EXODUS டிவி அருளுரை துளிகள் _யாருக்காக கல்லறை ( ஆலய ) மணி ஒலிக்கிறது?_. Post mortem report :* *SIN*
_யாருக்காக கல்லறை ( ஆலய ) மணி ஒலிக்கிறது?_
ஒரு நாள் மில்லர்புரம் ஆலயத்தில் அடக்க நிகழ்வுக்கு போயிருந்தேன்.
அங்கே ஒரு சவப்பெட்டி முழுவதும் மலர்களால் நிறைந்திருக்கிறது.
அதற்கு மேல் மலர் வளையம் வைப்பதற்கும் இடமில்லை.
ஆலய மணி ஒலிக்கிறது.
நிசப்தம் எங்கும் நிலவுகிறது.
தாயை இழந்த சிறு உள்ளங்களின் மெல்லிய அழுகை அங்கிருந்த நிசப்தத்தை கலைக்கிறது.
அநேகர் இந்த சரீர மரணத்திற்கான காரணம் அறிந்து அதை தாங்கள் எப்படி தவிர்க்கலாம்? என்று பேசிக்கொண்டனர்.. ஆனால் *ஆவிக்குரிய காரணம்* அறியாமல் கூடி இருக்கிறார்கள்.
எருசலேம் என் ஆலயம்,
ஆசித்த வீடதே
நான் அதைக் கண்டு பாக்கியம்
அடையவேண்டுமே.
என்ற பாடல் பாடி முடிந்தது.
போதகர் இறந்த தாயின் மேன்மையைப் பற்றி பேசினார்.
*இதில் கவனித்த ஒரு விஷயம் தான் இன்றைய சிந்தனை.*
அங்கே இந்த *மரணத்திற்கான காரணம் பாவம் * என்பதை போதகர் தெரிவிக்கவில்லை.
12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
ரோமர் 5:12
13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது, நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.
ரோமர் 5:13
14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது, அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
ரோமர் 5:14
15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
ரோமர் 5:15
14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
எபிரேயர் 2:14
15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
எபிரேயர் 2:15
16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல, அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது, கிருபைவரமோ அநேககுற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
ரோமர் 5:16
17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிகநிச்சயமாமே.
ரோமர் 5:17
18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரேநீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கும் ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
ரோமர் 5:18
19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
ரோமர் 5:19
27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
எபிரேயர் 9:27
28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
எபிரேயர் 9:28
*Post mortem report :*
*SIN*
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்,
யோவான் 11.25
*Dear readers..*
For you, who are still alive, there is yet time for a response to Jesus.
But don't delay.
Or you will be in the same situation.
அன்பான வாசகர்களே!!!
ஜீவனோடிருக்கும் உங்களுக்கு இன்று சந்தர்ப்பம் இயேசு கிறிஸ்து தருகிறார்.
அவரை விசுவாசிக்க.
தாமதம் வேண்டாம்.
இல்லையேல் இதே நெருக்கடி வரலாம்.
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி*
shalomjjj@gmail.com
whatsapp 91 9965050301
Comments
Post a Comment