_கசப்பும் தித்திப்பும்_ ஒரே ஊற்றுக்கண்ணில்




 _கசப்பும் தித்திப்பும்_ .. 


 *Verse for meditation..* 

 ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?
யாக்கோபு 3.12

 _சுரக்க முடியாதே !!!_

.. _so can no fountain both yield salt water and fresh._ 
James 3:12


1. *கசப்பான ஜீவன்..* 

சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள். அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.
யாத்திராகமம் 1.14

 *கிறிஸ்து எனக்கு ஜீவன்..* 

கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
பிலிப்பியர் 1.21

------------------------------------------------------------

2. *கசப்பான தண்ணீர்..* 

அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது. அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது.
யாத்திராகமம் 15.23

 *ஜீவ தண்ணீர்..* 

வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
யோவான் 7.38

--------------------------------------------------------------

3. *கசப்பான பழங்கள்* .. 

அவர்களுடைய திராட்சச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் தாழ்ந்த ஜாதியாயிருக்கிறது, அவைகளின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது.
உபாகமம் 32.32

 *ஆவியின் கனி,* 

சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.
எபேசியர் 5.9

--------------------------------------------------------------

4. *கசப்பான வாழ்க்கை..

அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள். சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
ரூத் 1.20

 *சுகவாழ்வு* ..

அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும், கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.
ஏசாயா 58.8

------------------------------------------------------------

5. *கசப்பான மரணம்..* 

பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான். ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான்.
1 சாமுவேல் 15.32

 *நேச மரணம்..* 

நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும், நேசம் மரணத்தைப்போல் வலிது, நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது, அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது.
உன்னதப்பாட்டு 8.6

------------------------------------------------------------/

6. *கசப்பான ஆத்துமா.* . 

நான் என்னசொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார், அந்தப் பிரகாரமே செய்தார், என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன்.
ஏசாயா 38.15

 *மேன்மைபாராட்டும் ஆத்துமா* .

கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும், சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.
சங்கீதம் 34.2

-------------------------------------------------------------

7. *கசப்பான தீர்ப்புகள்..* 

மகா கசப்பான தீர்ப்புகளை என் பேரில் எழுதுகிறீர். என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப் பண்ணுகிறீர்.
யோபு 13.26

 *நீதிக்கும் ஏதுவான தீர்ப்பு..

ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரேநீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கும் ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
ரோமர் 5.28

----------------------------------------

8. *கசப்பான இருதயம்* .. 

இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்: அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.
நீதிமொழிகள் 14.10

 *களிகூரும் இருதயம்* .. 

 அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.
சங்கீதம் 33.21

----------------------------------------

9. *கசப்பான நடக்கை..* 

உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணினது, இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.
எரேமியா 4.18

 *பரிசுத்த நடக்கை..* 

இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்கியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!
2 பேதுரு 3.11

----------------------------------------

10. *கசப்பான பாவம்..* 

நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
அப்போஸ்தலர் 8.23

 *விடுதலையான பாவம்.*

 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே
ரோமர் 8.2

----------------------------------------

11. *கசப்பான வேர்..* 

ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
எபிரேயர் 12.15

 *பரிசுத்தமான வேர்..

மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும், வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.
ரோமர் 11.16

----------------------------------------

12. *கசப்பான மனம்..* 

இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளந்திரியங்களிலே குத்துண்டேன்.
சங்கீதம் 73.21

 *புதிதாகும் மனம்..* 

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
ரோமர் 12.2

----------------------------------------

13. *கசப்பான வைராக்கியம்* .. 

உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள். சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
யாக்கோபு 3.14

 *ஆவியில் வைராக்கியம்* .. 

 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும், தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.
அப்போஸ்தலர் 18.5


====================

 *கசப்பான ஆண்டவருடைய அனுபவம்* .. 

 கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள், அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.
மத்தேயு 27.34

 *கசப்பான பஸ்கா..* 

அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவீர்கள்.
யாத்திராகமம் 12.8

====================

 *Closing thought..* 

 *தித்திப்பு* .. 

 _கர்த்தருடைய வார்த்தைகள்_ .. 

 மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார், அப்பொழுது நான் அதைப் புசித்தேன், அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.
எசேக்கியேல் 3.3


courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA