முதல் ஆதாம் 7 சாபங்களும் ... கடைசி ஆதாம் 7 சாப நிவிர்த்தியும் ..TABLE REMEMBRANCE THOUGHT




மேஜை நினைவு கூறுதல் தியானம் 
 *TABLE REMEMBRANCE THOUGHT* 

கிறிஸ்து வேறோருவரோடும் ஒப்பிட முடியாது..
ஆனால் வேதம் அவரை சில இடங்களில் ஒப்புமைப்படுத்துகிறது..

மெல்கிசெதேக்கு இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன். இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். 
எபிரேயர் 7:3

நாம் கிறிஸ்துவை வேறே வேத மனிதர்களோடு அல்லது சில நிகழ்வுகளோடு ஓப்பிடும் போது மிகவும் கவனத்துடன் இந்த விஷயங்களை கையாட வேண்டும்.

முதல் ஆதாம்... இரண்டாம் ஆதாம்..

ஆதாம்..vs பின்பு வந்தவர்..                         ( கிறிஸ்து)
 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது, அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
ரோமர் 5.14

முந்தின ஆதாம்..vs பிந்தின ஆதாம்..                                    ( கிறிஸ்து)
அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது. பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
1 கொரிந்தியர் 15.45

முந்தின மனுஷன்..vs இரண்டாம் மனுஷன்        ( கிறிஸ்து )
முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன். இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
1 கொரிந்தியர் 15.47


 *7 சாபங்கள் முதல் ஆதாம் மேல்..* 
( கீழ்ப்படியாமை)

 *7 சாபங்கள் இரண்டாம் ஆதாம் மேல்..* 
( கீழ்ப்படிதல்)

 *1. வேர்வை..* 

 _Sweat_ ..

 _முதல் ஆதாம்.._ 

நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் *வேர்வையால்* ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். 
ஆதியாகமம் 3:19

 _இரண்டாம் ஆதாம்.._ 

அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார் அவருடைய *வேர்வை* இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. 
லூக்கா 22:44

 *2. முள்..* 

 _Thorn_ .. 

 _முதல் ஆதாம்.._ 

அது உனக்கு *முள்ளும்* குருக்கும் முளைப்பிக்கும். வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். 
ஆதியாகமம் 3:18

 _இரண்டாம் ஆதாம்.._ 

போர்ச்சேவகர் *முள்ளுகளினால்* ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி: 
யோவான் 19:2

 *3. சாபம்..* 

 _Curse_ ..

 _முதல் ஆதாம்.._ 

பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததினாலே, பூமி உன் நிமித்தம் *சபிக்கப்பட்டிருக்கும்* . நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். 
ஆதியாகமம் 3:17

 _இரண்டாம் ஆதாம்.._ 

மரத்திலே தூக்கப்பட்ட எவனும் *சபிக்கப்பட்டவன்* என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். 
கலாத்தியர் 3:13

 *_4. வருத்தம்.._* 

 _Sorrow_ ..

 _முதல் ஆதாம்.._ 

பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் *வருத்தத்தோடே* அதின் பலனைப் புசிப்பாய். 
ஆதியாகமம் 3:17

 _இரண்டாம் ஆதாம்.._ 

வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் *துக்கத்துக்குச்* சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள். 
புலம்பல் 1:12



 *5. நசுக்குதல்..* 

 _Bruise_ ..

 _முதல் ஆதாம்.._ 

உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை *நசுக்குவாய்* என்றார். 
ஆதியாகமம் 3:15

 _இரண்டாம் ஆதாம்.._ 

 கர்த்தரோ அவரை *நொறுக்கச்சித்தமாகி* , அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார், அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். 
ஏசாயா 53:10

 *6. பட்டயம்..* 

 _Sword_ .. 

 _முதல் ஆதாம்.._ 

 அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி *பட்டயத்தையும்* வைத்தார். 
ஆதியாகமம் 3:24

 _இரண்டாம் ஆதாம்.._ 

 *பட்டயமே* , என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும். ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன். 
சகரியா 13:7



7. *மண்.. மரண தூள்* .. 

 _Dust_ ..

 _முதல் ஆதாம்.._ 

நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், *மண்ணுக்குத்* திரும்புவாய் என்றார். 
ஆதியாகமம் 3:19

 _இரண்டாம் ஆதாம்.._ 

என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது, என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது, என்னை *மரணத்தூளிலே* போடுகிறீர். 
சங்கீதம் 22:15


courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+91996505301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA