சொல்லியும் செய்யாதவர்களா நீங்கள்? நீங்கள் ஒரு பொய்யர்..
சொல்லியும் செய்யாதவர்களா நீங்கள்?
..for they say, and do not. Are you?
Matthew 23:3
ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள், அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள், ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
மத்தேயு 23:3
You are a liar..
நீங்கள் ஒரு பொய்யர்..
1. Love..அன்பு
If a man say, I love God, and hateth his brother, He is a liar: for He that loveth not his brother whom He hath seen, how can He love God whom He hath not seen?
1 John 4:20
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
1 யோவான் 4:20
2. Light..ஒளி
He that saith He is in the light, and hateth his brother, is in darkness even until now.
1 John 2:9
ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
1 யோவான் 2:9
3. Commandments.. கற்பனைகள்
He that saith, I know him, and keepeth not his commandments, is a liar, and the truth is not in him.
1 John 2:4
அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
1 யோவான் 2:4
4.Fellowship.. ஐக்கியம்..
If we say that we have fellowship with him, and walk in darkness, we lie, and do not the truth:
1 John 1:6
நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.
1 யோவான் 1:6
5. Needed to all..
எல்லோருக்கும் தேவையானது..
And one of you say unto them, Depart in peace, be ye warmed and filled; notwithstanding ye give them not those things which are needful to the body; what doth it profit?
James 2:16
உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?
யாக்கோபு 2:16
அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.
யாக்கோபு 2:17
6. Works..
கிரியைகள்..
What doth it profit, my brethren, though a man say He hath faith, and have not works? can faith save him?
James 2:14
என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
யாக்கோபு 2:14
7. Wise..ஞானம்..
Professing themselves to be wise, they became fools,
Romans 1:22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
ரோமர் 1:22
8. Say but do not..
சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்..
All therefore whatsoever they bid you observe, that observe and do; but do not ye after their works: for they say, and do not.
Matthew 23:3
ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள், அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள், ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
மத்தேயு 23:3
Think a wise..
ஒருநிமிடம் சிந்தியுங்கள் ..
God is not a man, that He should lie; neither the son of man, that He should repent: hath He said, and shall He not do it? or hath He spoken, and shall He not make it good?
Numbers 23:19
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
எண்ணாகமம் 23:19
Job's declaration..
யோபுவின் பிரகடனம்..
My words shall be of the uprightness of my heart: and my lips shall utter knowledge clearly.
Job 33:3
என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும். நான் அறிந்ததை உன் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.
யோபு 33:3
courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301
Comments
Post a Comment