ஞானமாய் உங்கள் சிநேகிதர்களை தேர்வு செய்யுங்கள்.. _CHOOSE YOUR FRIENDS WISELY_



 *ஞானமாய் உங்கள் சிநேகிதர்களை தேர்வு செய்யுங்கள்* .. 

 _CHOOSE YOUR FRIENDS WISELY_ 


 _நான்கு விஷயங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாது._
 
1. _காலம் - time_ 
2. _பணம் - money_ 
3. _அந்தஸ்து - status_ 
4. _சிநேகிதம் - friendship_ 
 
@ நம்முடைய ஜீவியத்தில் நாம் வைத்திருக்கிற சகவாசம் ( சிநேகிதம் ) நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகப்பெரிய செல்வாக்கு வகிக்கும். 

@ தெய்வ மக்களோடு நாம் வைத்திருக்கிற உறவு நம்மை வெற்றி ஜீவியம் செய்ய விரைவுபடுத்துகிறது. 

@ அதே சமயம் தெய்வ பயமில்லாத மக்களோடு வைத்திருக்கிற உறவு நம்மை தோல்விக்கு நேராக கீழே இழுக்கிறது. 

@ ஆகவே தான் வேதம் சிநேகிதர்களை முக்கியத்துவப்படுத்துகிறது. 

@ வேதம் சில விஷயங்களில் உலகத்தை விட்டு பிரிந்திருக்க ஆலோசனை கூறுகிறது.
 
@ ஏனென்றால் பொல்லாத உறவுகள் நம்மைக் களங்கப்படுத்தி விடும். 
2 கொரி 6.15 ல் அப் பவுல் இவ்வாறு கூறுகிறார். 

கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? 
2 கொரிந்தியர் 6:15

@ இங்கே ஊழியம் சம்பத்தப்பட்ட விஷயத்தை பவுல் குறிப்பிடவில்லை. 

@ ஏனென்றால் இயேசு கிறிஸ்து பாவிகள் மத்தியில் ஊழியம் செய்தார். 

@ நாமும் ஊழிய பாதையில் அநேக பாவியான மக்களோடு உறவாடி கலந்து கொள்ளுகிறோம். 
அவர்களுக்காக ஜெபிக்கிறோம். அவர்களுடன் பேசுகிறோம். 

@ ஆனால் இங்கே நாம் தியானிப்பது நாம் எந்த அடிப்படையில் நம் நண்பர்களை தேர்வு செய்கிறோம். 

@ நீங்கள் ஆண்டவருடைய வழிகளில் நடந்து கொள்ள விரும்பினால் பிசாசின் வழிகளில் நடக்கிற நண்பர்களை தேர்வு செய்யக்கூடாது.

 @ காரணம் அவர்கள் தேவனில்லாத காரியத்தை பேசுகிறார்கள். அவைகளில் நடக்கிறார்கள். 

@ தேவனுக்கு தங்கள் வாழ்க்கையில் எந்த முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

 @ அவர்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் தோல்வியை கொண்டு வருவார்கள். 

@ அவர்களுடைய தோல்விகளை நீங்கள் இளைப்பாறுதலாக்கும் போது நீங்கள் உங்களை சோதனைக்குள் கொண்டு போகிறீர்கள். 

@ சீக்கிரமாக நீங்கள் பாவத்தில் பழகிவிடுவீர்கள். 

@ பாவம் உங்களில் கிரியை செய்யவும் நீங்கள் அதை எதிர்ப்பதில் தாமதிக்கவும் பழகிவிடுவீர்கள். 

@ இப்பொழுதோ அல்லது சற்று பின்போ அதில் விழுந்தும் விடுவீர்கள். 

@ ஆகவே உங்கள் நண்பர்களையும் விசேஷமாக உங்கள் வாழ்க்கை துணையையும் தேர்வு செய்யுங்கள். 

@ இன்றைக்கு ஒரு நல்ல சிநேகிதரை அறிமுகம் செய்கிறேன்.

@ இது வரை தேர்வு செய்யாதவர்கள் தேர்வு செய்யுங்கள். 

@ தேர்வு செய்தவர்கள் அவரை இன்னும் அதிகமாய் அறிந்து கொள்ளுங்கள். 

 *அவர் தான் நல்ல நண்பன் இயேசு..* 

 _I HAVE FOUND A FRIEND IN JESUS.._ பாடல்
 வரிகள் அருமையானது.. 


377. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண சிநேகிதருண்டே!


1. பாவ சஞ்சலத்தை நீக்க 
     பிராண சிநேகிதருண்டே!
  பாவ பாரம் தீர்ந்து போக 
     மீட்பர் பாதம் தஞ்சமே
  சால துக்க துன்பத்தாலே 
     நெஞ்சம் நொந்து சோருங்கால்,
  துன்பம் இன்பமாக மாறும் 
     ஊக்கமான ஜெபத்தால்.

2. கஷ்ட நஷ்டமுண்டானாலும் 
     இயேசுவண்டை சேருவோம்;
  மோசம் நாசம் நேரிட்டாலும், 
     ஜெப தூபம் காட்டுவோம்
  நீக்குவாரே நெஞ்சின் நோவை, 
     பெலவீனம் தாங்குவார்
  நீக்குவாரே மனச் சோர்வை 
     தீய குணம் மாற்றுவார்.

3. பெலவீனமான போதும் 
     கிருபாசனம் உண்டே!
  பந்து, ஜனம் சாகும்போதும் 
     புகலிடம் இயேசுவே
  ஒப்பில்லாத பிராண நேசா! 
     உம்மை நம்பி நேசிப்போம்
  அளவற்ற அருள் நாதா! 
     நேச இயேசு தஞ்சமே.

4. துன்பம் நெருக்கம் சோதனை 
  உண்டோ? அதில் திடன்கொள்;ளூ
  ஜெபத்தால் கர்த்தாவைச் சேர 
     சுதந்திரம் ஈந்தாரே
  சால துக்கத்தில் தாங்குவார் 
     இயேசு-நண்பர் வேறில்லை
  இயேசு தஞ்சமாயிருந்து 
     ஆற்றித் தேற்றிக் கொள்வாரே.


 *அவருடைய சிநேகிதத்தை சற்று கவனியுங்கள்..* 

1. _சகோதர சிநேகத்தை விட மேலான சிநேகம் பாராட்டும் கிறிஸ்து_ .. 

சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு. 
நீதிமொழிகள் 18:24
 _அவர் தான் இயேசு கிறிஸ்து.._ 

2. _கவனமாக நம்மிடம் பேசுகிறார்.._ 

 பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு: ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம். 
நீதிமொழிகள் 12:18

3. _முகஸ்துதி பேசாத சிநேகிதன்.._ 

தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். 
நீதிமொழிகள் 28:23

4. _மெதுவான பிரதியுத்திரம் பேசும் கிறிஸ்து.._ 

 மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். 
நீதிமொழிகள் 15:1

5. _பொறுமையை கடைபிடிக்கும் கிறிஸ்து.._ 

 நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்: இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். 
நீதிமொழிகள் 25:15

6. _சத்திய உதடுகள் கொண்ட சிநேகிதன்_ .. 

சத்திய உதடுகள் என்றும் நிலைத்திருக்கும்: பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும் 
நீதிமொழிகள் 12:19

7. _குற்றத்தை பரப்பாமல் மூடும் சிநேகிதன்._ . 

 குற்றத்தை மூடுகிறவன் சிநேகித்ததை நாடுகிறான்: கேட்டதைச்சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான். 
நீதிமொழிகள் 17:9

8. _நம் வாழ்க்கையில் மிகப்பெரிய impact தாக்கம் உண்டு பண்ணும் சிநேகிதம்_ .. 

இரும்பை இரும்பு கருக்கிடும்: அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான். 
நீதிமொழிகள் 27:17

9. _நிதானமாக கையாளும் சிநேகிதம்.._ 

நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம், நிதானமாய் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். 
நீதிமொழிகள் 16:13

10. _பரிந்து பேசும்.. வழக்காடும் சிநேகிதன்.._ 

ஓரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறது போல, தேவனோடே மனுஷருக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும். 
யோபு 16:21

11. _ஜீவனையே கொடுக்கும் சிநேகிதன்.._ 

ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
யோவான் 15.13


தாவீது யோனத்தான் சிநேகிதம்..

அவன் சவுலோடே பேசி முடித்தபின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது. யோனத்தான் அவனைத் தன் உயிரைப் போலச் சிநேகித்தான். 
1 சாமுவேல் 18:1

யோனத்தான் தாவீதைத்தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். 
1 சாமுவேல் 18:3

யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும்கூடத் தாவீதுக்குக் கொடுத்தான். 
1 சாமுவேல் 18:4

ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்..

அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று. அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
யாக்கோபு 2.21


நம்முடைய சிநேகிதர் யார்?
 *சிந்திப்போம்* .. 

இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
யோவான் 15.15

 நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என்சிநேகிதராயிருப்பீர்கள்.
யோவான் 15.14

 _உங்களுடைய தேர்வு ஞானமாய் இருக்கட்டும்.._ 

courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA