லூக்கா சுவிசேஷத்தில் விசேஷித்தவைகள் இரண்டு.. Glimpses of Luke Gospel
வேதத்தில் மொத்தம் 5 சுவிசேஷங்கள்..
நான்கு சுவிசேஷங்கள் இயேசுகிறிஸ்துவின் பூமியில் நிறைவேற்றின ஊழியத்தை குறித்து எழுதப்பட்டிருக்கிறது..
ஐந்தாவது சுவிசேஷம் இயேசுகிறிஸ்துவின் பரலோகத்தில் நிறைவேற்றிக்கொண்டிருக்கிற ஊழியத்தை குறித்து எழுதப்பட்டிருக்கிறது..
நான்கு சுவிசேஷங்கள்
1. மத்தேயு..Publican
இயேசு கிறிஸ்துவை ராஜாவாக வர்ணிக்கிறார்..
BEHOLD THY KING..
சிங்கம்..
சீயோன்குமாரத்தியே, மிகவும் களிகூரு. எருசலேம்குமாரத்தியே, கெம்பீரி. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.
சகரியா 9:9
இவர் ராஜா..ஆகவே மத்தேயு இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு ராஜ வம்சத்தை அடிப்படையாக வைத்து எழுதுகிறார்..
மத் 1.17
2. மாற்கு..Roman..
இயேசு கிறிஸ்துவை ஊழியனாக
( தாசன் ) வர்ணிக்கிறார்..
BEHOLD MY SERVANT
காளை ..
இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே, என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன், அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
ஏசாயா 42:1
இவர் அடிமை.. ஆகவே மாற்கு அடிமைக்கு வம்சம் இல்லை என்பதை காண்பிக்க இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு எழுதுவதை தவிர்த்தார்..
மாற்கு 1.1
3. லூக்கா..Greek
இயேசு கிறிஸ்துவை மனிதனாக
( புருஷன்) வர்ணிக்கிறார்..
BEHOLD THE MAN
மனுஷன்..
அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும். அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.
சகரியா 6:12
இவர் மனிதன்.. ஆகவே லூக்கா இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு மனுஷன் அடிப்படையில் ஆதாமுக்கு நேராக கொண்டு போகிறார்.. எழுதுகிறார்
லூக்கா 3.38
4. யோவான்.. Apostle
இயேசு கிறிஸ்துவை தேவனாக
( வார்த்தை ) வர்ணிக்கிறார்..
BEHOLD YOUR GOD
கழுகு ..
சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு, எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு.
ஏசாயா 40:9
இவர் தேவன்.. ஆகவே யோவான் தேவன் வம்சத்தை யாரால் சொல்லி முடியும் என்பதை நிரூபிக்க வரலாறு எழுதாமல் விட்டு விடுகிறார்..
ஐந்தவது சுவிசேஷம் எபிரெயர்க்கு எழுதின நிருபம்..
இயேசு கிறிஸ்துவை நித்திய பிரதான ஆசாரியராக
( மெல்கி செதெக் ) வர்ணிக்கிறார்..
BEHOLD YOUR ETERNAL PRIEST..
இன்றைக்கு லூக்கா சுவிஷேச நூல் பற்றி தியானிப்போம்..
லூக்கா சுவிசேஷம் தேவாலயத்தில் ஆரம்பமாகி தேவாலயத்தில் நிறைவு செய்யப்படுகிறது..
ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.
லூக்கா 1:9
நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
லூக்கா 24:53
லூக்கா சுவிசேஷத்தில் விசேஷித்தவைகள் இரண்டு?
1. இரண்டு படவுகள்..
லூக்கா 5.1-11
அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலைசிக்கொண்டிருந்தார்கள்.
லூக்கா 5:2
2. இரண்டு மீன்கள்
லூக்கா 9.12-17
அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங் கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள்.
லூக்கா 9:13
3. இரண்டு பணம்
லூக்கா 10.29-37
மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
லூக்கா 10:35
4. இரண்டு காசு
லூக்கா 12.6
இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை.
லூக்கா 12:6
லூக்கா 21.2
ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:
லூக்கா 21:2
5. இரண்டு குமாரர்கள்.
லூக்கா 15.11-32
பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.
லூக்கா 15:11
6. இரண்டு மனுஷர்.
லூக்கா 18.10-14
இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
லூக்கா 18:10
7. இரண்டு குற்றவாளிகள்.
லூக்கா 23.32
குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
லூக்கா 23:32
8. இரண்டு எம்மாவு சீஷர்கள்.
லூக்கா 24.13
அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
லூக்கா 24:13
9. பிரகாசமுள்ள இரண்டு பேர்.
லூக்கா 24.1-6
அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள். அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி: நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
லூக்கா 24:4-5
10. ஐசுரியவான் - லாசரு
லூக்கா 16
11. பழைய ரசம் - புதிய ரசம்
லூக்கா 5.36-38
12. தேவன் - உலக பொருள்
லூக்கா 16.13
லூக்கா... தொடரும்
courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp 91 9965050301
Comments
Post a Comment