EXODUS TV.. அருளுரை துளிகள்...யூதாஸ் தவிர்த்த 7 தருணங்கள்..OUR GOD IS GOD OF OPPORTUNITIES.. அனுக்கிரகம்

Exodus TV.. அருளுரை துளிகள் 

https://youtu.be/1QHYi8I-rTM?si=pS6GwlDc1JnkcFwn



MORNING GRACE
அதிகாலை கிருபை..

தேவன் சந்தர்ப்பங்களின் தேவன்..
OUR GOD IS GOD OF OPPORTUNITIES..
OUR GOD IS GOD OF FAVOUR
தேவன் அநுக்கிரகத்தின் தேவன் 

அநுக்கிரகம் என்பது ஏற்ற சமயத்தில் கர்த்தர் அருளும் தருணம்..
TIME OF MY FAVOUR.

அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.
2 கொரிந்தியர் 6.2
For he says, “In the time of my favor I heard you, and in the day of salvation I helped you.” I tell you, now is the time of God's favor, now is the day of salvation.

அநேகர் தேவன் நமக்கு தரும் தருணங்களை தவற விடுகிறார்கள்..

1. அநுக்கிரகம் என்பது ஒரு உடன்படிக்கை..

 அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்.
சகரியா 11.10

2. அநுக்கிரகம் என்பது தேவன் மட்டுமே அருளும் ஒரு தருணம்.. மனிதர் அநுக்கிரகம் செய்ய முடியாது 

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு. ஆகையால் உமக்குக் கொண்டு வரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான். அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.
ஆதியாகமம் 33.11

3. அநுக்கிரகம் என்பது ஆசீர்வாதம்

நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன், அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும்.
லேவியராகமம் 25.21

4. தேவ சித்தத்தின் குழந்தை என்பதும் தேவ அநுக்கிரகம்..

போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினாள். அவள் அவனுக்கு மனைவியானாள். அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.
ரூத் 4.13

5. அநுக்கிரகம் என்பது தேவனுடைய அதிகாரம்..

 தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.
பிரசங்கி 5.19

6. அநுக்கிரகம் என்பது கிருபையுள்ள வசனம் 

அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டு தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள். அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.
அப்போஸ்தலர் 14.3

ஆனால் நாம் தேவ அநுக்கிரகத்தை நிக்கிரகம் செய்கிறோம்?

கொலையுண்கிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன். நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஓன்றிற்கு நிக்கிரகம் என்றும் பேரிட்டு மந்தையை மேய்த்து,
சகரியா 11.7


@ யூதாஸ் அநேக சந்தர்ப்பங்களை
      ( அநுக்கிரகம் ) இயேசு கிறிஸ்துவிடம் பெற்றான்..

@ ஆனால் அந்த சந்தர்ப்பங்களை             
   ( அநுக்கிரகம் )  பயன்படுத்தவில்லை..


1. இயேசு கிறிஸ்து தன் மன பாரத்தை முதலாவது பின்வாங்கும் விசுவாசிகளிடம் பகிர்ந்து கொள்ளுகிறார்..

அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 
மத்தேயு 26:21

2. பின்வாங்கும் விசுவாசிகள் அவரோடு பந்தி இருப்பவர்களே என்பதை சுட்டிக்காட்டுகிறார்..

அவர் பிரதியுத்தரமாக: என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். 
மத்தேயு 26:23

3. பின்வாங்கும் விசுவாசிகள் உணர்வடையாததினால் சபை முழுவதையும் உணர்வடைய எச்சரிக்கிறார்..

 தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார். 
யோவான் 13:11

4. தொடர்ந்து உணர்வடையாததினால் கடினமாக அவன் பிறப்பைக்குறித்து வேதனை அடைகிறார்..

 மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார், ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ, அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். 
மத்தேயு 26:24

5. யூதாஸ் தான் தான் அவன் என்பதை அறிந்து கொள்ள இயேசு கிறிஸ்துவின் நேரடி வார்த்தை..

அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான், அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார். 
மத்தேயு 26:25

6. இறுதியாக வேதனையோடு இயேசு கிறிஸ்து உணர்வடையாத யூதாசை பின் மாற்றத்திற்கே அனுப்புகிறார்..

இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார். 
யோவான் 13:26-27

7. இறுதி தருணமாக இயேசு கிறிஸ்துவின் அன்பு.. சிநேகிதன் என்றே அழைக்கிறரர்..

இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். 
மத்தேயு 26:50

யூதாஸ் 7 தருணங்களையும் உதாசீனப்படுத்தி பின் மாற்றத்தின் எல்லைக்கு சென்றான்..

அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
மத்தேயு 27.5

தேவன் தரும் சந்தர்ப்பங்களை   ( அநுக்கிரகம் )
பயன் படுத்துவோம்..


அவர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி, அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனபடியினாலும்,
யோபு 34.26

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
எபிரேயர் 10.38

நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
எபிரேயர் 10.39

உணர்வடைவோம் இன்றே..

அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.
2 கொரிந்தியர் 6.2

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50 A  டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA