை பார்க்கிறார்கள். 

ஜெயிக்க முடியாது என்று சிந்திக்கிற அளவுக்கு பெரிய பட்டணம். 

ஆனால் யோசுவா ஜனங்களை ஆயத்தம் செய்கிறான். 

அது தான் சிந்திக்க வேண்டிய சத்தியம். 

ஆயத்தங்கள்.. 
Preparations..

யோசுவா 5 ம் அதிகாரம்.. 

1. விருத்தசேதனம் 
2. பஸ்கா 
3. தேசத்தின் தானியம் 
4. மன்னா ஒழிந்தது. 

 _ஆயத்தமானபின்பு கண்களை ஏறெடுத்து பார்க்கிறான் யோசுவா._ . 

பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார். உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது. யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார். அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான். அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார். யோசுவா அப்படியே செய்தான். 
யோசுவா 5:13-15

சேனைகளின் அதிபதி நம்மோடு இருக்கிறார்.. 
நம்முடைய ஆயத்தத்திற்கு பின்பு.. 

ஒரு ஊழியனின் முழுமையான அர்ப்பணம்.. 
நம்மையும் அர்ப்பணிப்போம்..

What is real submission?

The key word we use is *"SUBMIT".*

- submitting to your will Lord
- I submit all my way to you dear Lord
- I submit everything unto your Almighty hands Lord

And goes on with cultural and denominational variations..! 😅

These phrases are so pleasing and tickle the ear at all the right spots that we too are guilty of such prayers than not. Maybe, we do it out of reverence rather than out of practice.

The point is, when man says that he submits, he indirectly declares that he possess something that is out of the reach of the Almighty God. And man graciously extends his courtesy to the Almighty God and offers whatever that was out of reach and which was beyond the limits of the limitless God. Unknowingly, he revels in such gracious offerings and submissions because it places this creature above the Creator!

No one except for the man Jesus possessed a will that needs to be submitted. And submitted - He did - by which all the elect were redeemed.

A believer's  will is already under submission. 
His failure to understand itself is a valid proof as per the Scriptures!
ஒரு விசுவாசியின் தேவ சித்தம் அர்ப்பணிப்போடு இணைந்ததாகும்..
தனியாக அர்ப்பணம் என்பது தேவை இல்லை..
ஆனால் அனேக வேளைகளில் விசுவாசிகள் அனுதின வாழ்க்கையில் தேவசித்தம் நிறைவேற தோல்வி அடைகிறோம்.. வேத வசனத்திற்கு கீழ்ப்படிவதே அர்ப்பணம் என்பதை மறந்து விடுகிறோம்..

courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628003
shalomsteward1@gmail.com
Whatsapp: +919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA