தெளிக்கப்பட்ட இரத்தம். SPRINKLED BLOOD



 _TABLE REMEMBRANCE THOUGHT_ 

 _மேஜை நினைவு கூறுதலின் தியானம்.._ 


            *SPRINKLED BLOOD* 

               **தெளிக்கப்பட்ட* 
                        *இரத்தம்* ..* 

தியான வசனங்கள்..

 அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டைபண்ணப்படவில்லை. 
எபிரேயர் 9:18

 எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து: 
எபிரேயர் 9:19

தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான். 
எபிரேயர் 9:20

இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமூட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான். 
எபிரேயர் 9:21

 நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. 
எபிரேயர் 9:22


 *இரத்தத்தின் பொதுவான குணங்கள்..* 

1. _இரத்தத்தில் ஜீவன் இருக்கிறது._ . 

 மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம். 
ஆதியாகமம் 9:4

2. _இரத்தம் பேசுகிறது.._ 

 அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. 
ஆதியாகமம் 4:10
எபி 12.24

3. _இரத்தம் பாவ நிவிர்த்தி செய்கிறது.._ 

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது, நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்,; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. 
லேவியராகமம் 17:11

 *இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் தனித்துவ குணங்கள்* .. 

1. _குற்றமில்லாத இரத்தம்.._ 
( *innocent blood* )

 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். 
மத்தேயு 27:4

2. _சிந்தப்பட்ட இரத்தம்.._ 
( *shed blood* )

 போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். 
லூக்கா 22:20

3. _விலையேறப்பெற்ற இரத்தம்_ ..
( *precious blood* ) 

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. 
1 பேதுரு 1:19

4. _தெளிக்கப்பட்ட இரத்தம்_ ..
( *sprinkled blood* )

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


 _தெளிக்கப்பட்ட கிறிஸ்துவின் தூய இரத்தம் இரட்சிப்பின் அனைத்து பகுதிகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது_ .. 


1. _வீட்டு வாசல், நிலைக்கால்கள், மேற்சட்டம் இரத்தம் தெளிக்கப்படுதல்_ .. 

 _விசுவாசிகளின் பாதுகாப்பு, மீட்பு, விடுதலை நிழலாக காண்பிக்கிறது.._ 

                *REDEMPTION* 

                        _மீட்பு_ .. 

 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் *தெளித்து* , 
யாத்திராகமம் 12:7

நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும். அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன். நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும். 
யாத்திராகமம் 12:13

ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்துக் கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை *வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும்* *தெளியுங்கள்* . விடியற்காலம்வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். 
யாத்திராகமம் 12:22


2. _பலிபீடத்தின் மேல் இரத்தம் தெளிக்கப்படுதல்_ .. 

 _பதிலாள் மரணத்தை நிழலாக காண்பிக்கிறது_ .. 

              *PROPITIATION*

           _பதிலாள் மரணம்.._ 

  மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது, நான் அதை உங்களுக்குப் *பலிபீடத்தின்மேல்* உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்,; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. 
லேவியராகமம் 17:11


3. _கிருபாசனத்தின் மேல் இரத்தம் தெளிக்கப்படுதல்_ .. 

 _தேவனோடு நெருங்கி சேரும் சிலாக்யத்தை நிழலாக காண்பிக்கிறது_ .. 

        *ACCESS TO THE LORD* 

       _தேவனோடு நெருங்கும் சிலாக்கியம்.._ 

 பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்புறமாக நின்று, தன் விரலினால் *கிருபாசனத்தின்மேல் தெளித்து,* அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன். 
லேவியராகமம் 16:14

 பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் *கிருபாசனத்தின்மேலும்* அதற்கு முன்பாகவும் தெளித்து, 
லேவியராகமம் 16:15

 இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன். 
லேவியராகமம் 16:16


4. _வலது காதின் மடல், வலது கை, கால், பெருவிரல் மேல் இரத்தம் தெளிக்கப்படுதல்_ .. 

 _ஆராதனை செய்கிறவர்களுடைய தனிப்பட்ட ஆசாரியத்துவம், சுத்திகரிப்பை நிழலாக காண்பிக்கிறது_ .. 

    *PRIESTHOOD & CLEANSING* 

         _ஆசாரியத்துவமும் சுத்திகரித்தலும்.._ 

 பின்பு அது கொல்லப்பட்டது, மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய *வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான்* . 
லேவியராகமம் 8:23

பின்பு ஆரோனுடைய குமாரரையும் அழைத்தான்,; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, 
லேவியராகமம் 8:24


5. _சுகந்த பீடத்து கொம்புகள் மேல் இரத்தம் தெளிக்கப்படுதல்_ .. 

 _ஆராதனை செய்கிறவர்கள் மீண்டும் தங்களை நிதானித்து ஒப்புரவாகுதலுக்கு நிழலாக காண்பிக்கிறது_ .. 

      *RESTORATION WITH LORD* 

         _தேவனோடு மீண்டும் உறவை மீட்குதல்.._ 

 பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் *சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி* , காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, 
லேவியராகமம் 4:7

 *ஆராதனை சிந்தனை..* 

 _துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாக_ 

 ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், 
அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், 
 தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், 
 *துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும்* , சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். 
எபிரேயர் 10:19-22


133. விலையேறப் பெற்ற இரத்தமே, சிலுவையில் கண்டேன்;

1. விலையேறப் பெற்ற இரத்தமே,
     சிலுவையில் கண்டேன்;
  *அதினால் என் மீட்புண்டாயிற்றே,* 
     என்றெண்ணி நம்பினேன்.

           பல்லவி

  இரத்தம்! திவ்ய இரத்தமே!
     இயேசு சிந்தினார்
  சிலுவையில் பாடு
     பட்டோராய்
  மாண்டாரே எனக்காய்.

2. லட்சாதி லட்சம் நன்மையே
     தேவன்பினாலுண்டாம்;
  *எல்லாத்திலும் சிறந்ததே* 
     என் இயேசு இரத்தமாம்.
                      - இரத்தம்

3. திரளான பாவஞ் செய்த நான்
     பிசாசின் அடிமை
  *திரு இரத்தத்தால்* என் இயேசு தாம்
     மீட்டுக்கொண்டார் என்னை
                      - இரத்தம்

4. பெருவெள்ளம் போன்ற இரத்தமே
     என் பாவம் நீக்கிற்று,
  கருத்தாய்க் கண்டேனே
     *நித்தமே துதி உண்டாகவே.* 
                      - இரத்தம்

5. பரலோகத்தில் இப்பாட்டையே
     என்றைக்கும் பாடுவோம்;
  சந்நிதானத்தில் கெம்பீரமாய்
     *இயேசுவைப் ( இரத்தத்தை) போற்றுவோம்.* 
                      - இரத்தம்

https://youtu.be/GqAxY5jMxdA?si=_J0C8GNRpDEcD2lK

courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA